என் மலர்
சினிமா செய்திகள்
- இயற்கையாகவே உதவி மனப்பான்மை உடையவர் விஜயகாந்த்.
- விமர்சிப்பவர்களிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இன்றி பழகி வந்தார்.
திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள், தங்கள் வருவாயில் சமூக பணிகளுக்காகவும், ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவும் பொதுத்தொண்டு செய்யும் வழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை கண்டு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தால் 70களில் சென்னைக்கு படையெடுத்தவர்களில் நடிகர் விஜயகாந்த்தும் ஒருவர்.
நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்த விஜயகாந்த் இயற்கையாகவே பிறருக்கு உதவும் நோக்கம் கொண்டிருந்தார்.
தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் இணைந்து விஜயகாந்த், திரைப்படங்களை தயாரித்து வந்தார். அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "ராவுத்தர் பிலிம்ஸ்" அலுவலகம் தியாகராய நகர், பாண்டி பஜார் பகுதியில் ராஜாபாதர் தெருவில் செயல்பட்டு வந்தது. அங்கு வருபவர்களுக்கு விஜயகாந்த் இருந்தாலும், இல்லாத நேரத்திலும் எந்நேரமும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. திரைப்பட துறையை சார்ந்தவர்கள் மட்டுமின்றி பசியுடன் வரும் பலருக்கும் அங்கு உணவு வழங்குவது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியுடன் இருந்தார்.
இலங்கை தமிழர்களின் நலனுக்காக பல போராட்டங்களையும் நடத்தி அதில் ஈடுபட்டவர்களின் நலனையும் பாதுகாத்தவர் விஜயகாந்த். திரைப்பட படப்படிப்பு தளங்களில் துணை நடிக நடிகையர்களுக்கு பாதுகாப்பு, உணவு, உடை, தொலைத்தொடர்பு வசதி ஆகியவை நேரத்தில் கிடைக்க விஜயகாந்த் மிகவும் கவனம் செலுத்தி வந்தார்.
நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த், அச்சங்கத்தின் கடனை அடைக்க வெளிநாடுகளில் நட்சத்திர விழாவை நடத்தி அதில் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் பங்கேற்க வைத்து அதன் மூலம் சங்கத்தின் கடனையும் அடைத்து உபரியாக பெரும் தொகையை வங்கி கணக்கில் வைக்க வழிவகை செய்தார்.
சங்கத்தில் நடிகர்-தயாரிப்பாளர், இயக்குனர்-நடிகர் என ஏற்படும் பல பிரச்சனைகளை சுமூக வழியில் தீர்த்து வைத்தாலும், அது குறித்து விளம்பரம் தேடி கொள்ளாதவர். விஜயகாந்த், புதிதாக திரைத்துறைக்கு வர துடிக்கும் பலரை நடிப்பு, இயக்கம், இசை என பல்வேறு துறைகளில் வாய்ப்பு அளித்து ஊக்கமளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சரத்குமார், அருண்பாண்டியன், மன்சூர் அலிகான் உட்பட பல நடிகர்களுக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி பல பட தயாரிப்பு நிறுவனங்களுக்கும், இயக்குனர்களுக்கும் சிபாரிசும் செய்தார். இந்த தகவல்கள் குறித்து அவர்கள் பிற்காலத்தில் தெரிவித்ததால்தான் மக்களுக்கு தெரிய வந்ததே தவிர விஜயகாந்த் எங்கும் இதை கூறி புகழ் தேடி கொள்ள விரும்பவில்லை.
திரைத்துறையில் அவரை விமர்சித்தவர்களுடன் எந்தவித பாகுபாடும் இன்றி விஜயகாந்த பழகி வந்தார்.
