search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வெங்கி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வித்தைக்காரன்’.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடித்துள்ள திரைப்படம் 'வித்தைக்காரன்'. இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். வி.பி.ஆர். இசையமைக்கும் இப்படத்திற்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை குவித்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடலான "லைஃப் இஸ் மேஜிக்" பாடல் வெளியாகியுள்ளது.


    இந்த பாடலை முன்னணி நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.  கேட்டவுடன் பிடிக்கும் வகையில், அனைவரும் முணுமுணுக்கும் அட்டகாச மெலடியாக அமைந்துள்ள இப்பாடல், ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



    • பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி -2’.
    • இப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.


    சந்திரமுகி 2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் அக்டோபர் 26-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் ரூ.148.5 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும், 'லியோ' திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.148.5 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.


    இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'வில்லன் யாரு' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    • நடிகை சுனைனா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் ‘தெறி’ திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கடந்த 2008-ஆம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சுனைனா. இந்த படத்தில் சுனைனா நடிப்பு பெரும் கவனம் பெற்றது. இதைத்தொடந்து 'மாசிலாமணி', 'வம்சம்', 'நீர்பறவை', 'சமர்' என பல படங்களில் நடித்தார்.


    இவர் 'தெறி' படத்தில் விஜய்யுடன் சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தவிர முன்னணி நடிகர்கள் யாருடனும் சுனைனா ஜோடி சேரவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ரெஜினா' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து சுனைனா பல வெப் தொடர்களிலும் படங்களிலும் நடித்து வருகிறார்.


    இந்நிலையில், இவர் தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, கையில் டிரிப்ஸ் ஏறுவது போலவும் மூக்கில் டியூப் வைத்திருப்பது போலவும் சுனைனா 'தம்ஸ் அப்' சிக்னலுடன் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். இதனுடன் சேர்த்து, "எனக்கு சிறிது நேரம் கொடுங்கள். நான் திரும்பி வருவேன்…" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு விரைவில் குணமடைந்து வருமாறு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • இயக்குனர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன்.
    • கோபாலகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88.

    சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த கோபாலகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.


    அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குனர் ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும்.

    • லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (அக்டோபர் 20) ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், 'லியோ' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, 'லியோ' திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.148.5 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது உலகளாவிய வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை ரோகிணி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார்.

    சமூகத்தில் பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதனை உலக மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இயக்குனர்கள் பலர் இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பல படங்களை இயக்கி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது 1992-ல் தமிழ் நாட்டை உலுக்கிய வாசாத்தி வன்முறை சம்பவம் திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


    நடிகை ரோகிணி இயக்கும் இந்த படத்தில் 'ஜெய்பீம்' படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லிஜோமோல் ஜோஸ் மீண்டும் உண்மை சம்பவத்தில் நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • நெல்லையை சேர்ந்த அய்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
    • இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும் திரைப்படங்களின் ரசிகர்கள் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த உத்தரவிட கோரி நெல்லையை சேர்ந்த அய்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் சிறப்பு காட்சியின் போது, திரையரங்குகள் முன்பு 24 மணி நேரமும் பெரும் கூட்டமாக நின்று கொண்டு பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ், கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதால், போக்குவரத்தும், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இந்த காட்சிகளை முறைப் படுத்த விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

    தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போதும், நிகழ்ச்சிகள் நடைபெறும் போதும், பொது அமைதியை பேணவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும் விதிகள் வகுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இதுசம்பந்தமாக உள்துறை செயலாளருக்கு தான் அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரசிகர்கள் காட்சிகளால் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என மனுதாரர் விளக்கவில்லை. அரசு உள்துறை செயலாளர் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் நேற்று உலகமெங்கிலும் திரையரங்குகளில் வெளியானது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.


    லியோ போஸ்டர்

    இந்நிலையில், 'லியோ' படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படம் வெளியான முதல் நாளில் தெலுங்கில் ரூ.16 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


    • பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் 'தங்கலான்' படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் பா.இரஞ்சித் 'தங்கலான்' படத்தின் அப்டேட் அடுத்த வாரம் டீசருடன் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. அதுமட்டுமல்லாமல் முதல் நாளில் ரூ.140 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டையலாக் ரைட்டர் ரத்னகுமார் 'லியோ' படத்தில் பார்த்திபன் கதாபாத்திரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனை ரசிகர்கள் பலரும் இயக்குனர் பார்த்திபனை குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர் பார்த்திபன் விஜய் மற்றும் லோகேஷ் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "Mr vijai +mr Lokesh combination-னில் பெயரளவிலாவது இடம் பெறுவது நன்று" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.


    • நடிகர் மம்முட்டி ராகுல் சதாசிவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

    பிரபல மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் இயக்குனர் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் 'பிரமயுகம்'. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியரிடர் இசையமைத்துள்ளார். ஷேனாத் ஜலால் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


    மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள 'பிரமயுகம்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.


    இந்நிலையில், 'பிரமயுகம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பு ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×