search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'தளபதி 68'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு நவம்பர் 1-ஆம் தேதி தாய்லாந்து சென்றதாக தகவல் வெளியானது.


    நடிகர் விஜய்

    இந்நிலையில் நடிகர் விஜய் 'தளபதி 68' படப்பிடிப்பிற்காக தாய்லாந்து புறப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’.
    • இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் 'ஜெய் பீம்'. இந்த படத்தில் லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.



    இந்நிலையில், 'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மகிழ்ச்சியை படக்குழுவினர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா, முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    சூர்யா பதிவு

    அதில், "ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    இந்தியன் 2 போஸ்டர்

    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோவை தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    இந்தியன் 2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'இந்தியன் 2' படத்தின் தெலுங்கு வீடியோவை இயக்குனர் ராஜமவுலியும், இந்தியில் நடிகர் அமீர்கானும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன் லாலும் வெளியிடவுள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • நடிகர் ஜூனியர் பாலையா இன்று காலமானார்.
    • இவருக்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோரோடு நடித்த பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா. தனது கணீர் குரலாலும் நடிப்புத் திறமையாலும் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற இவரது மகன் ஜூனியர் பாலையா. 70 வயதான இவர் 1975-ம் ஆண்டு வெளியான மேல் நாட்டு மருமகள் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

    இதன் பிறகு சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ஜூனியர் பாலையா வயது மூப்பு காரணமாக இன்று காலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த ஜூனியர் பாலையா கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.


    இதையடுத்து இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. கோபுரவாசலிலே, கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, சாட்டை, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான ஜூனியர் பாலையா சித்தி, சின்னபாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

    சாட்டை திரைப்படத்தில் தலைமை ஆசிரியர் வேடத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கும்கி, தனி ஒருவன், புலி உள்ளிட்ட படங்களிலும் இவரது நடிப்பு பாராட்டை பெற்றிருந்தது. ஜூனியர் பாலையாவின் இயற்பெயர் ரகுபாலையா. இவரது தந்தை டி.எஸ்.பாலையாவின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே உள்ள சுண்டன்கோட்டை ஆகும்.

    டி.எஸ்.பாலையா சினிமாவில் கொடிகட்டி பறந்து சென்னையிலேயே குடியேறிவிட்டதால் ஜூனியர் பாலையா சென்னையிலேயே பிறந்து வளர்ந்தார். தந்தையை போன்றே இவருக்கும் 'கணீர்' குரல்தான். உருவ தோற்றமும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கும்.


    50 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வந்த ஜூனியர் பாலையா, 287 படங்களில் நடித்திருக்கிறார். இவரது மனைவி பார்வதி, மகள் நிவேதிதா, மகன் ரோகித் பாலையா. இவரும் சினிமாவில் நடித்து வருகிறார். ஜூனியர் பாலையா கடைசியாக நடித்த படம் 'என்னங்கடா உங்க சட்டம்'. ஜூனியர் பாலையாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மகனான ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தையைப் போலவே நாடக மேடைகளில் தன் கலையைத் தொடங்கி திரையில் வலம் வந்தவர் இன்று மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    பிரியங்கா மோகன் பதிவு

    'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியில் நடிகை பிரியங்கா மோகன் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    • கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’.
    • இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


    இந்தியன் 2 போஸ்டர்

    இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் அறிமுக வீடியோவை நாளை மாலை 5.30 மணிக்கு ரஜினிகாந்த் வெளியிடவுள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கும் ரசிகர்கள் 'இந்தியன் வீடியோவை எந்திரன் வெளியிடுகிறார்' என கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'.
    • இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.



    மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    இந்நிலையில், 'ரெய்டு' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான 'அழகு செல்லம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. காதல் பாணியில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • ’ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் அதிரடி காட்டியது.
    • ஷாருக்கான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸில் அதிரடி காட்டியது.