அவரது தொடக்க திரைப்பயண போராட்ட காலத்தில் அவருடன் நடிக்க மறுத்த பல நடிகைகள் பின்னர் அவர் வெற்றிகரமான முன்னணி கதாநாயகனாக உருவெடுத்ததும் அவருடன் நடிக்க சம்மதித்தனர். ஆனால், விஜயகாந்த் அவர்களிடம் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் பழகி வந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களில் விஜயகாந்த் ஒரு சகாப்தம் என்றால் அது மிகையாகாது.
- விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
- ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
90-களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
இதையடுத்து நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நாகர்கோவிலில் நடைபெற்று வந்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார்.
- விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
- இவர் மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார்.
90-களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
இதையடுத்து நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "திரைஉலகில் ஒரு நடிகராய் உதயமாகி, புரட்சிகலைஞராய் பெயரெடுத்து, கேப்டன் என்று தலையெடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவராய் பதவி வகித்து, தேமுதிக தலைவராய் உருவெடுத்து, தமிழக எதிர்கட்சி தலைவராய் கால் பதித்து, தனகென்று ஒரு தனி பெயரை ஈட்டிய அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி எனது இதயத்தை ஈட்டி போல் தாக்கியது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
- 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் விஜயகாந்த்.
- விஜயகாந்தின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.
ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும், ஆக்ஷன் படங்களிலும், புரட்சிப் படங்களிலும் நடித்த நடிகர் விஜயகாந்த். சிறு வயது முதல் சினிமா பார்க்கிற வாய்ப்பு அமைந்ததால், பார்த்த சினிமாக்களை நண்பர்களிடம் காட்சிவாரியாக பேசி மகிழ்வார். அதிலும் எம்.ஜி.ஆரின் ஆக்ஷன் படங்கள் அவரை வெகுவாக கவர்ந்தன. அந்தப் படங்களை பலமுறைப் பார்த்து ரசித்திருக்கிறார்.
பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை' படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜயகாந்த், அதன் பிறகு அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் அகல்விளக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிகரமான படம் என்றால், அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம்தான்.
தமிழில் மிகப்பரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்தை தெலுங்கு மொழியிலும் சிரஞ்சீவி நடிக்க இயக்கினர், எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தப் படம் இந்திக்கும் சென்று அமிதாப்பச்சன் நடிப்பில் உருவானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவப்பு மல்லி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'சாதிக்கொரு நீதி', 'பட்டணத்து ராஜாக்கள்', 'சாட்சி', 'நீதியின் மறுபக்கம்', 'வசந்தராகம்' எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார்.
வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம்', 'ஊமை விழிகள்', 'கூலிக்காரன்' , 'உழவன் மகன்', 'தெற்கத்திக் கள்ளன்', 'பூந்தோட்ட காவல் காரன்', 'செந்தூரப்பூவே' 'புலன் விசாரணை', 'சின்ன கவுண்டர்', 'வானத்தைப்போல', 'ரமணா', 'சொக்கத்தங்கம்' என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. பல நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான 'கேப்டன் பிரபாகரன்' நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார். விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எரிமலை எப்படிப் பொறுக்கும்
என்ற என் பாடலுக்கு
உயிர்கொடுத்த கதாநாயகன்
உயிரிழந்து போனார்
திரையில் நல்லவர் ;
அரசியலில் வல்லவர்
சினிமாவிலும் அரசியலிலும்
'டூப்' அறியாதவர்
கலைவாழ்வு பொதுவாழ்வு
கொடை மூன்றிலும்
பாசாங்கு இல்லாதவர்
கலைஞர் ஜெயலலிதா என
இருபெரும் ஆளுமைகள்
அரசியல்செய்த காலத்திலேயே
அரசியலில் குதித்தவர்
எதிர்க்கட்சித் தலைவர் என்ற
உயரம் தொட்டவர்
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசாதவரை
நில்லென்று சொல்லி
நிறுத்திவிட்டது காலம்
வருந்துகிறேன்
கண்ணீர் விடும்
குடும்பத்தார்க்கும்
கதறி அழும்
கட்சித் தொண்டர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
எரிமலை எப்படிப் பொறுக்கும்
— வைரமுத்து (@Vairamuthu) December 28, 2023
என்ற என் பாடலுக்கு
உயிர்கொடுத்த கதாநாயகன்
உயிரிழந்து போனார்
திரையில் நல்லவர் ;
அரசியலில் வல்லவர்
சினிமாவிலும் அரசியலிலும்
'டூப்' அறியாதவர்
கலைவாழ்வு பொதுவாழ்வு
கொடை மூன்றிலும்
பாசாங்கு இல்லாதவர்
கலைஞர் ஜெயலலிதா என
இருபெரும் ஆளுமைகள்… pic.twitter.com/1oYQFtmMbO
- "சட்டம் ஒரு இருட்டறை" விஜயகாந்த் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படம்
- ரஜினி, கமல் என இரு துருவங்களுக்கு இடையே அவர்களுக்கு இணையாக வெற்றி பெற்றார்
1952 ஆகஸ்ட் 25 அன்று மதுரையில் அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார், விஜயகாந்த். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விஜயராஜ்.
