search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இறுகப்பற்று’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (அக்டோபர் 6) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


    இதில், இயக்குனர் யுவராஜ் தயாளன் பேசியதாவது, படத்தில் ஷ்ரத்தாவின் கதாபாத்திரத்திற்கு அவரை கடைசி சாய்ஸ் ஆகத்தான் நினைத்து வைத்திருந்தேன். காரணம் இதே கதாபாத்திரத்தை கஷ்டப்பட்டு நடிக்கும் ஒரு நடிகையை தேடி கண்டுபிடிக்க முயற்சித்தேன். ஆனால் சூப்பர் என சொல்லும் அளவிற்கு ஸ்ராத்தாவிற்கு இந்த கதாபாத்திரம் அமைந்துவிட்டது படத்தின் மொத்த வசனங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு மட்டுமே 38 சதவீதம் வசனங்கள். படப்பிடிப்பில் அவர் அதை அழகாக பேசியதற்கும் அவருக்கு பொருத்தமாக டப்பிங் குரல் கொடுத்த ஸ்மிருதிக்கும் எனது நன்றி.

    நடிகை அபர்ணதி இப்போது என்னை எவ்வளவு புகழ்ந்து பேசுகிறார். ஆனால் என்னை டார்ச்சர் பண்ணிய நடிகை என்றால் அது அவர் தான். அவர் காலில் மட்டும் தான் விழவில்லை. அந்த அளவுக்கு கெஞ்சினேன். நான் எந்த காட்சியை படமாக்குகிறேனோ அந்த மூடிலேயே இருக்க விரும்புவேன். ஆனால் அவர் சீரியஸான காட்சியில் நடித்துவிட்டு வந்து என்னிடம் ஜாலியாக பேசி மூடை மாற்ற முயற்சி செய்வார். ஆனால் சானியா ஐயப்பனை பொறுத்தவரை என்ன காட்சி எடுக்கிறோமோ அதே மூடில் இருப்பார் அவர் அழும்போது நானும் அழுவேன்.


    விதார்த்தம் நானும் 13 வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தில் இணைந்து பணியாற்றினோம். பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் தான் வடிவேலுவின் படம் எனக்கு வந்தபோது வேறு வழியின்றி அந்தப்படத்தை கைவிட நேர்ந்தது. விதார்த்தும் அதை பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டு என்னை அனுப்பி வைத்தார். அந்த பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தை அவருக்கு கொடுத்திருக்கிறேன்.

    ஸ்ரீ என்னிடம் உதவி இயக்குனராக வேலை பார்க்கத்தான் வந்தார். அதன்பிறகே இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படத்தில் நடிக்கும் போதே நான் எவ்வளவு கெட்டவனாக இருந்திருக்கிறேன் என பெர்சனல் ஆகவே ஃபீல் பண்ணி பேசுவார். இப்படம் பார்த்துவிட்டு அவரை வைத்து ரொமான்ஸ், லவ் படம் எடுக்கலாம் என யாரும் நினைக்காதீர்கள். லவ் சீனை பொறுத்தவரை அவருக்கு நடிக்கவே தெரியாது. யாராவது அவரை வைத்து லவ் படம் எடுக்கதா இருந்தால் என்னிடம் கேட்டு விட்டு படம் பண்ணுங்கள். அந்த அளவிற்கு என்னை வேலை வாங்கி இருக்கிறார் ஶ்ரீ.


    விக்ரம் பிரபு நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நிறைய பேர் தயங்கினார்கள். காரணம் இது மல்டி ஸ்டார் படமாக இருந்தது. அது மட்டுமல்ல ஹீரோயினை மையப்படுத்திய படமாகவும் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் விக்ரம் பிரபு இந்த படத்தில் நடிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று கூறி ஒப்புக்கொண்டார். அவரும் ஷ்ரத்தாவும் நடிக்க வேண்டிய ஏழு நிமிட காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கினோம்.

    அவருக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது. என்னுடைய தந்தை தீவிரமான சிவாஜி ரசிகர். சிறுவயதில் சிவாஜியின் படத்தைக் காட்டி இவர்தான் உன்னுடைய தாத்தா என்று சொல்வார். நானும் அவரையே என்னுடைய தாத்தா என்று எல்லோரிடமும் கூறுவேன். பள்ளி தலைமை ஆசிரியரே என் தந்தையை அழைத்து விசாரிக்கும் அளவிற்கு சிவாஜி தான் என் தாத்தா என நம்பினேன். அதன்பிறகு அவர் என் தாத்தா இல்லை என சொன்னதும் அழுதுவிட்டேன். சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பம் எங்களுடையது. சிவாஜி இறந்த அன்று இரவு என் தந்தை ரொம்பவே அழுதார்.


    தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவின் ஒத்துழைப்பால் இப்படத்தை முழுவதுமாக நான் நினைத்தபடி எடுக்க முடிந்தது. நான் டென்ஷனாக இருந்தாலும் கூட அவர் ரொம்பவே கூலாக விஷயங்களை டீல் செய்தார். நான் சில பேர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைப்பவர்களில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு சாரும் ஒருவர். இன்று நடப்பதை எல்லாம் பார்க்கும்போது நாளை தான் என் படம் ரிலீஸ் ஆகிறது என்பது போல உணர்கிறேன்" என்று கூறினார்.

    • திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    லியோ போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

    இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார். கடந்த 3 நாட்களாக படப்படிப்புக்காக காரில் பணகுடிக்கு வரும் நடிகர் ரஜினியை காண அவரது ரசிகர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களிடையே கை அசைத்தபடியும், கை குலுக்கியபடியும் நடிகர் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.


    இந்நிலையில் இன்று 4-வது நாள் படப்படிப்பு நடக்கிறது. 3 நாட்கள் மட்டுமே அங்குள்ள தள ஓடு தொழிற்சாலையில் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், கூடுதல் காட்சிகளுக்காக இன்று மேலும் ஒருநாள் படப்பிடிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்க வந்த நடிகர் ரஜினிக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் ரசிகர்கள் மத்தியில் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த், "46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லைக்கு வருகை தந்துள்ளேன். கடைசியாக 1977-ம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்துக்கு வந்தது" என அவர் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

    இந்த படத்தில் நடிகர் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கின்றனர். ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

    • 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார்.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஹாய் நான்னா போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் டீசர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. 'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.


    லால் சலாம் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லால் சலாம்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இப்படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.


    இந்நிலையில், கூகுள் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில். 'லியோ' படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து 'ஐயம் வெயிட்டிங்' (Iam Waiting) என்று பதிவிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    • நடிகர் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பணக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், குஜராத் செல்கிறார். அதாவது, ஒருநாள் உலக கோப்பை தொடரின் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இந்த போட்டியே காண குஜராத் செல்கிறார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஆகியோருக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • அட்லீ ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.


    இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் அட்லீ வாயில் சுருட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
    • விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனைகளின்படி ரூ.800 கோடி பரிவர்த்தனை நடந்திருக்கிறது.

    நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின்படி விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனைகளின்படி ரூ.800 கோடி பரிவர்த்தனை நடந்திருக்கிறது. பணம் இருந்தும் வேண்டும் என்றே தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை விஷால் தராமல் இருப்பதாக லைகா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் பாதியாவது செலுத்த உத்தரவிட வேண்டும் என்று லைகா தரப்பிக்ல் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

    விஷால் தரப்பு வழக்கறிஞர் லைகா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் தருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய நீதிபதி ஏன் இன்னும் பணத்தை செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பணத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும் லைகா தரப்பில் பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை என்று விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் ப்ரீக்வலாக உருவாக உள்ளது.

    கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.


    ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காந்தாரா 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக இயக்குனர் ரிஷப் ஷெட்டி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    • மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் திவ்ய பிரபா.
    • இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

    பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழில் 'கயல்', 'கோடியில் ஒருவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை திவ்ய பிரபா விமானத்தில் தனக்கு பாலியல் அச்சுறுத்தல் நடைபெற்றதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சிக்குத் திரும்பிய போது 12 சி இருக்கையில் மதுபோதையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் 12 பி இருக்கையில் தனது அருகில் அமர்ந்துகொண்டு காரணமே இல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தவறாக நடந்து கொண்டார்.


    இதுபற்றி விமானப் பணிப்பெண்ணிடம் தெரிவித்தபோது, அவர் எனது இடத்தை மட்டுமே மாற்றி கொடுத்தாரே தவிர எனக்கு தொல்லை கொடுத்தவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொச்சி வந்ததும் விமான நிலைய அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தேன். கேரள போலீசாருக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளேன். இந்த விஷயத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.



    • ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து ஹிட்டடித்துள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    ×