search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ’லியோ’ திரைப்படம் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இடைவேளை நேரத்தை குறைத்துக் கொள்கிறோம் என படத்தயாரிப்பு நிறுவனம் கூற முடியாது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என திரையரங்குகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தொடர்ந்து சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'லியோ' திரைப்படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் 9 மணி காட்சியை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டப்படி ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையில் 45 நிமிடம் இடைவெளி விடவேண்டும் மற்றும் படத்தில் 20 நிமிட இடைவேளை விட வேண்டும் இந்த நேரத்தினை கூட்டும் போது 18 மணி நேரத்திற்கு மேலாகிறது. 9 மணிக்கு காட்சிகளை துவங்கி 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என்றால் 5 காட்சிகளை திரையிட முடியாது என்று தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அரசு தரப்பில் 4 மணி காட்சிகளுக்கு எந்த படத்திற்கும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி குறிக்கிட்டு 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளீர்கள் அதை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார். 20 நிமிட இடைவெளி விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை தொடர்ந்து காட்சிகளை ஒளிப்பரப்பலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    9 மணிக்கு காட்சிகளை துவங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி அதை மீற முடியாது. இடைவேளை நேரத்தை குறைத்துக் கொள்கிறோம் என படத்தயாரிப்பு நிறுவனம் கூற முடியாது அதை திரையரங்கு நிர்வாகம் தான் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    7 மணி காட்சிக்கு அனுமதியில்லை என்றால் ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு ஏன் அனுமதியளிக்கிறீர்கள். அதனால் தான் சிறப்பு காட்சிகளுக்கு அவர்கள் அனுமதி கேட்கிறார்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்கள். மேலும், பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது, அதன் அடிப்படையில் விலக்கு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    அரசு தரப்பை பொறுத்தவரை சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தான் விலக்கு அளிக்கப்படும் மற்ற நாட்களில் விலக்கு அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி 9 மணி காட்சியை 7 மணிக்கு துவங்க தயாரிப்பு நிறுவனம், அரசிடம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்பத்தை அரசு பரிசீலனை செய்து இன்று மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், காலை 4 மணி காட்சிகளை பொறுத்த வரை அரசு உத்தரவில் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

    • தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
    • சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் குழந்தைகளின் எதிர்காலம் தான்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி. இமான். இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக டி.இமான் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், "இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அதனால் இனி வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது.


    ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது. சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் குழந்தைகளின் எதிர்காலம் தான்" என்று கூறினார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்', 'சீமராஜா', 'நம்ம வீட்டுப் பிள்ளை' உள்ளிட்ட படங்களுக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் - டி.இமான் கூட்டணி இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு சினேகா- பிரசன்னா தங்களது கைகளால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை செய்தார்.
    • நடிகை சினேகா, பிரசன்னா ஆகியோர் பொற்கோவில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

    வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு பிரபல நடிகை சினேகா அவரது கணவர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்தார். அவர்கள் ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசனம் செய்தனர். தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தங்களது கைகளால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை செய்தார். பின்னர் கோவிலை சுற்றி வலம் வந்து தரிசித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நடிகை சினேகா, பிரசன்னா ஆகியோர் பொற்கோவில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றனர். அவர்களுக்கு சக்தி அம்மா ஆசியளித்து, பிரசாதம் வழங்கினார். வேலூர் தங்க கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த சினேகா-பிரசன்னா குடும்பத்தினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.



    இதையடுத்து நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னா மற்றும் குடும்பத்துடன் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கவுரவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சினேகா வந்த செய்தி அனைவருக்கும் பரவியதால் கோவில் முன்பாக ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.

    தரிசனம் முடிந்த பின்னர் வெளியே வந்த சினேகா-பிரசன்னாவை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக வழிஅனுப்பி வைத்தனர்.

    • மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற படம் உருவாகி வருகிறது.
    • இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது.

    லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் 'லூசிபர் 2 எம்புரான்'. இந்த படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாறனுக்கு இன்று பிறந்தநாள். இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பிருத்விராஜ்-க்கு லைக்கா சுபாஸ்கரன் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

     

    இந்தியாவின் பிரம்மாண்டமான பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மலையாள திரையுலகில் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து, நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார். சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.

    • நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தொடர்ந்து இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.


    இந்நிலையில், திருச்சியில் விஷால் மக்கள் நல இயக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்ட விஷால் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஷால், நிர்வாகிகளுக்கு தன் கைகளினாலே பிரியாணி பரிமாறினார். இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கும் திரைப்படம் ‘டெவில்’.
    • இந்த படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இயக்குனர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'டெவில்'. இந்த படத்தில் நந்தமுரி கல்யாண் ராம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் மணிமேகலா எனும் கதாப்பாத்திரத்தில் மாளவிகா நாயர் நடிக்கிறார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கும் இப்படத்திற்கு சவுந்தர் ராஜன்.எஸ் ஒளிப்பதிவும், தம்மிராஜின் படத்தொகுப்பும் மேற்கொள்கின்றனர்.


    ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகும் 'டெவில்' திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    டெவில் போஸ்டர்

    இந்நிலையில், மாளவிகா நாயரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அரசியல்வாதியாக தோன்றும் இவரது கதாப்பாத்திர பின்னணியில் , அமைதியை வெளிப்படுத்தும் புறாக்கள் காணப்படுகின்றன. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'.
    • இப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் பல திரையரங்குகளில் நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், தமிழகத்தில் அதிக இருக்கைகள் கொண்ட பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 'லியோ' திரைப்படத்தின் ஒருவார வசூலில் 75 சதவீதம் தயாரிப்பு நிறுவனம் கேட்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதில் சுமூகமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

    • தமிழகத்தில் ஏழு இடங்களில் நவராத்திரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாக கொண்டாடலாம்.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.


    இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திரு விளக்குப் பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் ஆகியவை நடக்கவுள்ளது. நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடவுள்ளனர்.



    திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக்கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டுடன் வந்தால் மட்டும் போதும் பூஜைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும். விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாக கொண்டாடலாம். சூப்பர் சிங்கர் திறமையாளர்களின் பாடல்களை நேரடியாகக் கேட்டு மகிழலாம், அத்துடன் செஃப் தாமுவின் தயாரிப்பில் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதத்தை உண்டு மகிழலாம்.

    இந்நிகழ்ச்சிகள் முதலாவதாக காஞ்சிபுரத்தில் 15 அக்டோபர் நடைபெற்றது. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்யலட்சுமி, ஆஹா கல்யாணம் சீரியலிலிருந்து மகா ஆகியோர் மக்களுடன் இணைந்து நவராத்திரி பூஜையில் கலந்துகொண்டனர். விஜய் டிவி நட்சத்திரங்கள் பூஜையில் கலந்துகொண்டதை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.


    இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னையில் 16 அக்டோபர் , ஈரோட்டில் 17 அக்டோபர் , திருச்சியில் 18 அக்டோபர் திருநெல்வேலியில் 20 அக்டோபர் , தஞ்சாவூரில் 21 அக்டோபர், மதுரையில் 22 அக்டோபர் ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விஜய் டிவி நவராத்திரி ஸ்பெஷலாக கொலு வைக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது.

    உங்கள் வீட்டில் வைக்கும் அழகான கொலுவின் போட்டோவை @vijaytelevision-க்கு #VijayGoluContest- எனும் hashtag உடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யுங்கள். போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'.
    • 7 மணிக்கு காட்சிகளை வெளியிட மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இதையடுத்து 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என திரையரங்குகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தொடர்ந்து சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் , சிறப்பு காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.

    இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 'லியோ' திரைப்படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் 9 மணி காட்சியை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில் 19-ஆம் தேதி இரண்டு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த நிலையில் ஒரு காட்சிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 9 மணிக்கு தான் திரையிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    சட்டப்படி ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையில் 45 நிமிடம் இடைவெளி விடவேண்டும் மற்றும் படத்தில் 20 நிமிட இடைவேளை விட வேண்டும் இந்த நேரத்தினை கூட்டும் போது 18 மணி நேரத்திற்கு மேலாகிறது. 9 மணிக்கு காட்சிகளை துவங்கி 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என்றால் 5 காட்சிகளை திரையிட முடியாது என்பதால் 7 மணிக்கு காட்சிகளை வெளியிட மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    அதே சமயம் தமிழக அரசு சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் காட்சிகளை திரையிடுவதை ஒழுங்குப்படுத்துவது குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கையும் அந்த பொதுநல வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மதுரை கிளை வழக்கை பார்த்துவிட்டு இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தள்ளி வைத்துள்ளார்.

    • இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'.
    • இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.


    இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    சலார் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, நடிகர் பிரித்விராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு இவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • நடிகர் ரஜினிகாந்த் படத்தை ஞானவேல் இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 10-ந்தேதி நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள ஓடு தொழிற்சாலை ஒன்றில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.



    முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இன்று தூத்துக்குடி வழியாக ரஜினி சென்னை சென்றார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புவனா ஒரு கேள்விக்குறி படத்திற்கு பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பிற்காக வந்தேன். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மக்கள். அவர்களை பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு வருத்தம் என்னவென்றால் எல்லோருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.


    மேலும், ரஜினியிடம், நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள 'லியோ' படம் வருகிற 19-ந்தேதி வெளியாகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த், 'அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள். லால்சலாம் படம் பொங்கலுக்கு வெளியாகும்' இவ்வாறு அவர் கூறினார்.

    • 'லியோ' திரைப்படம் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என திரையரங்குகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என திரையரங்குகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தொடர்ந்து சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் , சிறப்பு காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.


    இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு முன் வைக்கப்பட்டது. அதில், 'லியோ' திரைப்படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் 9 மணி காட்சியை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை பிற்பகல் ஒரு மணிக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

    ×