செல்வாக்கான விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், திரைத்துறையில் கதாநாயகனாக நடிக்க விரும்பி 70-களின் மத்தியில் சென்னைக்கு வந்தார் விஜயராஜ். கதாநாயகனாகவே நடிக்க விரும்பியதால், திரைப்படங்களில் பல சிறு சிறு வேடங்களில் நடிக்க வந்த வாய்ப்புகள் அனைத்தையும் துணிச்சலாக உதறி தள்ளினார். இருந்தாலும், ஆரம்பத்தில் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு உடனடியாக கிடைக்கவில்லை.
பல போராட்டங்களுக்கு பிறகு அப்போதைய முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எம்.ஏ. காஜா இயக்கத்தில் "இனிக்கும் இளமை" திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். திரைப்படத்திற்காக "விஜயகாந்த்" என மாற்றப்பட்ட அவர் பெயர், காலமெல்லாம் அவருக்கு நிலைத்தது.
பிறகு விஜயகாந்த் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன.
1980ல் கே. விஜயன் இயக்கத்தில் அவர் மீனவராக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய "தூரத்து இடி முழக்கம்" திரைப்படம் தேசிய விருது வென்றது. இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதை அடுத்து, பிற இயக்குனர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ள தொடங்கினர்.
1981-ல் எஸ்.ஏ. சந்திரசேகர் (நடிகர் விஜய் அவர்களின் தந்தை) இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமானார். மாபெரும் வெற்றியை பெற்ற இத்திரைப்படம், அதன் இயக்குனருக்கும் ஒரு முன்னேற்ற பாதையை வகுத்து தந்தது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ரஜினிகாந்த், இந்தி திரையுலகில் நடிக்க விரும்பிய போது, "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படத்தைத்தான் ரீமேக் செய்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவருக்கும் இடையேயான நட்பினால் தொடர்ந்து எஸ்.ஏ.சி., விஜயகாந்தை கதாநாயகனாக வைத்து பல படங்களை எடுத்தார். அவற்றில் பல பாக்ஸ் ஆபீசில் பெரும் வசூலை அள்ளி குவித்தன.
எஸ்.ஏ.சி. விஜயகாந்தை அன்புடன் 'கேப்டன்' என அடைமொழி இட்டு அழைத்தார். அப்பெயரிலேயே விஜயகாந்தை, அவரது ரசிகர்கள் அழைக்க தொடங்கினர்.
மேலும், தனது மகனை திரையுலகில் நிலைநிறுத்த எஸ்.ஏ.சி. மேற்கொண்ட முயற்சிகளுக்கு உதவும் வகையில், "செந்தூர பாண்டி" எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு சகோதரனாக ஒரு முக்கிய வேடத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்ததை பல பேட்டிகளில் எஸ்.ஏ.சி., கூறியிருக்கிறார்.
