search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.



    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் சத்தமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல சென்னை விமான நிலையம் வந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.


    இந்நிலையில், நடிகர் அஜித் துபாயில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, "துபாய் நாட்டு கடற்கரையில் ஒரு சொகுசு படகில் நடிகர் அஜித் குடும்பத்துடன் பயணம் செய்கிறார். அப்பொழுது அருகில் உள்ள படகில் இருந்த சில ரசிகர்கள், அவரை நோக்கி 'தல' என்று கோஷமிட, தன் கைகளை உயர்த்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சென்றார் அஜித்" இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது.


    • ’அயலான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார்.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், அட்லீயை கொண்டாட வேண்டும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், "ஜவான் டிரைலர் பார்த்ததும் 'இனி நீ இந்த பக்கம் வரமுடியாது. உன்னை அங்கு கொண்டாடுவார்கள்' என்று அட்லீக்கு நான் செய்தி அனுப்பினேன். ஒரு பக்கம் அட்லீயை சுலபமாக விமர்சிக்கிறார்கள். ஆனால், அவர் சாதனை படைக்கும் பொழுது நாம் அதை கொண்டாட வேண்டும்.


    மற்ற துறைகளில் அவர்களுடைய இயக்குனர்கள் இவ்வாறு செய்திருந்தால் கொண்டாடுவார்கள். ஒருவர் தமிழில் இருந்து சென்று ஷாருக்கானை வைத்து படம் எடுத்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பது விளையாட்டான விஷயம் இல்லை. அவர்கள் துறை இயக்குனர்களே இதை சாதிக்க முடியவில்லை. ஆனால், இங்கிருந்து சென்ற இயக்குனர் அதை செய்திருக்கிறார் என்றால் அதை கொண்டாட வேண்டும்" என்று பேசினார்.

    • 'சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார்.
    • இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார்.

    கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதனைத் தொடர்ந்து 'சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.


    சூது கவ்வும் 2 போஸ்டர்

    இந்நிலையில், 'சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் ராதா ரவி இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், இந்த வருஷம் எலெக்ஷன் இருக்குப்பா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


    • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.


    அயலான் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அயலான்' திரைப்படத்தின் டிரைலர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    • தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.


    இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான 'கோரனாரு' திரைப்படத்தின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். 'கேப்டன் மில்லர்' திரைப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    • பல இடங்களில் கடன் பெற்று ரூ.500 கோடி செலவில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா தயாரிக்கிறது.
    • அந்த படம் சரியாக ஓடவில்லை என்றால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகும்.

    நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சண்டக்கோழி 2'. இந்த படத்தை விஷால் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்லைட் உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது, ரூ. 23 கோடியை 22 லட்சம் அளவிற்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.


    ஆனால், இந்த படத்தை உரிமம் பெற்ற லைகா நிறுவனம் பரிந்துரைக்கப்பட்ட ஜி.எஸ்.டி தொகையை செலுத்தாததால் அதனுடைய அபராதத்துடன் சேர்த்து ரூ.4 கோடியை 88 லட்சத்தை தான் செலுத்தியதாக விஷால் லைகா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இது தொடர்பான மனுவில், பல இடங்களில் கடன் பெற்று ரூ.500 கோடி செலவில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் அந்த படம் சரியாக ஓடவில்லை என்றால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகும். அப்போது தனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.


    அதுமட்டுமல்லாமல் லைகா நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தான் செலுத்திய ஜி.எஸ்.டி மற்றும் அபராதத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.5 கோடியை 24 லட்சத்து 10 ஆயிரத்திற்கு உத்தரவாதம் செலுத்த வேண்டும் என்று லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

    தொடர்ந்து இந்த வழக்கு முடியும் வரை ஆர்.பி.எல் வங்கியில் லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள சொத்துக்களை முடக்க வேண்டும் என்று விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜனவரி 19-ஆம் தேதிக்குள் இந்த மனுவிற்கு பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

    • நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 5.01-க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’.
    • ஹோம்பலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.


    இந்நிலையில், 'ரகு தாத்தா' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு "ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வருகிறாள் வள்ளுவன்பேட்டையின் வீர மங்கை கயல்விழி! ரகு தாத்தா, விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்" என்று பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • மாஸ் ரவி பூபதி கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இந்த படத்திற்கு ஜி.கே.வி இசையமைக்கிறார்.

    சென்னை புரொடக்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்து வாக்குல ஒரு காதல். இப்படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார். கதாநாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.


    ஜி.கே.வி இசையமைக்கும் இப்படத்திற்கு ராஜதுரை மற்றும் சுபாஷ் N மணியன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். காற்றை யாரும் பார்க்க முடியாது, உணர மட்டும்தான் முடியும். காதல் கருப்பா சிவப்பா பார்க்க முடியாது, சுவாசிக்க தான் முடியும். இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மையான காதலை சுற்றி படம் உருவாகியுள்ளது. 


    வடசென்னை பின்னணியில் தற்போது சமூக வலைத்தளத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் படமாக்கி இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்சன், திரில்லர், எமோஷனல் என கமர்ஷியல் அம்சத்துடன் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. 

    • பானர்ஜி என்ற பெயரில் ஒருவர் நடிகை அஞ்சலி பாட்டீலை தொடர்பு கொண்டார்.
    • நடிகை அஞ்சலி பாட்டீல் யோசிக்காமல் அவர் கேட்ட பணத்தை அனுப்பினார்.

    தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'காலா' படத்தில் நடித்தவர் அஞ்சலி பாட்டீல். இவர் 'குதிரைவால்' என்ற படத்திலும் நடித்து உள்ளார். மேலும் இந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 36 வயதான அஞ்சலி பாட்டீல் மும்பை அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.



    கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை அஞ்சலி பாட்டீலுக்கு கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் போன் செய்துள்ளார். அவர் உங்களது பெயரில் வெளிநாட்டில் இருந்து வந்த பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகவும், அதை சுங்க துறையினர் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுமாறு கூறினார்.

    இதைத்தொடர்ந்து ஸ்கைப் மூலமாக மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என பானர்ஜி என்ற பெயரில் ஒருவர் நடிகை அஞ்சலி பாட்டீலை தொடர்பு கொண்டார். அவர் நடிகையிடம் உங்களது 3 வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்து இருப்பதாகவும் இதுகுறித்து சரிபார்ப்பு பணி செய்ய ரூ.96 ஆயிரத்து 525-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.


    இதைகேட்ட நடிகை அஞ்சலி பாட்டீல் யோசிக்காமல் அவர் கேட்ட பணத்தை ஜிபே மூலம் அனுப்பினார். பின்னர் அவர் வங்கி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், அதுகுறித்து விசாரிக்க மேலும் ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 291-ஐ செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அந்த பணத்தையும் நடிகை அனுப்பி வைத்தார்.

    இந்தநிலையில் அஞ்சலி பாட்டீல், சம்பவம் குறித்து தனது வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்தார். அவர் இது மோசடியாக இருக்கலாம் என நடிகையிடம் கூறியுள்ளார். இதையடுத்து நடிகை அஞ்சலி பாட்டீல், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகையிடம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 5.01-க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், இதை உறுதி செய்யும் விதமாக படக்குழு தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. இந்த போஸ்டரை நடிகர் நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் சித்தார்த் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
    • நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

    நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.


    சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.


    இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதளத்தில் அதிதி ராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் 'லவ் இருக்கா? இல்லையா?' என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


    நடிகை அதிதி ராவ், நடிகர் சத்யதீப் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். நடிகை அதிதி ராவின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பல படங்களிலும் நடித்துள்ளார். 


    ×