என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரோபோ சங்கர், "கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் வெளியாகும் திரைப்படத்தை பிரமாண்ட விழாவாக நான் எடுத்து நடத்த போகிறேன். இந்தியன் 2 படத்திற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். கமல்ஹாசன் நம்ம ஊரில் இருக்க வேண்டிய ஆளே இல்லை. எல்லா விஷயத்திலையும் நுணுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார்" என்று பேசினார்.
மேலும், 'லியோ' படத்தில் கமல்ஹாசன் குரல் இடம்பெற்றதால் வந்த ட்ரோல் குறித்த கேள்விக்கு, "கமல் என்ன கிழிச்சாருனு கேட்க யாருக்கும் தகுதி இல்லை. 'லியோ' படம் பார்க்கும் போது கடைசியாக கமல் குரல் வரும்போது திரையரங்கம் அதிருகிறது அதுக்கு மேல் என்ன சொல்ல. லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் மிகப்பெரிய பக்தன்" என்று பேசினார்.
- ஹரிஷ் கல்யாண் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
பார்க்கிங் போஸ்டர்
இந்நிலையில், 'பார்க்கிங்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
- மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'.
- இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி வெற்றி படமாக மாறியது.
- மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியதோடு, வசூலில் ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர் வினோத் குமார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பி.எம்.டபிள்யூ. காரை பரிசாக வழங்கி இருக்கிறார். மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் அஜித் குமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
- பாஸர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரூல் நம்பர் 4'.
- இப்படத்திற்கு தீரஜ் சுகுமாறன் பின்னணி இசையமைத்துள்ளார்.
இயக்குனர் பாஸர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரூல் நம்பர் 4'. இந்த படத்தில் ஏ.கே. பிரதீஸ் கிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீகோபிகா நடித்துள்ளார். மேலும், மோகன் வைத்யா, ஜீவா ரவி, கலா கல்யாணி, பிர்லா போஸ், கலா பிரதீப் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரூல் நம்பர் 4
YSIMY புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தீரஜ் சுகுமாறன் பின்னணி இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களுக்கு கெவின் டெகாஸ்டா இசையமைத்துள்ளார். டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பான கதைக்களம், அதிரடி ஆக்ஷன் என உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
- ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜப்பான்’.
- இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், 'ஜப்பான்' படத்தின் புரொமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. இதனை புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
- திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.
- இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ நவம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து கமலின் 233-வது படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கமலின் 233-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் புரொமோ டீசர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி இரவு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
- இப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பு நிறுவனம் கடிதம் கொடுத்தது.
இந்நிலையில், 'லியோ' பத்தின் வெற்றிவிழாவிற்கான தடையில்லா சான்றை பெரியமேடு காவல்துறையினர் வழங்கியுள்ளனர். மேலும், பேருந்தில் ரசிகர்கள் விளையாட்டரங்கிற்கு வர தடை மற்றும் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
- கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ’ஜப்பான்’.
- இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து யூ டியூபில் மூன்று மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோவை பகிர்ந்து அறிவித்துள்ளது.
#JapanTrailer is making waves on YT with 3M+ views & Trending ?
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 30, 2023
➡️ https://t.co/bBTfrRNVVY
Exploding this Diwali ?@Karthi_Offl @ItsAnuEmmanuel @vagaiyaar @ksravikumardir #Sunil @vijaymilton @sanalaman @gvprakash @dop_ravivarman @ActionAnlarasu @philoedit #Banglan… pic.twitter.com/62QTg2BS3x
- நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார்.
- இப்படத்தின் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியானது.
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
ஹாய் நான்னா போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான 'மையல்'பாடலின் லிரிக் வீடியோ வருகிற 4-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
This one ♥️♥️♥️#Ammaadi on 4th :)#HiNanna pic.twitter.com/1KWhRJ16Ll
— Nani (@NameisNani) October 30, 2023
- அல்போன்ஸ் புத்திரன் 'பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார்.
- இப்படம் மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து 'பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் தற்போது 'கிஃப்ட்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளப் பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், "திரையரங்குகளுக்காக படங்கள் இயக்குவதை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளது, அதை நான் நேற்று கண்டுபிடித்தேன். நான் வேறு யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல்கள்,வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் அதிகபட்சம் ஓடிடி-க்காக இயக்குவேன்.
அல்போன்ஸ் புத்திரன் பதிவு
நான் சினிமாவை விட்டு விலக விரும்பவில்லை, ஆனால் வேறு வழியில்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. உடல்நலம் பலவீனமாக இருக்கும்போது அல்லது கணிக்க முடியாத வாழ்க்கை இடைவேளை பஞ்ச் போன்ற ஒரு திருப்பத்தைக் கொண்டுவருகிறது" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த பதிவை சற்று நேரத்தில் நீக்கிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கங்கனா ரணாவத்தின் ‘தேஜஸ்’ திரைப்படம் 27-ஆம் தேதி வெளியானது.
- முதல் நாளில் இருந்தே இப்படம் வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடந்து கங்கனா ரணாவத்தின் 'தேஜஸ்' திரைப்படம் 27-ஆம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. கூட்டம் இல்லாததால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், நடிகை கங்கனா ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
Even before covid theatrical footfalls were dipping drastically post covid it has become seriously rapid.
— Kangana Ranaut (@KanganaTeam) October 28, 2023
Many theatres are shutting down and even after free tickets and many reasonable offers drastic footfall decline is continuing.
Requesting people to watch films in theatres… pic.twitter.com/Mty9BTcpkD