என் மலர்
சினிமா செய்திகள்
- ஹரி இயக்கத்தில் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே இன்று நடந்தது.
இந்நிலையில், நடிகர் விஷால் படப்பிடிப்பு தளத்தில் விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவர்களுடன் வந்திருந்த பெண் ஒருவரை பார்த்து விஷால் சாப்டியாமா? என்று கேள்வி கேட்க அதற்கு அந்த பெண் இல்லை என்று பதிலளித்தார். பதற்றமடைந்த விஷால் அருகில் இருந்தவரை பார்த்து முதல்ல சாப்பாடு போடுங்க என்று காட்டமாக கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 'உங்கள் ரசிகன் என்று சொல்ல பெருமையாக இருக்கிறது' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- முத்துராமன், கோபால்சாமியிடம் ரூ.3 கோடி தந்தால் தமிழ்நாடு அரசில் உயர்பதவி வாங்கி தருவதாக கூறி உள்ளார்.
- அரசு முத்திரை, தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
சேலத்தைச் சேர்ந்த கோபால்சாமி என்பவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் மற்றும் முபாரக் ஆகியோர் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பின் தேசிய தலைவர் என தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
அப்போது முத்துராமன், கோபால்சாமியிடம் ரூ.3 கோடி தந்தால் தமிழ்நாடு அரசில் உயர்பதவி வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதை உண்மை என்று நம்பி கோபால்சாமி 2 தவணைகளில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முத்துராமனின் நண்பர் துஷ்யந்த் யாதவ் என்பவரிடம் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்று கொண்ட அவர்கள் அரசு பதவி வாங்கி தரவில்லை. இதையடுத்து கோபால்சாமி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். கடந்த வாரம் சேலத்தில் எம்.எஸ்.எம்.இ. புரொமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் அந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன், செயலாளரான துஷ்யந்த் யாதவ், தமிழக தலைவர் நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தெரியவந்ததும் சூரமங்கலம் போலீசார் விரைந்து சென்று முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அரசு முத்திரை, தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே வீரேந்திர சவுத்ரி சேலம் போலீசாருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் தனக்கு தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் விசாரணைக்கு வர முடியவில்லை. உடல்நிலை சரியானதும் விசாரணைக்கு ஆஜராக வருவதாக தெரிவித்து இருந்தார். இதற்கிடையே இந்த மோசடி வழக்கு சூரமங்கலம் போலீசில் இருந்து சேலம் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 'சீதா ராமம்' படத்தின் மூலம் மிருணாள் தாகூர் திரையுலகில் தனக்கான இடத்தை பெற்றார்.
- தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான மிருணாள் தாகூர், இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர். பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் மிருணாள் தாகூர் திரையுலகில் தனக்கான இடத்தை பெற்றார். மேலும், இவருக்கு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இவர் இப்போது, தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், விஜய் தேவரகொண்டாவுடன் 'ஃபேமிலி ஸ்டார்' படத்திலும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திலும் மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மிருணாள் தாகூர் பிரபல இந்தி ராப் பாடகரும் பாடலாசிரியருமான ஆதித்யா பிரதோக் சிங்கை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. அதாவது, நடிகை ஷில்பா ஷெட்டி நடத்திய தீபாவளி பார்ட்டியில், இருவரும் கைகோத்தபடி ஒன்றாக செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஆதித்யா பிரதோக் சிங் , "இணைய நண்பர்களே, உங்களை ஏமாற்றியதற்கு மன்னியுங்கள். நீங்கள் நினைப்பது போல் எதுவுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
- விஷால் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே இன்று நடந்தது. படப்பிடிப்பில் நடிகர் விஷால், கதாநாயகி பிரியா பவானி சங்கர் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இதற்காக ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் போல செட் உருவாக்கப்பட்டு இருந்தது.
