என் மலர்
சினிமா செய்திகள்
- சசிதர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம் 'அஜாக்ரதா'.
- இந்த படத்தின் பணிகளுக்காக மிகப்பெரிய அளவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இயக்குனர் சசிதர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம் 'அஜாக்ரதா'. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான குட்டி ராதிகா என அழைக்கப்படும் ராதிகா குமாரசாமி கதாநாயகியாக நடிக்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்தப்படத்தில் ஸ்ரேயாஸ் தல்பேட், சுனில், ராவ் ரமேஷ், ஆதித்யா மேனன், தேவராஜ், வினய் பிரசாத், ஷ்ரவன் மற்றும் பல தென்னிந்திய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். மேலும், பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் அவரது பெயர் அறிவிக்கப்படும்.
குட்டி ராதிகா
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரொடக்ஷன் சார்பில் ரவிராஜ் தயாரிக்கும் இந்த படத்தின் பணிகளுக்காக மிகப்பெரிய அளவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ராதிகா குமாரசாமியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் விதமாக ராதிகாவின் கதாபாத்திர போஸ்டரை ஹிந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிவப்பு நிற பட்டுப்புடவையில் மிகுந்த ஆபரணங்களுடன் அதிரடியாக காட்சியளிக்கிறார் ராதிகா.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா -2’.
- இப்படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜிகர்தண்டா- 2 படத்திற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒய்யாரம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- நடிகர் விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு சமீபத்தில் பாங்காக் சென்றிருந்தது.
விஜய்
இந்நிலையில் நடிகர் விஜய் 'தளபதி 68' படத்தின் பாங்காக் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைகர் 3'.
- இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான ஒரே நாளில் ரூ.40 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பட்டாசு வெடித்த ரசிகர்கள்
இந்நிலையில், 'டைகர் 3' படத்தில் நடிகர் சல்மான் கானின் எண்ட்ரியை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் திரையரங்கில் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சக ரசிகர்கள் தலைத்தெறிக்க ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#भाई का जलवा ओर उनके फैंस का भी ❤️#आज लगा दी भाईजान के फैंस ने ?#Tiger3 । #SalmanKhan #Salmanics pic.twitter.com/NwqJmaQPCR
— KESHAV THAKUR ?? (@Keshu999999) November 13, 2023
- நடிகர் சூர்யாவின் கங்குவா படம் பத்து மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
- கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி கங்குவா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் சூர்யா கையில் நெருப்புடன் நிற்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாக இருக்கிறது.
Dear all wish you a Happy happy Deepavali ? #Kanguva pic.twitter.com/U2ibUBIsQh
— Suriya Sivakumar (@Suriya_offl) November 12, 2023
- ஜிகர்தண்டா 2 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
- ஜிகர்தண்டா 2 படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜிகர்தண்டா- 2 படத்திற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர், ஜிகர்தண்டா 2 படம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான பதிவில், "ஜிகர்தண்டா 2 - திரைக்கதை மற்றும் இயக்கத்தை பொருத்தவரை கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு. கதை- சினிமாவுக்கு மரியாதை. எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி - கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு. சந்தோஷ் நாராயணனின் அதரடியான பின்னணி இசை. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா சிறப்பான நடிப்பு. ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Jigarthanda XX- Best & brilliant work of @karthiksubbaraj in screenplay and direction.Story- Respect to Cinema. Unexpected 2nd half- what a travel &play between the characters. Banger background score by @Music_Santhosh ! @offl_Lawrence & @iam_SJSuryah performances XX.…
— Shankar Shanmugham (@shankarshanmugh) November 12, 2023
- சைரன் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
- ஆண்டனி பாக்யராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், சைரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வெளியான சைரன் படத்தின் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது.
"The Verdict" Double the Blast?Presenting #Siren Teaser and wishing Happy Diwali ? https://t.co/o4qpjYDi28In theaters this December 2023 !!A @gvprakash Musical #SirenTeaser @antonybhagyaraj @KeerthyOfficial @anupamahere @sujataa_HMM @gvprakash @iYogiBabu… pic.twitter.com/6uarTTe0Bs
— Jayam Ravi (@actor_jayamravi) November 11, 2023
- தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார்.
ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.
மோகனா லஷ்மி என்ற சிறுமி நடிகர் ரஜினிகாந்த்தை பார்க்க பல தடவை வந்ததாகவும் ஆனால் இன்று தான் தன்னால் பார்க்க முடிந்தது என்று கண்கலங்கினார்.
- லால் சலாம் படத்தில் விக்ராந்த், விஷ்னு விஷால் நடித்துள்ளனர்.
- இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் லால் சலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
Wishing you a Happy Deepavali ? Proudly presenting the power packed intense TEASER of #LalSalaam ? to double your celebrations ?▶️ https://t.co/wkxS1oUAJTIn Cinemas ?️ PONGAL 2024 Worldwide ☀️? Releasing in Tamil, Telugu, Hindi, Malayalam & Kannada!@rajinikanth… pic.twitter.com/lC9oQkzgUF
— Lyca Productions (@LycaProductions) November 12, 2023
- பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார்.
ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.
- லூசிபரின் இரண்டாம் பாகம் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது.
- இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுதியிருக்கிறார்.
2019-ம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'லூசிபர்'. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். இதில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது. இந்த நிலையில், லூசிபர் 2 எம்புரான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. புதிய போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.
3rd directorial. 2nd part of the franchise. 1st look.#L2E #Empuraan #FirstlookMalayalam | Tamil | Telugu | Kannada | Hindi@mohanlal #MuraliGopy @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @antonypbvr @aashirvadcine @prithvirajprod #SureshBalaje #GeorgePius @ManjuWarrier4… pic.twitter.com/3D5DupUyif
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) November 11, 2023
- ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ரெபெல்’.
- இப்படத்தை அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கியுள்ளார்.
அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிலையில், 'ரெபெல்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவனம் ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ள இந்த டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.