என் மலர்
சினிமா செய்திகள்
- 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார் பாலா.
- இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்தும் வருகிறார்.
சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்தும் வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இதைத்தொடர்ந்து மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தார்.
இந்நிலையில், நடிகர் பாலா தற்போது மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோவை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்திற்காக காத்திருந்து செல்ல வேண்டி இருக்கிறது. அனைவராலும் அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல முடியவில்லை. அதனால் தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளோம்.
இந்த இலவச ஆட்டோ காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். அனகாபுதூர், பம்மல், பல்லாவரம் போன்ற இடங்களை சுற்றியுள்ள மக்கள் மருத்துவத்திற்காக இந்த ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பதை பார்த்துவிட்டு மற்ற பகுதிகளுக்கு ஆட்டோ வழங்குவேன். இந்த ஆட்டோ ஒட்டுனரின் சம்பளம் மற்றும் பெட்ரோல் என் சொந்த செலவில் வழங்கப்படும்" என்று கூறினார்.
- ஹிருத்திக் ரோஷன் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான 'கஹோ நா... பியார் ஹை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதிலும் இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. தன் ஒவ்வொரு படத்திலும் தன் நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி தன் திறமையால் தனக்கான மையில்கல்லை எட்டியுள்ள நடிகர் ஹிருத்திக் ரோஷன் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ரசிகர்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார்கள். அதுமட்டுமல்லாமல் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி உணவு பரிமாறி கொண்டினார்கள்.
- நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' .
- இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்து வருகின்றனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்தும் சமீபத்தில் வீடியோ வெளியானது.
கல்கி 2898- ஏடி போஸ்டர்
இந்நிலையில், 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் மே 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
T 4888 - The story that ended 6000 years ago.
— Amitabh Bachchan (@SrBachchan) January 12, 2024
?????? ??? ???, ????.
The future unfolds. #Kalki2898AD@SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD #Kalki2898ADonMay9 pic.twitter.com/bb6wRqnMG3
- நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்-நடிகைகள் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் நடந்து வருகிறது.
நேற்று ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக புதுச்சேரி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். படப்பிடிப்பு முடிந்த பின் கேரவன் செல்லும் போதும், மீண்டும் ஒட்டலுக்கு திரும்பும் போதும் ரசிகர்களை பார்த்து ரஜினி கை அசைத்தபடி சென்றார். இன்றும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.
ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரகுதாத்தா'.
- இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.
சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்ட படக்குழு "ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வருகிறாள் வள்ளுவன்பேட்டையின் வீர மங்கை கயல்விழி! ரகு தாத்தா, விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்" என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் கொண்ட இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- ரைஸ் ஆப் மில்லர், ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண்ராஜா வரிகளில் உருவாகியுள்ளது.
- பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரைஸ் ஆப் மில்லர்' எனும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண்ராஜா வரிகளில் உருவாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- கமல்ஹாசன் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளதாக நேற்று படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்திருந்தது.
தக் லைஃப் போஸ்டர்
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லஷ்மி இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தது குறிப்பிடத்தகக்து.
With utmost joy, we welcome the elegant @AishuL_ to the ensemble of #ThugLife#Ulaganayagan #KamalHaasan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @C_I_N_E_M_A_A @Gautham_Karthik @abhiramiact #Nasser@MShenbagamoort3… pic.twitter.com/pEBGDEL7Qb
— Raaj Kamal Films International (@RKFI) January 11, 2024
- 'அயலான்’ படத்தில் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
- சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.
நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் கருணாகரன். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து நாளை வெளியாக இருக்கும் 'அயலான்' படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் தொழில்நுட்பக்குழு தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளது என்பவர் இந்தப் படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பேசியதாவது, சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ஒவ்வொரு காட்சியிலும் தான் மட்டுமே சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் தனது சக நடிகர்களுடனும் கலந்தாலோசித்து சிறப்பான அவுட்புட்டைக் கொண்டு வருவார் சிவா.
அதேபோல, இயக்குனர் ரவிகுமாரும் சிறந்த தொழில்நுட்பக்குழுவையும் புதிய ஐடியாவையும் இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ரவிகுமார் இருவரும் படத்தின் மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை தான் எங்கள் பலம். நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும். ஏ.ஆர். ரகுமானின் இசை படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயினராக, குறிப்பாக குழந்தைகளுக்கான படமாக 'அயலான்' வந்துள்ளது என்றார்.
'அயலான்' தவிர நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, '96' புகழ் பிரேம்குமார் இயக்கும் புதிய படம், நளன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார் கருணாகரன். இதுமட்டுமல்லாது, நாகசைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். மேலும், விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்கும் புதிய படம், மிர்ச்சி சிவாவுடன் 'சூது கவ்வும் 2' மற்றும் கருணாகரன் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 'குற்றச்சாட்டு' ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவரது கைவசம் உள்ளது.
- நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம்.
- நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளைக் கொண்டாட வேண்டும்.
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கவுரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் 'உழவர் விருதுகள் 2024' விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையா, நடிகர் பசுபதி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள்.
இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். மேலும் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதோடு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி பேசும்போது, "ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்கிறார்கள். அந்த நாளைத்தான் நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம். ஆனால், நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். அவர்களுக்கு என்றென்றுமே நன்றி கூற வேண்டும். பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது.
சினிமா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்திலுமே வெற்றி பெறும் போது விழா வைத்துக் கொண்டாடுகிறோம். எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் நிலையிலும் நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளைக் கொண்டாட வேண்டும் என்று தான் உழவர் விருதுகள் விழாவினைத் தொடங்கினோம்.
இது 5-வது ஆண்டு விழா. பல்வேறு வேளாண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த விருதின் மூலம் அவர்களுடைய வாழ்வில் ஒரு சிறு வெளிச்சத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று நம்புகிறோம். வரும் காலங்களிலும் இதுப்போல விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் நல் உள்ளங்களை அடையாளப்படுத்தி கவுரவப்படுத்துவதோடு, விவசாயத்திற்கான பங்களிப்பையும் உழவன் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செய்யும்" என கூறினார்.
- படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
- எம்.எஸ்.சேலஞ்ச் என்ற திரைப்பட விளம்பர நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அயலான் நாளை திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
தங்களுக்கு தர வேண்டிய ரூ.1 கோடியை வழங்காமல் படத்தை வெளியிட கூடாது என எம்.எஸ்.சேலஞ்ச் என்ற திரைப்பட விளம்பர நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அயலான் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.
எம்.எஸ்.சேலஞ்ச் விளம்பர நிறுவனத்திற்கு ரூ.50 லட்சத்தை பட தயாரிப்பு நிறுவனம் செலுத்தியதாலும், மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதாலும் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் திட்டமிட்டபடி நாளை அயலான் திரைப்படம் வெளியாகுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘சைரன்’.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'சைரன்' திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 'அன்னபூரணி’ திரைப்படம் டிசம்பர் 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
- இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நயன்தாரா, ஜெய் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்த 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து இப்படம் டிசம்பர் 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இதன்பின்னர், இப்படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தது. அதுமட்டுமல்லாமல், மும்பையை சேர்ந்த சிவசேனா கட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் 'அன்னபூரணி' திரைப்படம் இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல் நிலையத்தில் இப்படத்திற்கு எதிராக புகாராளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து பலர் 'அன்னபூரணி' படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்ததையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து இப்படம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து, இந்து மதத்தையும் பிராமண சமூகத்தையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை இதனால் ஏற்ப்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.