"சிவப்பு மல்லி", "ஜாதிக்கொரு நீதி", "சிவந்த கண்கள்" உள்ளிட்ட பல படங்களில் புரட்சிகரமான தோற்றங்களில் நடித்து தனக்கென ஒரு பாணியை அமைத்து கொண்டார் விஜயகாந்த். மேலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வசனத்தில் சில படங்களில் கதாநாயகனாக நடித்து உணர்ச்சி பொங்க வசனம் பேசி நடித்து பாராட்டை அள்ளி குவித்தார்.
அதனை தொடர்ந்து விஜயகாந்த், மனநல மருத்துவராக "நூறாவது நாள்", கிராமத்து பாடகராக "வைதேகி காத்திருந்தாள்", பாட்டு வாத்தியாராக "அம்மன் கோவில் கிழக்காலே", மூர்க்கமான ஜமீந்தாராக "நானே ராஜா நானே மந்திரி" உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு வித்தியாசமான வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.
ஆக்ஷன் ஹீரோவாகவும், திரில்லர் படங்களின் கதாநாயகனாகவும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட விஜயகாந்தின் திரைப்படம் என்றாலே சண்டை காட்சிகளுக்கும், விறுவிறுப்பான திரைக்கதைக்கும் பஞ்சம் இருக்காது என நம்பி ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்த காலம் உண்டு. முகம் சுளிக்க வைக்கும் ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களையோ பெரும்பாலும் தவிர்த்து வந்ததால், ரசிகைகள் கூட்டமும் விஜயகாந்திற்கு குறைவின்றி இருந்தது.
1986-ல் வெளிவந்த திரைப்பட கல்லூரி மாணவர்களின் பிரமாண்ட வெற்றி படைப்பான "ஊமை விழிகள்" திரைப்படத்தில் டி.எஸ்.பி. தீனதயாள் எனும் வயது முதிர்ந்தவராக, நரை எய்திய தலையுடன் இடைவேளை நெருங்கும் தறுவாயில் திரையில் தோன்றும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக, மிக சிறப்பாக நடித்தார்.
அதனை தொடர்ந்து விஜயகாந்தின் திரைப்பட வாழ்வு ஏறுமுகத்தில் சென்றது.
தொடர்ந்து திரைப்பட கல்லூரி மாணவர்களின் முதல் படங்களுக்கு கதாநாயகனாக நடித்து அவர்களை ஊக்குவித்தார். அனுபவம் மிக்க இயக்குனர்களின் படங்களுக்கே முன்னணி கதாநாயகர்கள் நடிக்க ஒப்பு கொள்ளும் காலகட்டத்தில், பல இயக்குனர்களின் முதல் படத்தில் முழு ஒத்துழைப்பு தந்து அப்படங்கள் வெற்றி பெற காரணமாக இருந்தவர். இதன் மூலம் அந்த இயக்குனர்களுக்கும் திரைப்படத்துறையில் ஒரு வலுவான அடித்தளம் உருவானது.
நடிகனாக மட்டும் இல்லாமல் தன் நண்பரான இப்ராகிம் ராவுத்தருடன் இணைந்து "புலன் விசாரணை", "கேப்டன் பிரபாகரன்", "உழவன் மகன்" உட்பட பல திரைப்படங்களை பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து அத்திரைப்படங்களை வெற்றிப்படங்களாகவும் உருவாக்கியவர் விஜயகாந்த்.
தனக்கென சில கோட்பாடுகளை வைத்து கொண்டு அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர் விஜயகாந்த். இறுதியாக "ஓம் சக்தி" (1982) எனும் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அவர், அதன் பின் திரைப்படத்துறையில் இறுதி வரை வில்லனாகவோ, குணசித்திர நடிகராகவோ நடிக்காமல் கதாநாயகனாகவே நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.
விளம்பர படங்களில் நடிப்பதில்லை என்பதையும் ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தார்.