    இந்நிலையில், 'ஜவான்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ஷாருக்கான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் 'ஜவான்' படத்தை Extended Cut-வுடன் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர்.


    • விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.


    'தங்கலான்' டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது, விக்ரம் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். கலை நயமான நடிகர். பொதுவாக கதாபாத்திரங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று வரைந்து கொடுப்போம். அப்படி செய்து சில புகைப்படக்களை மட்டும் தான் விக்ரமிடம் எடுத்து கொடுத்தேன். ஸ்பாட்டில் அவர் அந்த மாதிரியான ஆளாக மாறி வந்துவிட்டார்.


    ஒவ்வொரு படத்திற்கும் ஏன் இவ்வளவு மெனக்கெடுறீங்கன்னு நான் விக்ரமிடம் கேட்டேன். ஏன்னா விக்ரமிற்கு படப்பிடிப்பின் போது விலா எழும்பில் காயம் ஏற்பட்டது. அப்போது அவர் எனக்கு ஒரு சண்டை காட்சி செய்து தர வேண்டும். நான் சினிமா எடுக்கும் போது பயங்கர சுயநலவாதி, ஆனால் சினிமா எடுக்கும்போது ரொம்ப கூலாக காட்டிக் கொள்வேன். யாரையும் கஷ்டப்படுத்தாம வேலை வாங்க வேண்டும் என்று முயற்சி செய்வேன். ஒருநாள் காலையில் ஆரம்பித்து நான்கு மணிவரை நடித்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.


    ஒரு கதாபாத்திரத்தை உண்மையாக காட்டுவதற்கு ஒரு நடிகர் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரத்தை அந்த நடிகர் எவ்வளவு நம்பி இருப்பார். அந்த நம்பிக்கை எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அதனால் தான் தங்கலான் முழுமையடைந்துள்ளது. அவரிடம் இருந்த கமிட்மெண்டை பார்த்துவிட்டு எனக்கு பயம் வந்துவிட்டது. அதுதான் இன்னும் இந்த படத்தில் நல்ல வேலை செய்ய உதவியது என்று பேசினார்.

    • கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஜப்பான் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், 'ஜப்பான்' திரைப்படம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'.
    • இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தில் டீசர் நேற்று வெளியானது.


    'தங்கலான்' டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் பேசியதாவது, 'பிதாமகன்', 'ஐ', 'இராவணன்' போன்ற படங்கள் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த படங்கள். ஆனா, தங்கலானுடன் ஒப்பிடும் போது அதலாம் மூன்று சதவீதம் கூட இல்லை. இது உடல் ரீதியாகவும் மன ரீதியகவும் கஷ்டப்பட வேண்டும். ஒவ்வொரு காட்சியும் கஷ்டமாக தான் இருந்தது. காதல் கூட வெறித்தனமான காதலாக தான் இருக்கும்.

    இந்த மாதிரி தேடி தேடி அலையும் சில கதாபாத்திரங்கள் என்னை தேடி வரவில்லை என்பது தான் மிகப்பெரிய கஷ்டம். இந்த படம் குறித்து இரஞ்சித் சொல்லும் போது எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த படம் எங்களுடைய வாழ்க்கையின் சிறந்த படமாக இருக்கும்.

    • இயக்குனர் ரத்னகுமார் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் லியோ திரைப்படத்தில் இணை எழுத்தாளராக இருந்தார்.

    கடந்த 2017-ஆம் ஆண்டு வைபவ்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். இதைத்தொடர்ந்து அமலாபால் நடிப்பில் இவர் இயக்கிய ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.


    ரத்னகுமார் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு இணை எழுத்தாளராக இருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்திற்கும் இணை எழுத்தாளராக இருந்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.

    இந்நிலையில் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக ரத்னகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எழுதுவதற்காக ஆஃப் லைன் செல்கிறேன். என் அடுத்த பட அறிவிப்பு வரை சமூக வலைதளத்தில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    ×