search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • காதலும் கடந்து போகும் என்ற படத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார்.
    • இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

    பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். காதலும் கடந்து போகும் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். தொடர்ந்து மலையாளம், தமிழ் சினிமாவில் நடித்து வந்த மடோனா செபாஸ்டியன் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து இருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது . விஜய்யுடன் நான் ரெடி தான் பாடலுக்கு இணைந்து ஆடிய அவரது நடனம் பிரபலம் அடைந்தது.



    இதுகுறித்து மடோனா செபஸ்டியன் கூறியதாவது:-

    லியோ படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவமாக எனக்கு அமைந்தது. இந்த படத்தில் நடிப்பது குறித்து என் அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் படம் வெளியாகுவதற்கு சில தினங்களுக்கு முன்பு சில ஊடகங்களில் இந்த செய்தி கசிந்துவிட்டது. விஜய் படப்பிடிப்பில் குழந்தை மாதிரி இருப்பார். ஆக்சன் என்றவுடன் ஆளே மாறிவிடுவார். எங்கள் அனைவரையும் லோகேஷ் கனகராஜ் வேறு உலகத்துக்கு கொண்டு சென்று விட்டார். அர்ஜுனை பார்ப்பதற்கே பயமாக இருக்கும். சஞ்சய் தத் ரொம்ப சுவீட்டான மனிதர். இவர்கள் அனைவரோடும் சேர்ந்து நடித்தது மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு மடோனா செபாஸ்டியன் கூறினார்.

    • நடிகர் அமீர்கான் தற்காலிகமாக சினிமாவிற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.
    • இவர் சென்னைக்கு குடியேற திட்டமிட்டுள்ளார்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக தற்காலிகமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுத்துள்ளார். மேலும் இவர் சென்னைக்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    தாயாருடன் அமீர்கான்

    அதாவது, கடந்த ஆண்டு அமீர்கானின் தாயார் ஜூனத் ஹூசைனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பினார். தற்போது அவருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்படும் நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.

    அதனால் தாயாரை உடனிருந்து கவனிக்கும் வகையில், மருத்துவமனைக்கு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சில மாதங்கள் அங்கு தங்கியிருக்கவும் அமீர்கான் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ரஜினியின் 170-வது படத்தை ஞானவேல் இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் நெல்லை பகுதியில் நடைபெற்றது.


    இந்நிலையில் 'தலைவர் 170' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது என்றும் இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் நாளை மும்பை செல்லவுள்ளதாகவும் அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'.
    • இப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என இரஞ்சித் தெரிவித்திருந்தார்.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 'தங்கலான்' திரைப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.


    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'தங்கலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும், 'லியோ' திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.148.5 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.



    இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தனது சமூக வலைதளத்தில் 'தெறிக்க' என குறிப்பிட்டு 'லியோ' திரைப்படத்தில் தன் கதாபாத்திரமான ஹரால்ட் தாஸின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் நானி 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

    தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.


    நானி 31 போஸ்டர்

    இதைத்தொடர்ந்து நடிகர் நானியின் 31-வது படத்தை 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இந்த படத்தை டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • லலித் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனர் லலித் குமார் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'அசுரவதம்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து மாஸ்டர், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், மகான், கோப்ரா போன்ற படங்களை தயாரித்தார்.


    தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான 'லியோ' திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ. 140 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் லலித் குமார், "விக்ரம் சாரின் கோப்ரா, மகான் என இரண்டு படங்கள் ரிலீசாகாமல் இருந்தது. அதில் ஏதாவது ஒரு படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டிய சூழலில் இருந்தேன். வேறுவழியின்றி மகானை ஓடிடியில் ரிலீஸ் செய்தேன். கார்த்திக் சுப்பராஜை சமாதானப்படுத்தி தான் இந்த முடிவை எடுத்தேன்.


    மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியிட்ட பின்னர் விஜய் சார் போன் பண்ணி இதெல்லாம் தியேட்டர்ல ரிலீஸ் ஆக வேண்டிய படம், ஏன் இப்படி செஞ்சீங்கனு திட்டியபோது தான் தப்பு பண்ணிட்டமோனு ரொம்ப வருத்தப்பட்டேன்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் நானி 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

    தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து நடிகர் நானியின் 31-வது படத்தை 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இந்த படத்தை டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    நானி 31 போஸ்டர்

    சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
    • இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    துருவ நட்சத்திரம் போஸ்டர்

    இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் புதிய டிரைலர் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள லியோ படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. லியோ படம் திரையிடப்படும் தியேட்டர்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 20 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது. முதல் காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கும் நிறைவடைகிறது. தற்போது தொடர் விடுமுறை என்பதால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. சிலர் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். சிலர் நேரடியாக வந்து டிக்கெட் எடுக்கின்றனர்.


    இந்நிலையில் ஈரோடு பவானி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் லியோ படம் திரையிடப்பட்டு இருந்தது. இன்று காலை 9 மணி காட்சிக்கு சில ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தும் சிலர் நேரடியாக வந்தும் டிக்கெட் எடுத்திருந்தனர். ஆனால் காலை 9 மணி கடந்த பிறகும் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்திலே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து பொறுமை இழந்த ரசிகர்கள் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது தான் தியேட்டர் ஊழியர்கள் மிஷின் பழுதாகி உள்ளதால் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. உடனடியாக இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இட த்துக்கு விரைந்து வந்து ரசிகர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ரசிகர்கள் கலைந்து செல்லாமல் நாங்கள் லியோ படம் பார்த்து தான் செல்வோம் என்று தொட ர்ந்து கூறிக்கொண்டே இருந்தனர்.


    போலீசார் ரசிகர்களிடம் மிஷின் பழுதானதால் இன்று காட்சிகள் திரையி ப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே உங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுங்கள் என்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு உங்களது அக்கவுண்டில் இன்னும் ஒரு வாரத்தில் பணம் வந்துவிடும் என்றும், நேரடியாக தியேட்டரில் வந்து டிக்கெட் எடுத்தவர்களுக்கு உங்கள் பணத்தை கையில் கொடுத்து விடுகிறோம் என்றும் கூறினர்.

    முதலில் இதை ஏற்காத ரசிகர்கள் எங்களுக்கு 2 மடங்கு பணம் வேண்டும் என்று கூறினர். ஆனால் போலீசார் அவ்வாறு தர முடியாது உங்களுக்கான பணத்தை மட்டும் வாங்கி செல்லுங்கள் என்று கூறினர். பின்னர் இதனை ஏற்று ரசிகர்கள் பணத்தைப்பெற்று அங்கிருந்து ஏமாற்றத்து டன் திரும்பி சென்றனர்.

    • கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ’சர்தார்’.
    • இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.100 கோடி வசூலை குவித்தது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'சர்தார்'. இதில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.


    'சர்தார்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வரை வசூலை குவித்தது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள கார்த்தி 'சர்தார் 2' விரைவில் உருவாகவுள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


    • நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சரக்கு’.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் 'சரக்கு' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மன்சூர் அலிகான், "சின்ன படங்களை எடுத்துக் கொண்டு வராதீர்கள் நஷ்டம் ஏற்படுகிறது என்று விஷால் சொன்னது தவறு, அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விஷால் நடிகர் சங்க தலைவராக அப்படி சொல்லக் கூடாது. ஏதோ அவர் பட்ட அனுபவத்தில் சொல்கிறார். ரூ.100 கோடி வைத்துக் கொண்டு விஷாலை வைத்து தான் படம் எடுக்க வேண்டுமா? நடிகர் சங்கத்தில் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும்.


    சித்தா என்ற படம் ரூ.3 கோடி செலவில் எடுக்கப்பட்டது தான், அது நன்றாக ஓடியது. அதுப்போலதான் ரூ.50 லட்சம் கொண்டு ஒருவர் சமூகத்தால் வரவேற்கும் படத்தை கொடுக்கலாம். அதனால் விஷால் பேசியது தவறு. பான் இந்தியா திரைப்படமாக எடுத்தால் தான் சினிமா பார்க்க வேண்டும் என்பது இல்லை. சரக்கு மிகச்சிறந்த திரைப்படம் நல்லா இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் தணிக்கைக்குழுவில் அம்பானி சொல்லாதே, அதானி சொல்லாதே என்று கூறுகின்றனர்" என்று பேசினார்.

    ×