search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை சுப்புலட்சுமி பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

    கேரளாவில் பிறந்த ஆர்.சுப்புலட்சுமி, அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அவர், திரைத்துறையில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.


    முதன்முறையாக மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான சுப்புலட்சுமி அதன்பின்னர், கல்யாணராமன், ராப்பகல் என 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், விஜய்யின் பீஸ்ட், விண்ணை தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மனி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


    87 வயதான நடிகை சுப்புலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பலரும் சமூக வலைதளத்தின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர். தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தியதன் பேரில் மன்சூர்அலிகான் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் திரிஷாவிடம் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். பின்னர் மன்சூர் அலிகான், திரிஷாவிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை என்று பல்டி அடித்தார். திரிஷா மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

    மன்சூர்அலிகானின் பேச்சு தொடர்பாக திரிஷாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து அவருக்கு ஆயிரம்விளக்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி கடிதம் அனுப்பி உள்ளார்.



    அதில் மன்சூர்அலிகான் மீது போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக உங்களிடம் சில விளக்கங்களை கேட்க வேண்டியதுள்ளது. எனவே நீங்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, தாங்கள் அனுப்பியுள்ள கடித்தை ஏற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதா? இல்லை எழுத்துப்பூர்வமாக தபாலில் விளக்கம் அளிப்பதா? என்பது திரிஷாவின் விருப்பமாகும் என்று தெரிவித்தனர். இந்த கடிதத்தை அனுப்பி சில நாட்கள் ஆகிவிட்டது என்றும், இதற்கு திரிஷா விளக்கம் அளிக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனுப்பி உள்ள கடிதத்தை ஏற்று திரிஷா விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’.
    • ’அயலான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'அயலான்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' என்பது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.60 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக தகவல் வெளியானது. இப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.


    ஜிகர்தண்டா 2 போஸ்டர்

    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 8-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
    • பிரம்மாண்ட சண்டைக்காட்சி, சேசிங் காட்சி படமாக்கப்பட்டது.

    7 C-ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இந்த படம், விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்தது.

    இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இந்த படத்தை காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய முழு நீள கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

     

    இதுவரை மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்படாத பல முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சைனீஸ் சண்டை கலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சி, சேசிங் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மிகப்பிரபலமான பத்துமலை முருகன் கோவிலில், இறுதிக்காட்சியை படமாக்கி, படக்குழு படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது.

    விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த், யோகிபாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் இதன் பின்னணி வேலைகள் துவங்க இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    • டிசம்பர் 14 -ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.
    • அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இந்த விழாவை நடத்தி வருகிறது.

    21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 -ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தோசினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இந்த விழாவை நடத்தி வருகிறது.


    இந்நிலையில், இந்த விழாவில் இந்த ஆண்டு போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் தோழில், விக்ரம் சுகுமாரனின் இராவண கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமீரிடம் வருத்தம் தெரிவித்து ஞானவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
    • இந்த அறிக்கையை விமர்சித்து சசிகுமார் பதிவிட்டிருந்தார்.

    இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையைச் சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் ராஜா, அமீரிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.


    இந்நிலையில், இந்த அறிக்கையை விமர்சித்து இயக்குனர் சமுத்திரகனி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது... நீங்க செய்ய வேண்டியது., எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!

    நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...! அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு...


    சமுத்திரகனி அறிக்கை

    அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்...அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க... நீங்கதான், "அம்பானி பேமிலியாச்சே..!" காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..!!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு முன்பு சசிகுமார், ஞானவேல் அறிக்கையை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகை நயன்தாரா பல படங்களில் நடித்து வருகிறார்.
    • ’ஜவான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, ரஜினி, விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்திருந்த 'ஜவான்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.


    நயன்தாரா பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை கவனிப்பதற்காக நயன்தாரா சினிமா துறையை விட்டு விலகிவிடுவார் என பலர் நினைத்திருந்தனர். ஆனால் நயன்தாரா குழந்தைகளையும் கவனித்து நடிப்பு மற்றும் பிசினஸ் இரண்டையும் மேனேஜ் செய்து வருகிறார்.


    நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் கடந்த 18-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு பிறந்த நாள் பரிசாக மெர்சிடிஸ் மேபேக் கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதன் விலை ரூ. 2.60 கோடியிலிருந்து ரூ. 3.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் தொடர்பான புகைப்படத்தை நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • ஹரிஷ் கல்யாண் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'பார்க்கிங்' படம் பார்த்துள்ள நடிகர் கவுதம் கார்த்திக் படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்று 'பார்க்கிங்' படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையாக நான் மிகவும் படத்தை ரசித்தேன். ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு சிறப்பாக இருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.
    • இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தங்கலான்' படத்தின் டப்பிங் பணியை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள மாளவிகா, "எனக்கு படத் தயாரிப்பின் பயங்கரமான பகுதி டப்பிங் தான். நான் டப்பிங் செய்யும் பொழுது தயவு செய்து யாராவது வந்து எனது கையை பிடித்துக் கொள்ள முடியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.


    • 106 தொகுதிகளில் மாலை 5 மணி வரையும், 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் வாக்குப்பதிவு
    • 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 35,655 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 106 தொகுதிகளில் மாலை 5 மணி வரைக்கும், 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.

    தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்திற்கு வந்தார். அவர் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த இளம் வாக்காளர் ஒருவருடன் வாக்களிப்பது குறித்து பேசினார்.

    அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் எல்லா மொழிகளிலும் அபாரமாக ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    அதேபோல் ஜூனியர் என்.டி.ஆர். அபுல்  ரெட்டி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

    வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "என்னுடைய தெலுங்கானா சகோதர மற்றும் சகோதரிகள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்களிக்கும் நபர்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையை நிறைவேற்ற கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 35,655 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 106 தொகுதிகளில் மாலை ஐந்து மணி வாக்கப்பதிவு நடைபெறும். ஆயுதம் தாங்கிய குழுவால் பாதிக்கப்பட்டுள்ள 13 தொகுதிகளில் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    3.26 வாக்காளர்களில் 1,63,13,268 பேர் ஆண் வாக்காளர்கள். 1,63,02,261 பெண் வாக்காளர்கள் ஆவார்கள்.

    முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி. சஞ்சய் குமார் மற்றும் டி. அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி தேர்தல் தேதி அறிக்கப்பட்டதில் இருந்து தெலுங்கானாவில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்தது.

    பிஆர்எஸ் 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜனதா 111 தொகுதிகளிலும், கவன் கல்யாண் கட்சி 8 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துள்ளது. காங்கிரஸ் சிபிஐ-க்கு ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்து 118 இடத்தில் போட்டியிடுகிறது.

    2.5 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 77 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • பிரபல இயக்குனராக வலம் வரும்பர் லோகேஷ் கனகராஜ்.
    • இவர் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.

    'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.


    இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் முதல் சில தயாரிப்புகள் எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் ஆக்கப்பூர்வமான யோசனைகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.


    பைட் கிளப் போஸ்டர்

    இந்நிலையில், 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பைட் கிளப்'(FightClub) என்ற திரைப்படத்தை லோகேஷ் வெளியிடுகிறார். அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கும் இப்படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

    'பைட் கிளப்'(FightClub) திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    ×