search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தேவிகா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
    • 1990-ம் ஆண்டில் கணவர் தேவதாசுடன் விவகாரத்தான பின்பு சென்னையில் மகள் கனகாவுடன் வசித்து வந்தார்.

    நடிகை குட்டி பத்மினியுடன் சிரித்தபடி அமர்ந்திருப்பவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர். இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் காணம்படும் அவர் வேறு யாருமல்ல நடிகை கனகா தான். சென்னையில் நேற்று முன்தினம் நடிகை குட்டி பத்மினியும் கனகாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்து கொண்டனர். அந்த மகிழ்ச்சியில் எடுத்துக்கொண்ட படம்தான் இது.


    தேவிகா

    கனகாவின் தாயார் தேவிகா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கிறார். 1972-ம் ஆண்டு நடிகர் தேவதாஸ் என்பவருடன் திருமணமாகி அவருக்கு 1973-ம் ஆண்டு பிறந்தவர்தான் கனகா. முதலாளி என்ற படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதி, சிவாஜியின் கர்ணன் படம் உள்பட குலமகள் ராதை, பலே பாண்டியா, ஜெமினியுடன் சுமைதாங்கி என ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் புகழின் உச்சியில் இருந்தவர் தேவிகா.

    1990-ம் ஆண்டில் கணவர் தேவதாசுடன் விவகாரத்தான பின்பு சென்னையில் மகள் கனகாவுடன் வசித்து வந்தார். 2002-ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். அவரது மகளான கனகா 1989-ம் ஆண்டில் ராமராஜனுக்கு ஜோடியாக 'கரகாட்டகாரன்' படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


    கனகா

    தொடர்ந்து ரஜினி, சரத்குமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். அவர் நடித்த படங்கள் மட்டுமின்றி பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. கனகா தந்தையுடன் பிரச்சினை, காதல் தோல்வி, சொத்து பிரச்சனை என தொடர்ந்து பல பிரச்சினைகளால் தனிமையில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நடிகை குட்டி பத்மினி அவரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்துள்ளார். இருவரும் ஒரு ஹோட்டலில் நீண்ட நேரம் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசி மகிழ்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. புகைப்படத்தில் இருப்பது கனகாவா இது? என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


    இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

    'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது, நடிகர் சூர்யா விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி சூர்யா இரண்டு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்நிலையில், நடிகர் சூர்யா ஓய்வெடுப்பதற்காக மும்பை செல்ல இருக்கிறார். இவர் மும்பை செல்வதற்காக விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தின் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.


    இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட்டை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "க(ம)லை …. மிகவும் நேசிப்பதற்கான காரணம் கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் அவரும் ஒருவர்! (அவர் மீதான மரியாதை எழுத்தை மீறியது.) ஸ்ருதிஹாசன் அவர்களை வைத்து ஒரு பாடலை என் புதிய படத்திற்காக படமாக்கிய போது, அவரது அலாதி திறமைகள் (பாட்டும் நடனமும்) என்னை ஆச்சர்யப்படுத்திய வேளையில்,இன்னாரின் மகள் என்ற ஞாபகம் வந்ததால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்பதுணர்ந்தேன்.


    • ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1'.
    • இப்படம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாகவுள்ளது.

    கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.


    ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.


    காந்தாரா பாகம் 1 போஸ்டர்

    இதையடுத்து இப்படத்திற்கு 'காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1' என தலைப்பு வைத்துள்ளதாகவும் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமாக ரிஷப் ஷெட்டி இருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ரன்பீ கபூர் பேசியதாவது, மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நான் இங்கு ஷூட் செய்திருக்கிறேன். எனக்கு சென்னை ரொம்ப பிடிக்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப் இது ரீமேக் இல்லை இது ஒரிஜினல் ஆனால் மிக இண்டென்ஸான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்கு தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குனரோடு அதிக நேரம் செலவிடுவேன்.


    இயக்குனருக்கும் எனக்கும் உள்ள புரிதல் தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக ஓப்பனாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான இயக்குனர்களில் ஒருவர். தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது. ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை.  எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.


    அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும்  இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த  டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்திய படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர், விக்ரம் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் எண்டர்டெயின் செய்ய தான் படம் எடுக்கிறோம் அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப்படத்தை டிசம்பர் 1 திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளியுங்கள் நன்றி என்று பேசினார்.

    • 'பருத்தி வீரன்’ படம் தொடர்பான பிரச்சனை பேசுபொருளாகி இருக்கிறது.
    • இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலர் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


    இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் பொன்வண்ணன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பருத்தி வீரன் திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்! அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல், நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன்.

    அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கியபோது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்!

    பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும், உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானப்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங்... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார்.


    பொன்வண்ணன் அறிக்கை

    பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. இதனால்தான், பணத்துக்காக தனது "படைப்பிற்கு" என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும்.

    படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த 'தேசிய விருது" அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.

    படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும், பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.


