search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
    • இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "கேப்டன் மில்லர்." அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் கேப்டன் மில்லர் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

     


    இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது. 



    • பைட் கிளப் படத்தின் வசூல் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
    • பைட் கிளப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கடந்த வெள்ளி கிழமை (டிசம்பர் 15) வெளியான பைட் கிளப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ரூ. 5 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு சில தினங்களுக்கு முன் அறிவித்து இருந்தது.

     


    இந்த நிலையில், பைட் கிளப் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார்.



    • பிரிஜ்பூஷன் உறவினர் தலைவராக தேர்வானதைக் கண்டித்து மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என்றார் சாக்‌ஷி மாலிக்.
    • மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கின் முடிவுக்கு நடிகை ரித்திகா சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், புதிய தலைவராக ஒரு பெண் தான் வரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் ஒரு பெண்கூட இல்லை. பிரிஜ் பூஷனின் உறவினரை தான் தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்தார்.


    இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது எதிர்ப்பை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அதில், வீராங்கனை சாக்ஷி மாலிக்கை இப்படி பார்க்கும்போது இதயம் உடைகிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை பெற்றுத் தந்த சாக்ஷி மாலிக் இவ்வளவு ஆண்டுகள் கடின உழைப்பினை, கனவுகளை நம்பிக்கைகளை கைவிட்டு 'நான் விலகுகிறேன்' என கூறுவது பேரழிவானது. தற்போதும், போராட்டத்தின் போதும் சாக்ஷி மாலிக் எதிர்கொண்ட அவமரியாதை கொடுமையானது என பதிவிட்டுள்ளார்.

    நடிகை ரித்திகா சிங் 'இறுதிச்சுற்று' திரைப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார்.
    • புதிய வெப் சீரிஸ்-ஐ இயக்க இருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். இவர் எழுதி, இயக்கி, நடித்த வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல்லாக அமைந்தது. இதோடு இவர் இயக்கிய படங்களும் வெற்றி வாகை சூடியுள்ளன.

     


    இந்த நிலையில், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸ் இயக்க இருப்பதாக சசிகுமார் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த வெப் சீரிசில் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    • கடற்கரையில் காலியாக இருக்கும் பென்ச்-இன் புகைப்படம் உள்ளது.
    • 2017-ம் ஆண்டு இயக்குனர் அவதாரம் எடுத்தார் நடிகர் தனுஷ்.

    நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், DD3மற்றும் 24.12.23 என்ற எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் கடற்கரையில் காலியாக இருக்கும் பென்ச்-இன் புகைப்படம் உள்ளது.

    இவைதவிர படம் தொடர்பாக வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த இதர தகவல்கள் டிசம்பர் 24-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

     


    பா பாண்டி படத்தின் மூலம் 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார் நடிகர் தனுஷ். தற்போது நடிகர் தனுஷ், தான் நடிக்கும் 50-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் சர்ப்ரைசாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 



    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’.
    • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


    இந்நிலையில், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, 'அனிமல்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2025-ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் இந்த பாகத்திற்கு 'அனிமல் பார்க்' என பெயர் வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் மன்சூர் அலிகான் மீது பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
    • இவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல்உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார்.



    இத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைக்கையில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததுபோது இந்த விவகாரத்தில் திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று கூறியதோடு எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், மன்சூர் அலிகான் மனுவிற்கு பதிலளிக்கும் படி நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.


    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    • படத்தின் அனைத்து பாகங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.
    • பைக், கார் ஸ்டண்ட்களை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டு இருந்தது.

    இயக்குனர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' (The Fast and Furious). இப்படத்தின் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பத்தாவது பாகமும் உருவானது. இப்படத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பைக், கார் ஸ்டண்ட்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த வின் டீசல் மீது அவரது உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2010-ம் ஆண்டு வின் டீசலிடம் பணிபுரிந்த அஸ்ட்ரோ ஜோனாசன் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    படப்பிடிப்பின் போது அட்லாண்டாவில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் பல பெண்களுடன் அறை எடுத்து வின் டீசல் உல்லாசமாக இருந்தார். அதிகாலை நேரத்தில் சினிமா புகைப்படக் கலைஞர்கள் வருவதை அறிந்து அனைவரையும் க்ளியர் செய்துக் கொண்டிருந்தோம். அவரை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்லும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அந்த பெண்கள் எல்லாம் சென்று விட்ட நிலையில், வின் டீசல் என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். நான் அவருக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில், அவரது சகோதரி என்னை அடுத்த நொடியே வேலையில் இருந்து நீக்கி விட்டார். இவ்வாறு அஸ்ட்ரோ ஜோனாசன் கூறியுள்ளார்.

    13 வருடங்களுக்கு பிறகு நடிகர் மீது அவரது உதவியாளர் பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது.
    • இதன் நிறைவு விழா டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது.

    21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது.

    இந்த விழாவில் இந்த ஆண்டு போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் தோழில், விக்ரம் சுகுமாரனின் இராவண கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டது.



    இதில் சிறந்த படமாக தேர்வான அயோத்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக தேர்வான உடன்பால் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.


    பிரீத்தி அஸ்ரானி

    மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக பிரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டது.

    • படத்தொகுப்பு பணிகளை கோவிந்த். என் மேற்கொண்டுள்ளார்.
    • இந்த படத்தை சாய் ரோஷன் கே.ஆர். இயக்கியிருக்கிறார்.

    கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் "நேற்று இந்த நேரம்".

    பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இருவர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.

     


    கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த். என் மேற்கொண்டுள்ளார். நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் ஜனவரி 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.



    • பைட் கிளப் படத்தின் வசூல் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
    • பைட் கிளப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். கடந்த வெள்ளி கிழமை (டிசம்பர் 15) வெளியான பைட் கிளப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     


    இந்த நிலையில், பைட் கிளப் படத்தின் ராவண மவன் பாடலின் வீடியோ படக்குழு வெளியிட்டு உள்ளது. கடந்த வெள்ளி கிழமை வெளியான பைட் கிளப் திரைப்படம் ரூ. 5 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. 


    • நெதர்லாந்தில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.
    • திரைப்பட விழாவில் மூன்று தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன.

    ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி துவங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சர்வதேச அளவில் முக்கிய மற்றும் பிரபலமான திரைப்பட விழாவாக இது பார்க்கப்படுகிறது.


     

    இந்த நிலையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் "லைம்லைட்" பிரிவில் திரையிட விடுதலை - 1, 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் தேர்வாகி உள்ளன. இதேபோன்று "பிக் ஸ்கிரீன்" பிரிவில் இயக்குனர் ராமின் "ஏழு கடல் ஏழு மலை" படம் திரையிட தேர்வாகி இருக்கிறது.


     

    சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகின் மூன்று படங்கள் தேர்வாகி இருப்பது ரசிகர்கள் இடையே பாராட்டை பெற்று வருகிறது.

    ×