search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூழாங்கல்'.
    • இப்படத்தை நயன்தாரா- விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' தயாரித்துள்ளது.

    அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூழாங்கல்'. நயன்தாரா- விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குனரும், தயாரிப்பாளருமான விக்னேஷ்சிவன் பேசியதாவது, 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பேனரை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது நாங்கள் எடுத்த முதல் படம் 'கூழாங்கல்'தான். இயக்குனர் ராம் சார் என் குரு போன்றவர். அவர்தான் இந்தப் படம் குறித்து என்னிடம் கூறினார். இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கும் பிடித்திருந்தது. உலகளவில் பல திரைப்பட விருது விழாக்களில் பார்வையாளர்களுக்குத் திரையிட்ட போது அவர்களுக்குப் பிடித்திருந்தது. எங்களுக்கு அதிக பெருமையை ஈட்டிக் கொடுத்தப் படம் இது.


    இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக எங்களின் முதல் படம் தேர்வாகி இருந்ததன் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. எங்கள் முதல் படத்திற்கே இத்தனை அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது பெருமை. இதை உருவாக்கிய இயக்குனர் வினோத்திற்கும், படத்தில் நடித்த கருத்தடையான், செல்லபாண்டி ஆகியோருக்கும் நன்றி. இப்படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அதற்கான நேரம் தாண்டி போய்க் கொண்டே இருந்ததால் சோனி லிவ் ஓடிடியில் இப்போது வெளியிடுகிறோம் என்று பேசினார்.

    இயக்குனர் வினோத்ராஜ் பேசியதாவது, 'கூழாங்கல்' படத்தை முடித்து விட்டு அடுத்து இதை எப்படி எடுத்து செல்லலாம் என பார்த்துக் கொண்டிருந்தபோது, ராம் அண்ணன் கோவா திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கப்படுத்தி எங்களை நயன் மேம் விக்னேஷ் சிவன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கும் படம் பிடித்துப் போய் பல உயரங்களுக்கு 'கூழாங்கல்'லை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கும் என் படக்குழுவினருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு நீங்கள் என்ன கருத்து சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம் என்று பேசினார்.

    • கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’.
    • இப்படத்தின் டப்பிங் பணியை கமல் தொடங்கியுள்ளதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.



    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.


    இந்தியன் 2 போஸ்டர்

    இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தின் புதிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், அந்த போஸ்டரில் 'Received copy சேனாபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


    • ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படம் ‘பார்க்கிங்’.
    • இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய பாடலான 'செல்ல கல்லியே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




    • விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
    • தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்தனர்.

    தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜூன். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பாலும், ஆக்ஷனாலும் ரசிகர்களை கவர்ந்தவர்.

    இந்நிலையில், இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.



    ஐஸ்வர்யா தமிழ் படங்களில் நடத்துள்ளார். இவர், விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

    அந்தப் படத்துக்கு பிறகு கன்னடத்தில் பிரேம பரஹா, தமிழில் சொல்லவிடவா ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்புகள் பெரிதளவில் இல்லை.



    இந்நிலையில், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டினர்.

    இதையடுத்து, இன்று ஐஸ்வர்யா- உமாபதி நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.     

    • 1980-களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
    • ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை திரையில் காட்டும் படமாக இது அமையும்.

    விக்ராந்த் ருத்ரா எழுதி இயக்கும் திரைப்படம் 'அர்ஜுன் சக்ரவர்த்தி- ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்'. விஜய ராமராஜு மற்றும் சிஜா ரோஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ் மற்றும் துர்கேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனி குப்பலா தயாரித்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் பாஸ்கரன் இசையமைக்க, ஜெகதீஷ் சீக்கட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    'அர்ஜுன் சக்ரவர்த்தி' திரைப்படம் 1980-களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை திரையில் காட்டும் படமாக இது அமையும். இன்று வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அர்ஜுன் சக்ரவர்த்தி ஸ்டேடியத்தின் நடுவில் கையில் பதக்கத்துடனும் முகத்தில் பெருமிதத்துடனும் இருப்பதைக் காணலாம்.


    அர்ஜுன் சக்கரவர்த்தி போஸ்டர்

    இப்படம் குறித்து இயக்குனர் விக்ராந்த் ருத்ரா கூறியதாவது, 'அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் அன்சாங் சாம்பியன்' படத்தை இயக்கியது பெருமையாக உள்ளது. அர்ஜுன் சக்கரவர்த்தியின் கதையை திரையில் உயிர்ப்பிக்கும் பயணம் சவாலாக இருந்தது. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிலிருந்து வெற்றி பிறக்கிறது என்ற பழமொழிக்கு அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கை ஒரு சான்றாகும். எங்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி என்றார்.