அதே போல், தனது படங்களை அவரை வைத்தே வேற்று மொழிகளில் எடுக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்த போதும், தமிழ் மொழி தவிர பிற மொழிகளில் நடிக்காமல் இருந்தார்.
தனது படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் அதிக முயற்சிகள் எடுத்து கொண்டதால், ரஜினி, கமல் படங்களை விட இவர் நடித்த படங்களில் சண்டை காட்சிகள் தத்ரூபமாக இருந்தன. பல ஸ்டண்ட் காட்சிகளில் 'டூப்' போடாமல் இவரே நடித்ததுண்டு.
ஆர்.வி. உதயகுமாரின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த "சின்ன கவுண்டர்" திரைப்படம் இன்றளவும் பேசப்படும் அவரது பல திரைப்படங்களில் ஒன்று.
"மீனாட்சி திருவிளையாடல்" எனும் பக்தி படத்திலும் சிறப்பாக நடித்த விஜயகாந்தால் மட்டுமே "ரமணா" எனும் திரைப்படத்தில் அரசாங்கத்தால் தூக்கிலடப்படும் குற்றவாளியாகவும் உயிரோட்டத்துடன் வித்தியாசமாக ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்கின்றனர் விமர்சகர்கள்.
2010-ல் வெளியான விருத்தகிரி எனும் திரைப்படத்தில் வழக்கம் போல ஆக்ஷன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்த விஜயகாந்த்திற்கு, அதன் பிறகு உடல்நிலையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொள்ள வேண்டி வந்தது.
கிட்டத்தட்ட 154 திரைப்படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், ஒரு நடிகர் என்பதை தாண்டி அவரது தன்னார்வ பொதுநல தொண்டுகளின் காரணமாக லட்சக்கணக்கானவர்களால் விரும்பப்படும் மனிதராக வலம் வந்தவர்.
சத்யராஜ், சரத்குமார், அருண்பாண்டியன் உள்ளிட்ட பல நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பதை மிகவும் ஊக்குவித்த விஜயகாந்த், தன்னலமில்லாமல் தனக்கு வந்த பல பட வாய்ப்புகளை அவர்களுக்கு கொடுத்து உதவினார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரு துருவங்கள் மட்டுமே கோலோச்சிய தமிழ் திரையுலகில் அவர்களுக்கு இடையே போட்டி போட்டு தனக்கென ஒரு பாணியை அமைத்து தனியிடத்தை பிடித்தவர் விஜயகாந்த்.
தோற்றத்தில் கருப்பு நிறமுடையவர்களும் தமிழ் திரையுலகில் ஜெயிக்க முடியும் என்பதை நடிகர் ரஜினிகாந்த் நிரூபித்தார். அவரை தொடர்ந்து திரையுலகில் கால் பதித்த விஜயகாந்த், ரஜினி, கமல் இருவருக்கும் இணையாக ஒருவர் வெற்றிகரமான கதாநாயகனாகவே பல ஆண்டுகள் உலா வரவும் முடியும் என்பதையும் தன் வாழ்நாளில் சாதித்து காட்டினார்.
- 2005 செப்டம்பர் மாதம் மதுரையில் தன் கட்சியின் பெயரை விஜயகாந்த் அறிவித்தார்.
- இரு பெரும் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி கொண்ட கட்சி தே.மு.தி.க.
தமிழ் திரையுலகில் ரஜினி, கமல் என இரு நடிகர்கள் முன்னிலையில் இருந்த காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரத் தொடங்கியவர் நடிகர் விஜயகாந்த்.
தனது திரைப்படங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதனை துணிச்சலாக தட்டி கேட்கும் கதாநாயகனாக பல வேடங்களில் நடித்தார். அது போன்ற காட்சிகளில் நடிக்கும் போது ஆளும் கட்சி அரசியல்வாதிகளை குறி வைத்து கேள்வி கேட்கும் வகையில் பல வசனங்கள் அவருக்கென எழுதப்பட்டு வந்தது. அவை ரசிகர்களிடமும் பலத்த வரவேற்பை பெற்று வந்ததால், தொடர்ந்து தனது படங்களில் இந்த பாணியை விஜயகாந்த் கடைபிடித்து வந்தார்.
