search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரபலங்கள் பலர் உதவி செய்து வருகின்றனர்.
    • நடிகர்கள் பலர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதைத்தொடர்ந்து, பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் என தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். மேலும், நடிகர்கள் பலர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.


    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "'தண்ணீர் தண்ணீர்

    எங்கணும் தண்ணீர்

    குடிக்கத்தான் இல்லை ஒருதுளி'

    எனும் ஆங்கிலக் கவிதை

    நினைவின் இடுக்கில் கசிகிறது

    வீட்டுக்குத் தண்ணீர் இல்லை

    என்பது சிறுதுயரம்

    வீட்டுக்குள்ளேயே தண்ணீர்

    என்பது பெருந்துயரம்

    விடியும் வடியும் என்று

    காத்திருந்த

    பெருமக்களின் துயரத்தில்

    பாதிக்கப்படாத நானும்

    பங்கேற்கிறேன்

    என் கடமையின் அடையாளமாக

    முதலமைச்சரின்

    பொது நிவாரண நிதிக்கு

    ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்

    பொருள்கொண்டோர்

    அருள்கூர்க

    சக மனிதனின் துயரம்

    நம் துயரம்

    இடர் தொடராதிருக்க

    இனியொரு விதிசெய்வோம்;

    அதை எந்தநாளும் காப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் மதுரை மோகன் பல படங்களில் நடித்துள்ளார்.
    • முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது.

    நடிகர் மதுரை மோகன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.

    நடிகர் மதுரை மோகன் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்தும் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் இவருக்கு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான 'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது.


    இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் மதுரை மோகன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் பலர் இவருக்கு சமூக வலைதளத்தில் மூலம் இரக்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தங்கலான்'.
    • இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து இயக்குனர் பா.இரஞ்சித் நேற்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தின் மூலமாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித்தை நேரில் சந்தித்து நடிகர் விக்ரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை 'தங்கலான்' படக்குழு இணையத்தில் பகிர்ந்துள்ளது.


    • உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் லீலாவதி அனுமதிக்கப்பட்டார்.
    • அவள் ஒரு தொடர் கதையில் நடிகர் கமல்ஹாசனுடனும், அவர்கள், கர்ஜனை ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்துடனும் நடித்துள்ளார்.

    பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி பெங்களூரு அருகே சோழதேவனஹள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக நோய்வாய்பட்டு அவர் கடந்த சில நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார்.

    இந்த நிலையில் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் லீலாவதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.

    தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் பிறந்த லீலாவதி கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'பட்டினத்தார்', 'சுமைதாங்கி', 'வளர்பிறை', 'அவள் ஒரு தொடா் கதை', 'நான் அவனில்லை', 'அவர்கள்', 'புதிர்', 'கர்ஜனை' ஆகிய 8 படங்களில் நடித்துள்ளார். அவள் ஒரு தொடர் கதையில் நடிகர் கமல்ஹாசனுடனும், அவர்கள், கர்ஜனை ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்துடனும், வளர்பிறையில் நடிகர் சிவாஜிகணேசனுடனும் நடித்துள்ளார்.

    இந்நிலையில் பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    பழம்பெரும் கன்னட திரையுலக பிரபலம் லீலாவதியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். சினிமாவின் உண்மையான அடையாளமான அவர், பல படங்களில் தனது நடிப்பால் வெள்ளித்திரையை அலங்கரித்தார். அவரது மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க திறமை எப்போதும் நினைவில் பாராட்டப்படும். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்தது.
    • மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்க்குப்பதிவு செய்யப்பட்டது.

    நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடவடிக்கை எடுக்க வேண்டாம்- திரிஷா

    நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.

    இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

    திரிஷாவுக்கு ஆதரவாக சிரஞ்சீவி கருத்து

    "நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கண்டிக்கத்தக்க கருத்துகள் என் கவனத்திற்கு வந்தது. அவரின் இந்த மரியாதை இல்லாத அருவருக்கத்தக்கப் பேச்சு நடிகைக்கு மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது.

     

    இதனை கடுமையான வார்த்தைகள் கொண்டு கண்டிக்க வேண்டும். இதுபோன்ற வக்கிரமான வார்த்தைகள் பெண்களை துவண்டு போகச் செய்திடும். திரிஷாவுக்கு மட்டுமல்ல இது போன்ற மோசமான கருத்துகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் ஆதரவாக உடன் நிற்கிறேன்" என சிரஞ்சீவி குறிப்பிட்டிருந்தார்.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
    • திரைப்பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


    இதைத்தொடர்ந்து, பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது.


    இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர். 'வெப்பன்' படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


    தனுஷின் 50-வது படம் வட சென்னை சார்ந்த படம் என்பதால் இசையமைப்பாளர் தேவாவை வில்லானாக நடிக்க வைக்க தனுஷ் அணுகியுள்ளார். ஆனால், தேவா தனக்கு வசனங்களை மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கும் என்று மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், "தனுஷ் மூன்றாவதாக படம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் அவரின் சொந்தகாரர் மகன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கும் நான் தான் இசையமைக்கவுள்ளேன். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்" என கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • நடிகர்கள், தன்னார்வலர்கள் என பலர் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


    அன்னபூரணி படக்குழு

    இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள், தன்னார்வலர்கள் என பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.


    அன்னபூரணி படக்குழு

    இந்நிலையில், அன்னபூரணி படக்குழு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

    இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அன்னபூரணி' என்பது குறிப்பிடத்தக்கது.


    • விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற இருந்த ‘கலைஞர் 100 விழா’ தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் 'கலைஞர் 100 விழா' பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

    அதன்படி தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும்விதமாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 'கலைஞர் 100 விழா' பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற இருந்த 'கலைஞர் 100 விழா' தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.14 லட்சத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டுள்ளார்.
    • பணத்தை திருப்பி கொடுக்காததால் முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு ரூ.15 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


    இந்த வழக்கு நீதிமன்றத்தில் பல முறை விசாரணைக்கு வந்தும் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் இன்று நடுவர் நீதிமன்ற நீதிபதி பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த பிடிவாரண்ட் சென்னை, அண்ணா நகர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பலரை இதுபோன்று ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்பம் 'பைட் கிளப்' .
    • 'பைட் கிளப்' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'பைட் கிளப்' (Fight Club) திரைப்படத்தின் முதல் பாடலான 'யாரும் காணாத' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 'பைட் கிளப்' (Fight Club) திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.




    • நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
    • யஷ் நடிக்கும் 19-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கே.ஜி.எப்' படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் பிரபலமானவர் யஷ். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்த நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    நடிகர் யஷ்ஷின் 19-வது படத்தை இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, இப்படத்திற்கு 'டாக்ஸிக்' (TOXIC) என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இப்படம் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    இயக்குனர் கீது மோகன்தாஸ், தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான 'பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அதுமட்டுமல்லாமல், மாதவன் நடித்த 'நள தமயந்தி' படத்தில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் 2019-ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'மூத்தோன்' என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ×