search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    லியோ போஸ்டர்

    இந்நிலையில், 'லியோ' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது நடிகை திரிஷாவின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கத்தி முன் பயந்துடன் திரிஷா நிற்கும் இந்த போஸ்டரில் 'லியோ' டிரைலர் இன்று வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


    • அமிதாப் பச்சன் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.
    • இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்லைன் வணிகத் தளமான பிளிப்கார்ட் ஒவ்வொரு ஆண்டும் 'பிக் பில்லியன்டே' என்ற நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. அதுபோன்று இந்த ஆண்டும் 'பிக் பில்லியன்டே' விற்பனைக்காக விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

    அதில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த விளம்பரத்தில் பிளிப்கார்ட்டில் தருவது போன்ற சலுகை சில்லறை விற்பனைக் கடைகளில் நிச்சயம் கிடைக்காது என்று அமிதாப் பச்சன் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



    நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோரை தவறாக வழி நடத்தும் இந்த விளம்பரத்தை தடை செய்யவும், பிளிப்கார்ட்டுக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகாரளித்துள்ளது.

    மேலும் "ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு தொழில்கள் பாதித்துள்ள நிலையில், அமிதாப் பச்சன் இதுபோன்ற விளம்பரத்தில் நடிப்பதால், எங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்படும். ஆகவே இந்த விளம்பரத்தை தடை செய்து, அபராதம் விதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.

    • இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'ஜப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற 28-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இதில் சூர்யா மற்று சிவகுமார் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'.
    • லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், லியோ படத்தின் சென்சார் முடிவுகள் வெளியாகி உள்ளன. படத்தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லியோ படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்து இருப்பதாக தனது எக்ஸ் பதிவில் தெரிவித்து உள்ளது.

    • ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளனர்.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. நியூ லுக்கில் ரஜினி இருக்கும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • அருண்குமார் 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.


    ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவான இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'சித்தா' திரைப்படத்தை பாராட்டி நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சித்தா மிகவும் உணர்திறன் மிக்க விஷயம், மிக இலகுவான முறையில் மிகவும் தெளிவுடன் கையாளப்பட்டுள்ளது. இயக்குனர் அருண் குமாருக்கு வாழ்த்துகள். சித்தார்த் இந்த திரைக்கதையை தேர்ந்தெடுத்து தயாரித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    'லியோ' திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டிரைலரை ரோகிணி திரையரங்கின் பார்க்கிங்கில் வெளியிட காவல் ஆணையர் அனுமதி பெற வேண்டும் என்று கோயம்பேடு காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜெயதேவி ‘மற்றவை நேரில்’ என்ற படத்தை முதல் முதலாக 1980-ம் ஆண்டு இயக்கினார்.
    • பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

    1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக நடிகை, கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டிருந்தவர் ஜெய தேவி. 1976-ம் ஆண்டு வெளிவந்த இதய மலர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெயதேவி. தொடர்ந்து சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம், சரியான ஜோடி, ரஜினியுடன் காயத்ரி ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

    இதை தொடர்ந்து மற்றவை நேரில் என்ற படத்தை முதல் முதலாக 1980-ம் ஆண்டு இயக்கினார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமை வா இந்த பக்கம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். விலாங்கு மீன், விலங்கு பாசம் ஒரு வேஷம், நலம் நலமறிய ஆவல். புரட்சிக் காரன், பெண்களின் சக்தி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

    பல படங்களை தயாரித்தும் உள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து உள்ளார். பிரபல இயக்குனர் வேலு பிரபாகரனுடன் சில ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் ஜெயதேவி. பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

    நடிகை ஜெய தேவி சில மாதங்களாக இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று போரூர் துரை பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாகி இன்றுஅதிகாலை மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை போரூரில் நடக்கிறது.

    • நடிகர் ராம் சரண் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகர் ராம் சரண் இன்று மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனியை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நான் கலைஞரின் வசனங்களை பேசி நடிப்பதா? நடக்காத காரியம்.
    • நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியோர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் கலைஞர். அவர் எழுதிய "பராசக்தி" படத்தின் அற்புதமான, சமுதாய சீர்திருத்தும், புரட்சிகரமான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி, நடித்து சிவாஜி கணேசன் ஒரே நாளில் உச்ச நட்சத்திரம் ஆனார். எம்.ஜி.ஆருக்கு "மருதநாட்டு இளவரசி","மந்திரிகுமாரி", "மலைக்கள்ளன்" போன்ற படங்களுக்கு வசனம் எழுதி அந்தப் படங்களை மிகப்பெரிய வெற்றிப்படங்களாக்கி எம்.ஜி.ஆரை நட்சத்திரமாக மாற்றினார்.

    1977-ம் ஆண்டு என்னுடைய பியட் காரை மியூசிக் அகாடமி பக்கம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பின்னால் ஒரு வண்டி வந்துகொண்டிருந்தது. வண்டியில் வந்துகொண்டிருந்தவரை என் கார் கண்ணாடி மூலம் உற்றுப்பார்த்தேன். நன்கு தெரிந்த முகம். கண்ணில் கருப்புக்கண்ணாடி. கலைஞர் என்று தெரிந்தது. நான் அப்படியே இடது பக்கமாக ஒதுங்கி வழி விட்டேன். எனது காரை கடக்கும் போது அவர் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்து கைகளை ஆட்டினார். காரில் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்த அந்த சிரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதுதான் நான் கலைஞரை முதல் முதலில் பார்த்தது.


    நான் 1980-ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைஞரின் நண்பர் மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் தயாரிப்பாளருக்கு திருப்தி தரவில்லை. படம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் தயாரிப்பாளர் என்னிடம் வந்து "நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை சொல்கிறேன்... நம் படத்துக்கு கலைஞர் வசனம் எழுத ஒப்புக் கொண்டார்" என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

    எளிமையான தமிழ் வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான் கலைஞரின் வசனங்களை பேசி நடிப்பதா? நடக்காத காரியம்... இதற்கு நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம். தயாரிப்பாளரிடம் முடியவே முடியாது என்று கூறினேன். இதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு இடி விழுந்த மாறி ஆயிற்று. அவர் வசனம் எழுத சம்மதித்ததே நமக்கு கிடைத்த பாக்கியம். அவர் வசனம் எழுதினால் நம் படம் மிகப்பெரிய வெற்றி அடையும். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் இதற்கு ஒப்புக்கொள்ளுங்கள் இல்லையென்றால் அவர் எழுத சம்மதித்த பிறகும் நீங்கள் வேண்டாம் என்று கூறியதை அவரிடம் நான் எப்படி சொல்வது என்று திண்டாடினார். நான் அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுங்கள், நானே அவரிடம் சொல்கிறேன் என்று கூறினேன். அவரும் வேண்டா வெறுப்பாக சரி என்று சொல்லி கலைஞரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.

    கலைஞரை சந்திக்க கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்றேன். வாங்க என்று அவருக்கே சொந்தமான அந்த கரகரப்புக் குரலில் என்னை அழைத்து நலம் விசாரித்தார். பின்பு "கதையைக் கேட்டேன்... நன்றாக இருக்கிறது. சிறப்பாக வசனங்களை எழுதிடலாம்" என்றார். நான் அவரிடம் "சார் உங்கள் வசனங்களை நான் பேச முடியாது.


    எளிமையான தமிழை பேசவே நான் சிரமப்படுகிறேன். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை எப்படி நான் பேசுவது? என்னால் முடியாது. தவறாக நினைக்க வேண்டாம்" என்று கூறினேன். அதற்கு அவர் சிரித்து "எனக்கு யாருக்கு எப்படி எழுதவேண்டும் என்று நன்றாகவே தெரியும். சிவாஜிக்கு எழுதுவது போல எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்டேன்... அதே போல எம்.ஜி.ஆருக்கு எழுதுவதைப்போல சிவாஜிக்கு எழுதமாட்டேன். உங்கள் படங்களை நான் பார்த்துள்ளேன். உங்கள் ஸ்டைலில் நான் எழுதுகிறேன்" என்று சர்வ சாதாரணமாக கூறினார். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனை அந்த நொடியில் எனக்கு தோன்றியதற்கு நீ கெட்டிக்காரன்டா என்று நானே மகிழ்ந்து "சார் படப்பிடிப்பில் நாங்கள் சில வசனங்களை மாத்துவோம் சில வசனங்களை நீக்குவோம். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை மாத்தவும் முடியாது நீக்கவும் முடியாது. அது சரியானதாகவும் இருக்காது" என்று கூறினேன்.

