என் மலர்
சினிமா செய்திகள்
- பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லூசிபர் 2 எம்புரான்’.
- இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 'லூசிபர்'. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார். இதில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகுகிறது.
'லூசிபர் 2 எம்புரான்' போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'லூசிபர் 2 எம்புரான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
#L2E #Empuraan First Look. Tomorrow 5pm IST@mohanlal #muraligopy @antonypbvr @aashirvadcine @Subaskaran_A @LycaProductions @gkmtamilkumaran @prithvirajprod #SureshBalaje #GeorgePius @ManjuWarrier4 @ttovino @Indrajith_S @deepakdev4u #sujithvaassudev #NirmalSahadev #Mohandas… pic.twitter.com/rJgWjjVl6P
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) November 10, 2023
- நடிகர் கார்த்தி பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் நடிப்பில் ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' திரைப்படத்தின் மூலம கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கார்த்தி. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் கார்த்திக்கு பாராட்டையும் பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, கைதி என படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'சர்தார்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. கார்த்தியின் 25-வது படமான 'ஜப்பான்' திரைப்படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், கார்த்தியின் 16 வருட சினிமா பயணத்தை விவரிக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என நினைக்கிறீர்களா? என்று கவுதம் மேனன் கார்த்தியிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு கார்த்தி, "சூர்யாவுடன் நடிக்க எனக்கு பயமாக இருக்கு. ஆனால், சில நேரங்களில் ஏன் ஒன்றாக ஒரு படத்தில் நடிக்கக் கூடாது என யோசிப்போம். சில வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இருவரும் சேர்ந்து நடிக்குமாறு கூறினார். நல்ல கதை அமைந்தால் நடிப்போம்" என்று பேசினார்.
- வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார்.
- 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.
இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சலார் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் முதல் காட்சியை எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தனர். மேலும், திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "யானையும் சினிமாவும் கடவுள் நமக்கு கொடுத்த சிறந்த பரிசு. சினிமாவின் சக்தியையும் அதன் பார்வையாளர்கள் குறித்த எங்களின் மனப்பூர்வமான வெளிப்பாடு இது.
இந்த படத்தை நாங்கள் உருவாக்கும் போது கொடுத்த அன்பை நீங்களும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். 4.5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வருவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். படத்தில் இருக்கும் சர்ப்ரைஸை தயவு செய்து உடைத்து விடாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'ஜெயிலர்' திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹுக்கும்' பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோவை பகிர்ந்து அறிவித்துள்ளது.
- ’ஜிகர்தண்டா 2’ திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் 'ஜிகர்தண்டா 2' படத்தின் முதல் காட்சியை பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நேற்று நடிகர் தனுஷ் 'ஜிகர்தண்டா 2' படத்தை பார்த்துவிட்டேன் என்றும் படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்களின் மனங்களை கொள்ளையடித்துவிடும் என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை ரித்திகா சிங் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் - ரித்திகா நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது. மேலும், இவர் 'ஷிவலிங்கா', 'குரு', 'கொலை' போன்ற படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரித்திகா சிங் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ரித்திகா சிங் தனது சிக்ஸ் பேக்ஸ் புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
- நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
'ஜப்பான்' திரைப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து நடிகர் கார்த்தி இப்படத்தின் முதல் காட்சியை காசி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Karthi watching #Japan Movie at Kasi Theatre with Fans♥️?pic.twitter.com/M1jfGhBL7O
— AmuthaBharathi (@CinemaWithAB) November 10, 2023
- ஜிகர்தண்டா 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டதாக நடிகர் தனஷ் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்து இருக்கிறார். மேலும் படம் குறித்த தனது கருத்துக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான பதிவில், "ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டேன். கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான படைப்பு. அற்புதமாக இருப்பது எஸ்.ஜே. சூர்யாவுக்கு வாடிக்கையான விஷயமாகிவிட்டது. ராகவா லாரன்ஸ்-இன் நடிப்பு சிறப்பு. சந்தோஷ் நாராயணின் இசை அழகு. படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்களின் மனங்களை கொள்ளையடித்துவிடும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்," என்று தெரிவித்து இருக்கிறார்.
Watched jigarthandaxx. Fantastic craft from @karthiksubbaraj, being amazing has become an usual deal for @iam_SJSuryah. As a performer @offl_Lawrence is a revelation. @Music_Santhosh u r a beauty. The last 40 mins of d film steals your heart. All the best to the crew and cast.
— Dhanush (@dhanushkraja) November 9, 2023
- ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
'ஜப்பான்' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டச்சிங் டச்சிங்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார்.
- இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இப்படத்தை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மனுஷி' படத்தை இயக்கினார். இப்படம் குறித்த தகவல் எதுவும் பின்னர் வெளியாகவில்லை.
கருப்பர் நகரம் போஸ்டர்
இயக்குனர் கோபி நயினார் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஆர்.ஆர்.பிலிம் மேக்கர்ஸ் மற்றும் ஏ.ஜி.எல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கருப்பர் நகரம்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் 'மாமதுர' பாடலின் வீடியோ இன்று வெளியானது. இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் வெற்றிக்காக படக்குழு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.