    பொவண்ணன் அறிக்கை

    உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக..திருடன், வேலைதெரியாதவர்.. என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..!

    தங்கள் தயாரிப்பில் வந்த 'இருட்டறையில் முரட்டுக்குத்து' திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!

    இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.!பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும், உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற ஆசைகளுடன்.. ப்ரியங்களுடன் பொண்வண்ணன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் சீனுராமசாமி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது வெளியாக தயாராகி உள்ளது.


    இதைத்தொடர்ந்து இயக்குனர் சீனுராமசாமி 'கோழிப் பண்ணை செல்லதுரை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி முன்னாள் நடிகரும் தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இன்று தேனி கோடாங்கிபட்டியில் எனது இயக்கத்தில் கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பூத்திருந்த தூதுவளை சிறு மலரால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைய தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்துகிறேன். அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • சுதா கொங்கரா இயக்குனர் அமீர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பிரசாத் ஸ்டீடியோஸ்-க்கு வெளியே வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.

    இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத் துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துக்களை இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    அந்த வரிசையில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்குனர் அமீர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவில், "2016, பிப்ரவரி 2-ம் தேதி அமீர் அண்ணாவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது நான் பிரசாத் ஸ்டீடியோஸ்-க்கு வெளியே வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்."

    "அந்த சமயத்தில் இறுதி சுற்று படத்துக்காக திரைத்துறையில் இருந்து என்னை பாராட்டிய வெகு சிலரில் அவரும் ஒருவர் என்பதால், அந்த தருணம் எனக்கு அப்படியே நினைவில் இருக்கிறது. அப்போது நான் அவரிடம் கூறியது ஒன்று மட்டும்தான், மதி என்ற கதாபாத்திரத்தை நான் எழுதுவதற்கு முதல் காரணம் முத்தழகு தான்."

    "மேலும் ஒரு ஆண் எழுதிய மிகச் சிறப்பான பெண் கதாபாத்திரம் பற்றி நான் பேசினேன். மதி மற்றும் பொம்மி என இரு கதாபாத்திரங்களில் நடிக்கும் முன், இரண்டு நடிகைகளையும் நான் பருத்தி வீரன் படத்தை எடுத்துக்காட்டுக்காக பார்க்க வைத்தேன். தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளிக்கு நான் செய்யும் மரியாதை இது மட்டும்தான். நான் கூற விரும்புவதும் இதை மட்டும்தான்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
    • முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள் நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது.

    அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். 

    இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், certified rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

    ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். இப்படம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் அசோக் செல்வன் பேசும் போது, "சபாநாயகன் ஜாலியான க்ளீனான எண்டர்டெயினர் திரைப்படம். நடனம் மற்றும் நகைச்சுவைக்காக இப்படத்தில் நான் நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். நான் இவ்வளவு ஹியூமர் செய்வேனா என்று மதன் சார் என்னிடம் ஆச்சரியப்பட்டார். முன்பே எனக்கு நக்கலைட்ஸ் சேனல் மிகவும் பிடிக்கும். லியோன் ஓ மை கடவுளே படத்தில் மிகச்சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார். இப்படத்திலும் கேட்டதும் பிடிக்கும்படியான பாடல்கள் உள்ளன. மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடித்தது பற்றி கேட்கிறீர்கள். நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும் சார். என் மனைவி கீர்த்தி அந்த மாதிரி எதுவும் தவறாக நினைக்கமாட்டார். முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள் நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது. அவைகளை கிளறிவிடும் திரைப்படமாக சபாநாயகன் இருக்கும்" என்றார்.

    • கங்குவா சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது.
    • கங்குவா படத்தில் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

    'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது, நடிகர் சூர்யா விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், விபத்தில் காயமுற்ற நடிகர் சூர்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி அவர் இரண்டு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே சூர்யா இடம்பெறாத காட்சிகளை படமாக்கும் பணிகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 

    • படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவரேற்பு கிடைக்கவில்லை.
    • ரீ-ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது வெளியாகின.

    கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆளவந்தான். ரிலீசான போதே அதநவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஆளவந்தான் படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவரேற்பு கிடைக்கவில்லை. எனினும், இந்த படத்தின் ரீ-ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன.

    அந்த வரிசையில், ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் பதிப்பு உருவாக்கப்பட்டு, ரீ-ரிலீசுக்கு தயாராகி வருவதை தயாரிப்பாளரான எஸ். தானு தெரிவித்து இருந்தார். மேலும் இதற்காக படத்தின் இரண்டு பாடல்களும் வெளியிடப்பட்டு விட்டன.

    இந்த நிலையில், ஆளவந்தான் படம் ரிலீசாகும் அதே தினத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் தங்களது நட்சத்திரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் மோதவிருப்பதை ஒட்டி சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் படம் ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படமும், இதே தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் மற்றும் முத்து படங்கள் ரீ-ரிலீஸ் ஆவது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
    • வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.

    அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.

    அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.

    ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.

    காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.

    சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

    இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.

    பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×