என் மலர்
- சிவகார்த்திகேயன் படத்திலும் ஜான்விகபூர் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது.
- சமீபகாலமாக ஜான்விகபூர் அடிக்கடி சென்னை வந்து செல்கிறார்.
விஜய் நடித்து வரும் தி கோட் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக தனது 69-வது படத்தை எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்விகபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீபகாலமாக ஜான்விகபூர் அடிக்கடி சென்னை வந்து செல்கிறார். தனது தாயார் ஸ்ரீதேவி பிரபலமாக திகழ்ந்த தமிழ் திரை உலகில் அறிமுகமாக வேண்டும் என்பது ஜான்வி கபூரின் தீராத ஆசையாக இருந்து வருகிறது.
அவரது ஆசையை தந்தை போனிகபூர் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார். விஜய்யின் 69 படத்தை இயக்க இருக்கும் எச்.வினோத், போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய 3 படங்களை இயக்கியவர்.
எனவே முதல் முதலாக ஜான்விகபூர் அவரது இயக்கத்தில் அறிமுகமாவது சரியாக இருக்கும். அதுவும் விஜய்க்கு ஜோடியாக இணைந்தால் இரட்டை மகிழ்ச்சியாக அமையும் என போனிகபூர் விரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திலும் ஜான்விகபூர் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஜான்விகபூர் கடந்த முறை சென்னை வந்த போது தாயார் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த கோவிலான தியாகராய நகரில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
கிழக்கு கடற்கரை சாலையில் அவருக்கு சொந்தமான பங்களாவை சுற்றுலா விடுதியாக மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
- கடந்த வாரம் வெளியான 'மகாராஜா'வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், "மகாராஜா" படத்தில் விஜய் சேதுபதிக்கு முன் விஜய் ஆண்டனி நடிக்க ஆர்வம் காட்டியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் அளித்த பேட்டியில், இந்த கதையை முதலில் நான் தயாரிக்க, விஜய் ஆண்டனி நடிப்பதாக இருந்தது. கதையை கேட்ட விஜய் ஆண்டனி கதாநாயனாக நடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் நிதிலன் ஏற்கனவே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் முன்பணம் வாங்கிவிட்டதால் அவர்கள் தடையில்லாச் சான்றிதழ் தர மறுத்தனர். அதனால்தான் என்னால் இந்த படத்தைத் தயாரிக்க முடியவில்லை" என கூறியுள்ளார்.
தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் இதுவரை ரூ.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. 'மகாராஜா'வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
- படப்பிடிப்பு அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு 'கூலி எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் கதை ரஜினிக்கு பிடித்திருந்ததால் 'ரஜினி 172' படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரஜினி- கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் வெளியான 'பேட்ட' படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 'ரஜினி 172' படம் குறித்த தகவல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இதனிடையே, நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டன.
- ராகவா லாரன்சின் இந்த சேவையை பாராட்டும் பலரும் அவரது அறக்கட்டளை இணைந்து வருகின்றனர்.
நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் 'மாற்றம்' என்ற அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவரது இந்த பணியில் KPY பாலாவும் இணைந்துள்ளார். இருவரும் சேர்ந்து ஏழ்மை நிலையில் வாடும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
சமீபத்தில் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டன. ராகவா லாரன்சின் இந்த சேவையை பாராட்டும் பலரும் அவரது அறக்கட்டளையில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா மாற்றத்தில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கூறியுள்ளதாவது:-
எனது சொந்தப் பணத்தில் மாற்றம் அறக்கட்டளை மூலம் 10 டிராக்டர்களை விவசாயிகளுக்கு வழங்கியது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இன்று (நேற்று) எஸ்.ஜே.சூர்யா அண்ணன் தன் சொந்தப் பணத்தில் இன்னொரு டிராக்டரைச் சேர்த்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்ரிக்கு 11வது டிராக்டரைக் கொடுத்தோம். அவருடைய ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எஸ்.ஜே.சூர்யா மற்றும் அவரது குடும்பத்திற்காக நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். எனக்கு எப்போதும் போல் உங்கள் அன்பும் ஆசியும் தேவை என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல், சிரஞ்சீவி போன்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து சரத்குமார் அழைப்பிதழ் கொடுத்த நிலையில், தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- உலகளவில் இதுவரை ஆவேஷம் திரைப்படம் 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
- டேப்சி குரலில் இலுமினாட்டி என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம் கடந்த மாதம் 11 ஆம் தேதி வெளியாகியது . படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
உலகளவில் இதுவரை ஆவேஷம் திரைப்படம் 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் ஃபஹத் ஃபாசிலுடன் சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக ஹிட்டாகியது குறிப்பாக டேப்சி குரலில் இலுமினாட்டி என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. படத்தில் பகத் பாசில் ரீல் செய்யும் காட்சிகளை மக்கள் இன்ஸ்டாகிராமில் ரீ கிரியேட் செய்து வருகின்றனர். படத்தில் பகத் பாசில் முற்றிலும் மாறுபட்ட கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (பகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
இந்த படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் மே 9-ம் தேதி வெளியானது. இந்நிலையில் அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வரும் 21-ம் தேதி 'ஆவேஷம்' படத்தை தமிழில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 25 மொழிகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
- விமானத்தில் இருந்து வெளியேறும்போது தன்னால் எதையும் கேட்க முடியாததை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் அல்கா யாக்னிக். 58 வயதான இவர் பாலிவட் சினிமா உலகின் முன்னணி பாடகியாக திகழ்ந்தவர். 90-களில் இவர் பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
25 மொழிகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். பிலிம்ஃபேர் விருது, சிறந்த பின்னணி பாடகிக்கான விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில் அல்கா யாக்னிக் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தற்போது அரிய வகை நோய் காரணமாக கேட்கும் திறனை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அல்கா யாக்னிக் வெளியிட்டுள்ள பதிவில், "சில வாரங்களுக்கு முன் விமானத்தில் இருந்து வெளியேறும்போது திடீரென என்னால் எதையும் கேட்க முடியாததை உணர்ந்தேன். இதனால் பொது நிகழ்ச்சியல் கலந்து கொள்ளாமல் இருந்தேன். இது தொடர்பாக கேட்க ஆரம்பித்தனர். சில நாட்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், பின்தொடர்பவர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் இதை வெளிப்படுத்துகிறேன்.