    அதற்கு அவர் "மாற்றுங்கள்.. ஒன்றும் தவறில்லை, அது என்ன திருக்குறளா?'' என்று கூறினார். அவர் அப்படி சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் நொடியில் சாம்பல் ஆகி விட்டது. எனக்கு ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தேன். இதை கவனித்த கலைஞர் சிரித்துக்கொண்டே "முன்னால் யார் வசனங்களை எழுதினாரோ அவரே எழுதட்டும்... நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்..." என்று கூறி தன் உதவியாளரிடம் தயாரிப்பாளரை அழைக்கும் படி கூறினார்.

    தயாரிப்பாளரிடம் "என்னுடைய வசனங்களை பேசுவதற்கு தனக்கு கஷ்டமாக இருக்கும் என்று ரஜினி கூறுகிறார். நான் அவருடைய பாணியிலேயே எழுதித் தருகிறேன் என்று சொன்னேன். அவரும் சம்மதித்தார். ஆனால் இந்த மாதம் 10-ந்தேதி படப்பிடிப்பு என்று ரஜினி கூறுகிறாரே... நான் அடுத்த மாதம் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்... காலம் மிகவும் கம்மியாக இருக்கின்றது. எனக்கு ஏற்கனவே முன் நிர்ணயிக்கப்பட்ட வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆகையால் இந்தப் படத்திற்கு என்னால் வசனங்கள் எழுத முடியாது. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறி தயாரிப்பாளரை அனுப்பி வைத்தார். பிறகு என்னைப் பார்த்து "என்ன ரஜினி இப்போ உங்களுக்கு திருப்தியா?" என்று கேட்டார்.


    தயாரிப்பாளரின் மனதையும் துன்புறுத்தாமல், என்னையும் திருப்திபடுத்திய அவருடைய செய்கையால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்பும், மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. ஆனாலும் அவருடைய வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ? தவறு செய்து விட்டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்றும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது.

    பல நேரங்களில் நான் அவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவர் எந்த ஒரு விஷயத்திற்கும் நான் அவரை கவனித்துப் பார்த்ததில் எந்த ஒரு முடிவையும் எடுத்தோமா கவிழ்த்தோமா என்று எடுக்கமாட்டார். அதற்கு சம்மந்தப்பட்டவர்களில் பல பேருடன் விசாரித்து, பேசி, விவாதித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பார். அப்படி இருக்கும் போது எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கும் முக்கியமான முடிவை நிச்சயம் கலைஞர் பல பேரின் ஆலோசனைகளை கேட்டுதான் எடுத்திருப்பார்.

    எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து "இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம். நீங்கள் மட்டும் கேட்டு பிறகு என்னிடமே திருப்பிக்கொடுத்து விடுங்கள்" என்று கூறினார். அது 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு அவருக்கும் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் நடந்த தொலை பேசி உரையாடல் ஆகும். அதில் எஸ்.எஸ்.ஆர். "அண்ணே... ஏதோ கெட்ட நேரம் அவசர அவசரமாக என்னென்னமோ நடந்து விட்டது. வருங்காலத்தில் கழகத்திற்கு இதனால் பெரிய இழப்பு ஏற்படும். வேறு யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டும் ஒரு பொது இடத்தில் சந்தித்து மனம் விட்டுப்பேசினால் எல்லாம் சரி ஆகிடும்.


    கலைஞரிடம் நான் பேசுகிறேன். எனக்காக இதை செய்யுங்கள்" என்று கூறுவார். அதற்கு எம்.ஜி.ஆர். "இல்லை தம்பி.. என்னுடைய விசுவாசிகள் எனக்கு ஆதரவாக போராட்டங்கள் செய்து என்னுடைய அபிமானிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்கள். நான் திரும்பி கட்சியில் சேர்ந்தால் என்னுடைய அபிமானிகளை கட்சியில் உள்ளவர்கள் முந்தைய மாதிரிப் பார்க்க மாட்டார்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவார்கள் அவர்கள் எல்லாம் உதிரிப்பூக்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்காகவே நான் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். எனக்கு வேறு வழியில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதே" என்று அந்த உரையாடல் முடிந்திருக்கும்.