அவருக்கு தமிழக அரசியலில் நுழையும் ஆர்வம் இருப்பதாக பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அக்காலகட்டத்தில் இதனை விஜயகாந்த் மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை.
ஆனால், தனது ரசிகர் மன்ற அன்பர்களை கொண்டு சமூக நலப் பணிகளில் இடைநிறுத்தம் இல்லாமல் தொடர்ந்து சமூக சேவையாற்றி வருவதை தொடர்ந்தார்.
திரையுலகில் ஒரு உயர் நிலையை எட்டியிருந்த விஜயகாந்த், 2005 செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் ஒரு மாநாடு நடத்தினார். அதில், அரசியல் கட்சியை தொடங்க போவதாகவும், அதற்கு பெயர் "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" என்றும் விஜயகாந்த அறிவித்தார்.
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா, தி.மு.க.-வில் கருணாநிதி உயிருடனும், நல்ல உடல்நலத்துடனும் கட்சி பணி ஆற்றி வந்த காலத்திலேயே இரு கட்சிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக அவர்களை எதிர்த்து செயல்பட்டு தனது கட்சியை முன்னிறுத்தினார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோயம்பேட்டில் உள்ள தனக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தை தனது கட்சியின் தலைமையகமாக கொண்டு தீவிர அரசியலில் நுழைந்தார் விஜயகாந்த்.
2006 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் 234 இடங்களிலும் அவர் கட்சி போட்டியிட்டது. ஆனால், "கருப்பு எம்.ஜி.ஆர்." என அழைக்கப்பட்ட அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் வென்றாலும், 8 சதவீத வாக்குகள் மட்டுமே தே.மு.தி.க.வால் பெற முடிந்தது. தே.மு.தி.க.வின் பிற வேட்பாளர்களில் பலர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.
2009 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் 39 இடங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 இடம் என 40 இடங்களில் போட்டியிட்டும் தே.மு.தி.க.-வால் குறைந்த அளவு வாக்குகளே பெற முடிந்தது.
இருபெரும் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை அதுவரை முன்னிறுத்தி வந்த விஜயகாந்த், 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வினருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
இக்கூட்டணி 202 இடங்களை பிடித்தது. போட்டியிட்ட 40 இடங்களில் 29 இடங்களில் தே.மு.தி.க. வென்றது. இதன் மூலம், தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி எதிர்கட்சியாக சட்டசபைக்குள் அக்கட்சி காலடி எடுத்து வைத்தது. இந்த வெற்றியின் காரணமாக தே.மு.தி.க.விற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் நிரந்தர சின்னம் ஒதுக்கப்பட்டது.
2016 பிப்ரவரி மாதம், 8 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்தார்.
2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. போட்டியிட்டது. ஆனால், விஜயகாந்தின் அரசியல் வியூகம் அவரே எதிர்பாராத விதமாக அவருக்கு அதிர்ச்சி தோல்வியை தந்தது. அவரது கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களையும் பறி கொடுத்தது.
இதை தொடர்ந்து விஜயகாந்தின் கட்சி இறங்குமுகத்தை சந்திக்க துவங்கியது.
அவரது மைத்துனரான எல்.கே. சுதீஷ் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என பல நிர்வாகிகள் குற்றம் சாட்ட துவங்கினர்; ஒரு சிலர் கட்சியை விட்டு வெளியேறினர்.
விஜயகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளால், அவர் தொண்டர்களை சந்திப்பதை குறைத்து கொண்டார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.
அரிதாக தொலைக்காட்சிகளில் விஜயகாந்த் தோன்றும் போது அவரது உற்சாகமான பேச்சை எதிர்பார்த்த ரசிகர்களும் தொண்டர்களும், அதற்கு மாறாக அவர் உடல்நலம் குன்றிய தோற்றத்துடன் காணப்படுவதை கண்டு உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.