    மேலும், அர்ஜுன் சக்ரவர்த்தியாக விஜய் ராமராஜூவின் உழைப்பு உண்மையிலேயே அசாதாரணமானது. அர்ஜுன் சக்ரவர்த்தியின் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் எட்டு விரிவான உடல் மாற்றங்களுக்கு தன்னை அவர் உட்படுத்திக் கொண்டார். அவரது நடிப்பால் பார்வையாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

    • சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார்.
    • இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும்.


    இதையடுத்து சூர்யா 43 படத்தின் அறிவிப்பு வீடியோ நேற்று வெளியானது. இந்நிலையில், இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ஒரே நாளில் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. 


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'.
    • இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கியுள்ளார்.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.


    தங்கலான் போஸ்டர்

    அதன்படி, 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் டீசர் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரை பகிர்ந்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • நடிகை ரேகா நடித்துள்ள திரைப்படம் 'மிரியம்மா'.
    • இப்படத்தை இயக்குனரான மாலதி நாராயண் தயாரித்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யாத்திசை' புகழ் ரஞ்சித் மேற்கொண்டுள்ளார். பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரித்துள்ளார்.


    இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் தற்போதைய பிக்பாஸ் சீசனில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா பேசியதாவது, நட்பின் அடிப்படையில் தான் இந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்டேன். நான் வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை. மக்கள் தரும் ஆதரவைப் பார்க்கும் போது வியப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.  மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றால் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்த்தி நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜப்பான்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நாளை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.


    • நடிகை ரேகா நடித்துள்ள திரைப்படம் 'மிரியம்மா'.
    • இப்படத்தை இயக்குனரான மாலதி நாராயண் தயாரித்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யாத்திசை' புகழ் ரஞ்சித் மேற்கொண்டுள்ளார். பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரித்துள்ளார்.



    இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகை ரேகா பேசியதாவது, ஒரு படத்தில் நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி நம்மை யாராவது அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும்.  தமிழில் ஜெனிபர் டீச்சர்,  ரஞ்சனி, உமா போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அப்படி அமைந்தது. அது போல் மலையாளத்தில் ராணி, மீனுக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் பேர் சொல்வது போல் அமைந்தது. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த மிரியம்மாவும் இடம்பெறும் என்று நம்புகிறேன். 


    செல்போனில் இயக்குனர் கதை சொல்லும் போதே என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் ஏதோவொன்று இருக்கிறது, விட்டுவிடாதே என்று என் மனம் குதூகலித்தது.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு  வாய்ப்பளித்த இயக்குனருக்கு என் நன்றிகள். இப்படத்தில் நான் எழிலுக்கு தாயாக நடித்திருக்கிறேன். எங்களுக்குள் அந்த பாண்டிங் வந்தால் தான் காட்சிகள் இயல்பாகத் தெரியும். ஆனால் நான் பல படங்களில் நடித்த சீனியர் என்பதால் எழில் ஆரம்பத்தில் விலகியே இருந்தான்.. பின்னர் நான் அவனை "டேய் இங்க வாடா" என்று உரிமையாக அழைத்துப் பேசத் துவங்கியதும் எழில் இயல்பாகிவிட்டான். காட்சிகளும் அருமையாக வந்திருக்கின்றது. நான் நடித்த சில கதாபாத்திரங்கள் சற்று திமிர்பிடித்த கதாபாத்திரங்கள் என்பதால் என்னைப் பார்ப்பதற்கு அப்படித் தெரியும். ஆனால் நான் உண்மையில் அப்படி இல்லை. 


    என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிரூபிக்க விரும்புகிறோம்.  நாற்பது வயது ஆகிவிட்டாலே கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல் எங்களை எறிந்துவிடுகிறார்கள். கமர்சியல் திரைப்படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய் விட்டது. எல்லோரும் என்னை ஃபாரினில் சென்று செட்டில் ஆகிவிட்டீர்களா..? என்று கேட்கிறார்கள். நான் எப்பொழுதுமே சென்னையில் இருக்கவே விரும்புகிறேன்.. நிறைய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன்… உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. சின்ன பட்ஜெட்டில் தொடங்கிய இப்படம் முடியும் போது பெரிய பட்ஜெட் திரைப்படமாக மாறிவிட்டது. இப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தந்து படத்தை வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் கமல்ஹாசனின் புதிய படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச் 234' படத்தில் நடிக்கவுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்ட காட்சி நவம்பர் 7-ந்தேதி கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


    இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள படக்குழுவினரை தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.






    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'பயணி’ என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
    • இவர் ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இப்போது உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சுற்றுவட்டார பாதையில் உள்ள குபேரலிங்க கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    ×