search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கன்னட சின்னத்திரை வைஷ்ணவி கவுடா தொடர்பான ஒரு 'டீப் பேக்' ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது.
    • பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப் ஆகியோரின் முகத்தை பயன்படுத்தி 'டீப் பேக்' ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    இந்தநிலையில், கன்னட சின்னத்திரை வைஷ்ணவி கவுடா தொடர்பான ஒரு 'டீப் பேக்' ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது. அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவரது புகைப்படங்களை மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.

     

    அவற்றைப் பார்த்த நடிகை வைஷ்ணவி கவுடா அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது கன்னட சின்னத்திரை நடிகைகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார்.
    • லாந்தர் திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியானது.

    'யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'லாந்தர்'.

    ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார்.

    கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

    லாந்தர் திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

    • சிறு வயதில் நான் மிகப்பெரிய வாசிப்பாளர் கிடையாது.
    • நான் மகளுக்காக ஒவ்வொரு நாளும் மதியம், இரவு என புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்

    பாலிவுட் நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 19 மாதத்தில் ரஹா என்ற பெண்குழந்தை உள்ளது. தனது செல்ல பெண் குழந்தை ரஹாவுக்காக ஒவ்வொரு நாளும் மூன்று புத்தகங்கள், சில நேரங்களில் நான்கு புத்தகங்கள் வாசிக்கிறேன். ஆனால் தனது குழந்தை பருவத்தில் புத்தம் படித்தது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆலியா பட் கூறுகையில் "சிறு வயதில் நான் மிகப்பெரிய வாசிப்பாளர் கிடையாது. பெரும்பலான நேரத்தை ஜன்னல் வழியாக வெளியே பார்த்து பகல் கனவு காண்பதில் செலவழித்தேன். நான் மகளுக்காக ஒவ்வொரு நாளும் மதியம், இரவு என புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

    ரஹா அவளுடைய புத்தகத்தை விரும்புகிறாள். தூங்கும்போது அவருடைய புத்தகங்களை கட்டிப்பிடித்துக் கொள்கிறாள். இதில் இருந்து அவள் புத்தகத்தை எவ்வளவு விரும்புகிறார் என்பது தெரிகிறது.

    இவ்வாறு ஆலியா பட் தெரிவித்துள்ளார்.

    அலியா பட் "The Adventures of Ed-a-Mamma: Ed Finds A Home" என்ற படத்துடன் கூடிய புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த பத்தகத்தை தனது மகளுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

    எனது சசோதரி மிப்பெரிய புத்தக வாசிப்பாளர். அதேவேளையில் நான் மிகப்பெரிய அளவில் புத்தக வாசிப்பாளர் கிடையாது. எனது சகோதரி நள்ளிரவு வரை ஹாரி பாட்டர் போன்ற புத்தகங்களை வாசிப்பார். எனது அம்மா மற்றும் சசோதரி ஆகியோர் படி, படி என புத்தகத்தை முகத்திற்கு நேராக கொண்டு திணிப்பார்கள்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இசைப்பாளருடன் இணைந்து ஹிப்பாப் தமிழா ஆதி வெளியிடுகிறார்.
    • 21-ந்தேதி வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆகிறது.

    69 எம்எம் ஃபிலிம் நிறுவனம் தயாரிப்பில் ராகுல் கபாலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "பயமறியா பிரம்மை". இந்த படத்தில் ஜேடி கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கிறார்.

    படம் நாளைமறுநாள் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் நாளை மாலை 6 மணிக்கு சாம்பல் நிற கனவுகள் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியிடப்படுகிறது. படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் மற்றும் நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்பாப் தமிழா ஆதி ஆகியோர் வெளியிடுகின்றனர்.

    இந்த படத்தில் குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கனேஷ், ஹிரிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெரோனிகா பாடல்களை எழுதியுள்ளார். இந்த படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆகியுள்ளார்.

    சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் டிரைலரை கடந்த 14-ந்தேதி விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கல்கி 2898 A.D. படத்தில் பைரவா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ்.
    • இது புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்ஷன் கதையாகும்.

    சென்னை:

    நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும் 'கல்கி 2898 A.D'

    கல்கி 2898 A.D. படத்தில் பைரவா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். பைரவா குறித்த புது போஸ்டர் மூலம் படக்குழு சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்தது.

    இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் கல்கி 2898 AD படம், பல மொழிகளில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. இது புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்ஷன் கதையாகும். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், கல்கி 2898 AD படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகை ஷோபனாவின் கதாபாத்திரத்தின் பெயருடன் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. தற்போது அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்தப் படம் வரும் 27-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிருத்திகா உதயநிதி இயக்கும் "காதலிக்க நேரமில்லை" படத்தில் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ளார்.
    • டாடா படத்தை போன்றே வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகும் என சொல்லப்படுகிறது.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயம் ரவி. இவர் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் "காதலிக்க நேரமில்லை" படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

    இந்த நிலையில், டாடா பட இயக்குநர் கணேஷ்பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

    டாடா படத்தை போன்றே வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகும் என சொல்லப்படுகிறது.

    கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த 'டாடா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லக்கி பாஸ்கர் வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
    • ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆனந்த் அரவிந்தக்‌ஷன், ஸ்வேதே மோகன் இப்பாடலை பாடியுள்ளனர்.

    இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

    சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    பிப்ரவரி 3ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. அந்த போஸ்டரில், நடிகர் துல்கர் சல்மான் ஒரு வங்கியின் நுழைவாயிலை நோக்கி நடந்து செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    தொடர்ந்து, இப்படத்தின் டீசர் வெளியானது. லக்கி பாஸ்கர் வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

    அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் "லக்கி பாஸ்கர்" .

    இந்நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடலான "கொல்லாமல் கொல்லாதே.." என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

    ஜி.வி.பிரகாஷ் இசையில் விக்னேஷ் ராமகிருஷ்ணா வரிகளில் ஆனந்த் அரவிந்தக்ஷன், ஸ்வேதே மோகன் இப்பாடலை பாடியுள்ளனர்.

    • 2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் வெளிவந்துள்ளது.
    • தற்பொழுது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார்.

    ஆர்.ஜே பாலாஜி 2013 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ் படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

    அதைத்தொடர்ந்து புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, போன்ற படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

    2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இந்தியில் வெளியான 'பதாய் ஹொ' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்து இருந்தார்.

    சில மாதங்களுக்கு முன் கோகுல் இயக்கத்தில் 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    தற்பொழுது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார். ஆனால் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படம் மூக்குத்தி அம்மன் படத்திற்கு தொடர்ச்சியாக இருக்காது எனவும். இப்படம் வேறு கதைக்களத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் ஆர் ஜே பாலாஜி முன்னணி கதாப்பாத்திரத்திலும் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு மாசாணி அம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.
    • கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

    சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக்க அறிமுகமாகினார்.

    தற்பொழுது அவர் விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.

    மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலைமை நிலவி வருகிறது. கீழ்த்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் டீசர் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
    • படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சீயான் விக்ரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    சென்னை:

    பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    தங்கலான் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில், தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சீயான் விக்ரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என அறிவித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நடிகர் டேனியல் கால்டகிரோனின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பிரபு மாஸ்டர் - ஏ.ஆர்.ஆர் காம்பினேஷன் அமையாதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது
    • Behindwoods தயாரிப்பில் அந்நிறுவனத்தின் CEO மனோஜ் NS இந்த படத்தை இயக்குகிறார்

    டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என இந்திய சினிமாவில் பன்முகத் தன்மையுடன் இயங்கி வரும் பிரபுதேவா, ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன் சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஏஆர் ரகுமானின் துள்ளலான இசைக்கு காலேஜ் ஸ்டூடென்ட்டாக நடித்த பிரபுதேவாவின் ஸ்டைலான நடன அசைவுகள் பாடல்களை பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடிக்கச் செய்தது.

    இந்த படத்துக்கு பிறகு பிரபு மாஸ்டர் - ஏஆர்ஆர் காம்பினேஷன் அமையாதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் Behindwoods தயாரிப்பில் அந்நிறுவனத்தின் CEO மனோஜ் NS இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், ரகுமானும் இணைந்துள்ளனர். ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.

    இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தின் பெயர் குறித்த அபேடேட்டுக்கு ரசிகர்கள் தவம் கிடந்த நிலையில் படத்துக்கு 'மூன் வாக்' என்று பெயரிட்டுள்ளதாக Behindwoods நிறுவனம் டைட்டில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் சிரியுங்கள், பாடுங்கள், உடன் சேர்ந்து நடனமாடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான்-இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரியாணிக்கு "கில்லி பிரியாணி' என பெயரிடப்பட்டுள்ளது.
    • ஏராளமான வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள பிரபலமான தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அந்த வகையில் ஒரு நாள் ஓட்டலில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பிரியாணி பரிமாறப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஜினி இடம் பிரியாணி எப்படி இருக்குது சார் என ஓட்டல் ஊழியர்கள் கேட்டனர்.

    இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் சும்மா கில்லி மாதிரி இருக்கு என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அன்று முதல் அந்த பிரியாணிக்கு "கில்லி பிரியாணி' என பெயரிடப்பட்டுள்ளது.

    இதையொட்டி இந்த பிரியாணி மிகவும் பிரபலம் அடைந்தது. இதற்கான ஏராளமான வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×