இது ஒரு வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட ஒரு அரிய செவித்திறன் இழப்பு என கண்டறியப்பட்டுள்ளது. இந்த திடீர், பெரும் பின்னடைவு என்னை முற்றிலும் அறியாமல் பிடித்துவிட்டது. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஆதரவு தெரிவிக்கவும், இதில் இருந்து மீண்டு வர தனக்கான பிரார்த்தனை செய்யவும் கேட்டுக் கொள்கிறேன்.
- புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.
- புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.
நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் தொடர்ந்து தள்ளிப் போய் வருவதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
எக்ஸ் தளத்தில் புஷ்பா 2 படக்குழுவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், " எதற்காக புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது. படக்குழு ஜோக் அடிக்கிறதா? நீங்கள் ரசிகர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறீர்கள். புஷ்பா கம்யூனிட்டியை சேர்ந்த நான் இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்" என்று மிரட்டியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரம்யா பாண்டியன், சினிமாவுக்கு அறிமுகமாக இவரது இடுப்பே காரணம் என்றால் மிகையாகாது.
- ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகரான ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இவர் சினிமாவுக்கு அறிமுகமாக இவரது இடுப்பே காரணம் என்றால் மிகையாகாது. ஏனென்றால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் டிரெண்டானது.
இதன் மூலம் அதிக ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமானார். பின்புதான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் 2015-ம் ஆண்டு முதல் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.
அதில் இறுதிவரை தாக்குப்பிடித்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதன்பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பாப்புலர் ஆனார். அதன்பின்னர் பட வாய்ப்புகள் கிடைத்து இன்று செம்ம பிஸியான தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார்.
அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன், மலையாள சூப்பர் ஸ்டார் மமூட்டிக்கு ஜோடியாக நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் மோசமான தோல்வியை தழுவியது.
இவர் அடுத்ததாக மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் 'இடும்பன்காரி'. இந்த படத்தில் இதற்க்கு முன் இவர் நடித்த படங்களின் கதாபாத்திரத்தை விட, வலுவான ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடுவதை அவர் தவிர்விப்பதில்லை. அந்த வகையில் தற்போது கடற்கரையில் அவர் பிங்க் கலர் உடையில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் ஆயிரக் கணக்கான லைக்குகளை பெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார்.
- கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அர்ஜூன் தாஸ் இப்படத்தில் ஒரு சித்த மருத்துவராக நடித்துள்ளார். ஒரு மருத்துவர் அவரது கோடை விடுமுறையை செலவிடுவதற்காக மலை கிராமத்திற்கு வருகிறார். அதன் பிறகு இவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை பற்றி பேசக்கூடிய படமாக இப்படம் அமைந்துள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா ஓடிடி தளம் வாங்கியுள்ளது. வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் ரசவாதி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினியின் தளபதி படத்தில் கலெக்டராக நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்.
- கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
90 காலக்கட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் கனவு காதலனாக இருந்தவர் அரவிந்த்சாமி, இவர் ரஜினியின் தளபதி படத்தில் கலெக்டராக நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர். அதை தொடர்ந்து இவர் ரோஜா படத்திலும் நடித்து பெயர் பெற்றார்.
பின்னர் பம்பாய், மின்சார கனவு, இந்திரா என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருபவர்.
மேலும் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் வலம் வரும் அரவிந்த் சாமிக்கு விபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் சில காலங்கள் ஓய்வில் இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனி ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது.
தொடர்ந்து தலைவி படத்தில் எம்ஜிஆராகவும், சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்க சூர்யாவின் 2D நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அரவிந்த்சாமியின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'.
- இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது. சூர்யாவிற்கு மிகப்பெரிய திரைப்படமாக இப்படம் அமைந்தது.
இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.
தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சுதா கொங்கரா முடிவு செய்தார். இந்தியில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் , ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தியில் சர்ஃபிரா என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில். தற்பொழுது திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.
சர்ஃபிரா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. சூரரைப்போற்று படத்தின் அதே தாக்கத்தை இந்த படத்தின் டிரைலர் ஏற்படுத்துகிறது. இந்தி சினிமாவில் கதையை அவரகளுக்கு ஏற்ற பாணியில் சிலவற்றை மாற்றுவார்கள் அதுப் போல் இல்லாமல் சுதா கொங்கரா அவரது கண்ணோட்டத்தை சிறப்பாக காட்சி அமைத்துள்ளார். இதனால் இப்படத்தின் மேல் கூடுதல் நம்பிக்கை பிறக்கிறது.
நடிகர் சூர்யா கவுரவ தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.