என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
டாப் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்த நடிகர் விஜய்!
- இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்த ஆண்டு பதான், ஜவான் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிடித்துள்ளார்.
- டாப் 50 பட்டியலில் மூன்றாவது இடத்தையும் இந்திய நடிகையாக பிரியங்கா சோப்ரா பெற்று உள்ளார்.
2023 ஆம் ஆண்டில் ஆசிய அளவிலான் டாப் 50 பிரபலங்கள் பட்டியல் பற்றிய தகவல் வெளியானது. இந்த பட்டியலில் இந்திய திரைப்பட கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் உள்ள பிரபல வார இதழான ஈஸ்டர்ன் என்ற பத்திரிக்கை ஆசிய அளவிலான டாப் 50 செலிப்ரெட்டீஸ் பற்றிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டிற்கான பட்டியல் ஆகும். இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்த ஆண்டு பதான், ஜவான் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிடித்துள்ளார்.
அதே பால் இந்த டாப் 50 பிரபலங்களில் இரண்டாவது இடத்தை பாலிவுட் நடிகை ஆலியா பட் பிடித்துள்ளார். இவர் 2023 ஆம் ஆண்டு ரன்வீர் சிங் உடன் இணைந்து ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என்ற படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடத்தார் ஆலியா பட்.
இந்த டாப் 50 பட்டியலில் மூன்றாவது இடத்தையும் இந்திய நடிகையாக பிரியங்கா சோப்ரா பெற்று உள்ளார்.
இந்த ஆசிய பிரபலங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை இந்திய நடிகர்கள் பெற்றாலும் நாம் எதிர்பார்ப்பது எனவோ தமிழ் பிரபலங்களை தான். அந்த வகையில் இந்த பட்டியலில் தென்னிந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகரான தளபதி விஜய் இடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ வெற்றி படங்களை கொடுத்த விஜய் டாப் 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பெற்றுள்ளார். முதல் பத்து இடத்தில் இடம் பிடித்தவர்களில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த ஒரே பிரபலம் நடிகர் விஜய் தான். இதன் படி முதல் 10 இடங்களில் இந்தியாவை சேர்ந்த நான்கு நடிகர்கள் இடம் பிடித்துள்ளர். மேலும் இந்த பட்டியலில், அமிதாப் பச்சன், அரிஜித் சிங், தீபிகா படுகோனே, அனில் கபூர், அர்மான் மாலிக் உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்