இது மேலும் தே.மு.தி.க.விற்கு சரிவை ஏற்படுத்துவதாக அமைந்தது. சிறிது சிறிதாக அரசியல் அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு வந்த விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க. மக்களிடையே செல்வாக்கை இழக்க தொடங்கியது. கட்சி பணியை விஜயகாந்தின் மனைவி கவனித்து வந்தாலும் தே.மு.தி.க.வால் செல்வாக்கான கட்சியாக வளர முடியவில்லை.
ஜெயலலிதாவுடன் சுமுக உறவில் இருந்திருந்தால், தே.மு.தி.க. வளர்ச்சி பெற்றிருக்கும் என சில விமர்சகர்களும், மாற்று கட்சியாக முன்னிறுத்தி களம் இறங்கிய ஒருவர் இரு கட்சியினருடனும் கூட்டணி வைத்து கொள்ளாமல் தனது அரசியல் பாதையை வகுத்து சென்றிருக்க வேண்டும் என வேறு சில விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
- விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் தீபக் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை முன்பு தொண்டர்கள் மிகுந்த சோகத்துடன் காத்திருக்கின்றனர்.
- 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
- 'டங்கி' திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபிஸில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது.
ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.
ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது.
'டங்கி' திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபிஸில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது. தற்போது இந்த திரைப்படம் 250 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'டங்கி' திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்த மூன்றாவது திரைப்படமாகும்.
டங்கி போஸ்டர்
இத்திரைப்படம் சுமார் 29.25 கோடி ரூபாய் முதல் 30.25 கோடி ரூபாய் வரை வசூலித்து, ஞாயிற்றுக்கிழமையன்று அதன் மொத்த வசூல் 102.50 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் பத்தாவது படமாக 'டங்கி' இடம்பெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் 250 கோடி ரூபாயை எட்டி, 250 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது.
- இயக்குனர் விவேக் ஆத்ரேயா புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இதில் நடிகர் நானி கதாநாயகனாக நடிக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதில் நானி மற்றும் பிரியங்கா மோகன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Back in action! ?#SaripodhaaSanivaaram shoot resumes today with a pivotal moments between Natural ? @NameIsNani and @priyankaamohan ❤️?@iam_SJSuryah #VivekAthreya @JxBe @muraligdop @karthikaSriniva @IamKalyanDasari @DVVMovies pic.twitter.com/YKehyHYzF6
— DVV Entertainment (@DVVMovies) December 27, 2023
- மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் 'லவ்வர்'.
- இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.
குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான 'வெலகாத' பாடல் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 'லவ்வர்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் 90 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஏழு கடல் ஏழு மலை போஸ்ட்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஜனவரி 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
முடிவில்லாக் காதலின்
— Madhan Karky (@madhankarky) December 27, 2023
முதல் துளி#ஏழுகடல்ஏழுமலை
ஜனவரி 2 முதல்#ராம்@thisisysr @sureshkamatchi @thinkmusicindia pic.twitter.com/OYSWbWtN87
- ’பாரசைட்’ திரைப்படம் நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றது.
- இந்த படத்தில் லீ சுன் கியுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பாரசைட்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த படத்தில் லீ சுன் கியுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் லீ சுன் கியுன் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான 'லவ்வர்ஸ்' என்னும் சிட்காம் தொடரில் அறிமுகமானார். 2014-ஆம் ஆண்டு இவர் நடித்த 'எ ஹார்ட் டே' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக இந்த ஆண்டு வெளியான 'ஸ்லீப்' என்ற படத்தில் லீ சுன் கியுன் நடித்திருந்தார்.
48 வயதாகும் லீ சுன் கியுன் இன்று (டிசம்பர் 27) சியோல் நகரில் உள்ள ஒரு பார்க்கில் தனது காரின் உள்ளே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லீ சுன் கியுன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.