    அதன் பின் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். அதன் பின் யார் யார் எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சொன்னார்களோ.. அதில் பல பேர் ஒவ்வொருவராக கட்சில் இருந்து விலகி எம்.ஜி.ஆர். பக்கம் போனார்கள். அதனால் கலைஞரின் இதயம் எவ்வளவு வேதனையில் துடித்திருக்கும்?

    எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா இவரை நினைத்து தான் சொன்னாரோ? எவ்வளவு வேதனைகள், சங்கடங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என அத்தனையும் தாண்டி தொண்டர்களுக்கு அவர் எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள், கட்டுரைகள், சினிமாவில் எழுதிய வசனங்கள், அவர் செய்த சுற்றுப்பயணங்கள், மேடைப்பேச்சுகள், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் கட்டுக் கோப்பாக, ஒரு தனி ஆளாக கட்சியை வழி நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால் அது ஒரு மாபெரும் புரட்சி.

    கலைஞர் வாழ்ந்த அதே காலத்தில் நானும் வாழ்கிறேன், அவருடைய இதயத்தில் எனக்கென்று ஒரு தனி இடம் இருந்தது. அதனால்தான் எந்த ஒரு விழாவிலும் என்னை அவர் அருகில் அமர வைத்து மகிழ்வார் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 1996-ம் ஆண்டு ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    'கந்தன் கருணை' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி அதன்பின்னர் 'மூன்று முடிச்சு' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக வலம் வந்தார். மூன்று தலைமுறை நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த இவர் பல மொழி படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து புகழின் உச்சத்திற்கு சென்றார்.


    நடிகை ஸ்ரீதேவி கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஒரு ஓட்டலின் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். இவரது மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. அதன்பின்னர் பல தகவல்களுக்கு பிறகு அது ஓய்ந்தது.


    இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள நேர்காணலில், "ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. திடீர் விபத்தால் நிகழ்ந்த மரணம். துபாயில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை உட்பட அனைத்து விசாரணைகளும் எனக்கு நடந்தன. இறப்பில் எந்தக் குற்றமும் இல்லை என்றும் அது தற்செயலாக நடந்த விபத்து என்றும் போலீசார் உறுதிப்படுத்தினர்.


    ஸ்ரீதேவி திரையில் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக அடிக்கடி பட்டினி இருப்பார். எங்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து சட்டென மயக்கமாகும் நிலைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறார். அப்போது தான் மருத்துவர் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாக கூறினார். திருமணத்துக்கு முன்னதாக, இதேபோல் டயட்டில் இருந்ததால் குளியலறையில் விழுந்து பல் உடைந்து போனதாக ஸ்ரீதேவி இறந்தபின் நடிகர் நாகார்ஜுனா என்னிடம் தெரிவித்தார்'' என்று போனி கபூர் கூறினார்.

    • நடிகை குஷ்பு நடிப்பு மற்றும் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
    • ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு புகழ் பெற்றவர் குஷ்பு.

    தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு புகழ் பெற்ற குஷ்பு நடிப்பது மட்டுமல்லாமல் பா.ஜ.க கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், நடிகை குஷ்புவுக்கு கேரளா, திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது, இந்த கோவிலில் வருடந்தோறும் ஒரு பெண்ணை தேர்வு செய்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம், அந்த வகையில் நடிகை குஷ்புவை கோவில் நிர்வாகம் தேர்வு செய்து அழைப்பு விடுத்தது. அதை ஏற்று கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் குஷ்பு கலந்து கொண்டார்.


    இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு, "கடவுளின் தெய்வீக ஆசீர்வாதம். திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் நாரி பூஜை செய்ய என்னை அழைத்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இத்தகைய பெருமையை எனக்கு வழங்கிய கோவிலில் உள்ள அனைவருக்கும் நன்றி" என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.


    ×