படப்பிடிப்பு நடக்கும் இடம்
கதாநாயகி பைக்கில் செல்வது போலவும் கைதிகளை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்வது போல காட்சிகள் இன்று படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு நடைபெறும் இடங்களை சுற்றிலும் பாதுகாவலர்கள் நிற்க வைக்கப்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ஏராளமானோர் குவிந்ததால் கோட்டை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
- சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'கங்குவா' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினி மும்பை சென்றுள்ளார். அதாவது, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
- நடிகை கீர்த்தி சுரேஷ் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
- இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் குறிப்பிடத்தக்க கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடரி, ரெமோ, மாமன்னன் என பல படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். மேலும் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் மார்க்கெட்டுக்காக மட்டுமல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் மிகவும் வரவேற்பை பெற்ற படம் நடிகையர் திலகம். இந்த படம் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார்.
சைரன், ரகு தாதா, ரிவால்வர் ரீட்டா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், அட்லீ இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி பல பரிமாணங்களில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
With love and Gratitude ❤️??#10years pic.twitter.com/7oXslvuh8I
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 14, 2023
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.
- இந்த படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புத படைப்பு. இந்நாளின் திரையுலக நடிகவேன் எஸ்.ஜே.சூர்யா. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருப்பதாக" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படக்குழுவினர் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி தலைவா.. உங்களுடனான ஒரு மணி நேர உரையாடல் எங்கள் படக்குழுவினருக்கு நேர்மறையான எண்ணத்தை கொடுத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
- தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
- ஜிகர்தண்டா இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர்," 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புத படைப்பு. இந்நாளின் திரையுலக நடிகவேன் எஸ்.ஜே.சூர்யா. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருப்பதாக" நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.
- தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
- இப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில், "இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….
நாந்தாண்டா நீதி ….
நாந்தாண்டா நீதி …." என்று குறிப்பிட்டு முதல் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
- மரணமடைந்த கலாபவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.
- அவரது மரணம் கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது.
தமிழ், மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கலாபவன் மணி. ஜெமினி, மழை, பாபநாசம் உள்பட பல தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி திடீரென மரணமடைந்தார்.அவரது மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்களும் , சர்ச்சை களும் அப்போது எழுந்தது. 45 வயதில் மரணமடைந்த கலாபவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.
எனவே அவரது மரணம் கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கலாபவன் மரணம் பற்றி விசாரித்து வந்த சி.பி.ஐ. கேரள உயர் நீதிமன்றத்தில் 35 பக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. இதில் விசாரணை குழுவைச் சேர்ந்த உன்னிராஜன் என்ற போலீஸ் அதிகாரி சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி, கலாபவன் மணி தினமும் 12 முதல் 13 பாட்டில் பீர் குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இதுவே அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. கல்லீரல் பாதித்து, ரத்தவாந்தி எடுத்த போதும், கட்டுபாடின்றி பீர் குடிப்பதை அவர் கைவிடவில்லை. மரணமடைந்த அன்று 12 பாட்டில் பீர் குடித்துள்ளார் என்றும் அதில் மெத்தல் ஆல்கஹால் கலந்துள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலாபவன் மணி இறப்புக்கு முதல் நாள் அவர் வீட்டுக்கு வந்து சென்ற நண்பர்கள் ஜாபர், இடுக்கி, தரிக்கிட காபு ஆகியோரிடம் இது குறித்து விரிவான வாக்குமூலம் பெறப்பட்டது. கலாபவன்மணி தனது மரணத்தை தானே தேடிக்கொண்டார் என்று விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
- அஜயன் பாலா 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார்.
- திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம்.
திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார். தற்போது ' மைலாஞ்சி' திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார்.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் 'கன்னிமாடம்' படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். 'கோலிசோடா 2' புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், தங்கதுரை, சிங்கம்பிலி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் தலைப்பான 'மைலாஞ்சி', தற்போது 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' என்று மாற்றப்பட்டுள்ளது.
இப்படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து பேசிய அஜயன் பாலா, "திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது," என்றார்.
மேலும் பேசிய அவர், "பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். இக்கருத்தை வலியுறுத்தும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்" என்று கூறினார்.
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.