search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், 'தளபதி 68' படத்திற்கு 'கோட்' (Goat) என படக்குழு தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், 'தளபதி 68' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு 'தளபதி 68' படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு டைட்டில் தொடர்பான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.
    • இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் விஜய். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.


    இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். அதிலும் நடிகர் ரஜினியின் படங்கள் அசால்ட்டாக ரூ.100 கோடி வசூலை குவித்து ஹிட் அடிக்கும். இதன் மூலம் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை ரஜினி தக்க வைத்து கொண்டிருக்கிறார்.


    இந்த நிலையில், ரஜினி நடித்த தர்பார் , அண்ணாத்த போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இந்த நேரத்தில் விஜய் நடித்த படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், படத்தின் பிரீ பிசினஸுக்கும் வழியை அமைத்தது. இந்த நேரத்தில் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன.


    இதைத்தொடர்ந்து திரை ஆர்வலர்கள் பலர் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்று கூறத் தொடங்கினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும், இந்த சர்ச்சை விவாதமாக மாற அந்த விவாதத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் விதமாக இருவரின் படங்களிலும் இடம்பெற்றிருந்த பாடல்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் விதமாக அமைந்ததாக கூறப்பட்டது.


    இந்த சர்ச்சையானது இதோடு முடியாமல் பிரபலங்கள், தலைவர்கள் என பலர் கருத்து தெரிவிக்கும் வகையில் பேசப்பட்டது. இவ்வாறு பல சர்ச்சைகளை உள்ளடக்கிய "சூப்பர் ஸ்டார்" பட்டம் யாருக்கு என்பது ஒரு முடிவில்லா பிரச்சனையாக தொடர்கிறது...

    • சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • ’அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியனது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், 'அனிமல்' திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 'அனிமல்' திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் உள்ள நிலையில் கூடுதலாக 8 நிமிடங்கள் சேர்க்கப்பட்டால் 3 மணிநேரம் 30 நிமிடம் ரன்னிங் டைம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படம் ஜனவரியில் ஓடிடி-யில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சலார்’.
    • இப்படம் தொடர்ந்து வசூலில் முன்னேறி வருகிறது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் நடித்துள்ளார். கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.


    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.295.7 கோடியை வசூல் செய்தது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வசூல் ரேஸில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.


    இந்நிலையில், 'சலார்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 'சலார்' திரைப்படம் இவ்வளவு ஒரு பிரமாண்ட அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் இந்த மேக்கிங் வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்படுகிறது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நடிகர் ரன்பீர் கபூர் மறுத்ததாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, "நான் ஆடியோ டீசரில் 'சூப்பர் ஸ்டார்' என்ற டேக்கை இணைத்திருந்தேன் இதை பார்த்த ரன்பீர் அந்த டேக்கை எடுக்கும் படி கூறினார்.


    ஆனால், நான் இது என்னுடைய உணர்வு என்று ரன்பீரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் ஒன்றாக வேலை பார்த்த மூன்று வருடங்களில் ரன்பீர் இதை மட்டும் தான் மறுத்துள்ளார். நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் நான் செய்வேன் என்று அந்த டேக்கை இணைத்தேன்" என கூறினார்.


    மேலும், "நான் ரன்பீர் கபூரின் பல படங்களை ஹைதராபாத்தில் பார்த்திருக்கிறேன். அவரை கொண்டாடும் ரசிகர்களை பார்த்திருக்கிறேன். ஒரு நட்சத்திரத்திற்கு மட்டுமே அந்த வரவேற்பு கிடைக்கும். ரன்பீருக்கு 'சூப்பர் ஸ்டார்' டேக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். யாரும் என்னிடம் ஏன் அந்த டேக்கை கொடுத்தோம் என்று கேட்கவில்லை" என்று கூறினார்.

    • அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இறைவன் மிகப் பெரியவன்’.
    • இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் அமீர். இவர் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

    தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இறைவன் மிகப் பெரியவன்'. ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாஃபர் சாதிக் தயாரிக்கும் இந்த படத்துக்கான கதையை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசை இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.


    இறைவன் மிகப் பெரியவன் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், இந்த போஸ்டரில் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


    • கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
    • இந்த நெறிகளை மதம் சார்ந்தும் வாழலாம்; மதம் கடந்து மனம் சார்ந்தும் வாழலாம்...

    சென்னை :

    கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ மக்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சகிப்புத்தன்மை

    சகமனிதனை மதித்தல்

    தன்னுயிர் போலவே

    மண்ணுயிர் பேணுதல்

    என்பனவெல்லாம்

    நீதி மொழிகள் அல்ல;

    ஏசு பெருமான்

    வாழ்ந்து காட்டிய

    வாழ்வியல் நெறிகள்


    இந்த நெறிகளை

    மதம் சார்ந்தும் வாழலாம்;

    மதம் கடந்து

    மனம் சார்ந்தும் வாழலாம்


    தத்துவம் தந்த

    உத்தமர் பிறந்தநாள்

    வாழ்த்திக்கொள்ள மட்டுமல்ல

    வாழ்வதற்கும்


    இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் வைரமுத்து கூறியுள்ளார்.

    • நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் சத்தமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல சென்னை விமான நிலையம் வந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.


    இந்நிலையில், நடிகர் அஜித் நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்டார். அதாவது, அஜித் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே பாவனா வர.. அஜித் அவரிடம் கொஞ்சம் லேட்டாகி விட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார். அப்போது பாவனா நீங்கள் லேட்டாக வருவீர்கள் என்று சொன்னதால், நானும் கொஞ்சம் லேட்டாகி வந்தேன் என்று சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    அஜித்- பாவனா 'அசல்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • வுண்டர்பார்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
    • என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருக்கும் நடிகை அனிக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    நடிகர் தனுஷ் பா பாண்டி படத்தின் மூலம் 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தற்போது நடிகர் தனுஷ், தான் நடிக்கும் 50-வது படத்தை இயக்கி வருகிறார்.

    தொடர்ந்து, தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் சர்ப்ரைசாக வெளியிடப்பட்டு இருக்கிறது. தனது வுண்டர்பார்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில், இளம் பட்டாளமே களம் இறங்கியுள்ளது. என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருக்கும் நடிகை அனிக்கா, பிரியா வாரியர், பவிஷ், ரபியா, மேத்யூ, ரம்யா, வெங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, DD3 குறித்த அப்டேட் 24.12.2023 (இன்று) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில், "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்கிற தனது படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," DD3- நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.. ஒரு வழக்கமான காதல் கதை" என்று குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், அந்த பதிவுடன் DD3 போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டருக்கான லிங்க்கும் வெளியிடப்பட்டுள்ளது.

    தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'லவ்வர்'.
    • 'லவ்வர்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு காதர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

    8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார்.



    இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.



    இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. 'லவ்வர்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு காதர் தினத்தன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் ஏ.எல்.விஜய் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.


    எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' படத்தின் தணிக்கைக்கு முந்திய பணிகளில் அருண் விஜய் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.


    அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நடிகை சாக்‌ஷி அகர்வால் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது.


    இவர் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.


    இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில், இவர் டார்ஜிலிங்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.


    ×