search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்' படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழும் நயன்தாரா, தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். கதை, கதாபாத்திரங்களை பொறுத்து ஒரு படத்துக்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதுதவிர விளம்பரங்களிலும் நடித்து வருமானம் ஈட்டி வருகிறார்.

    வேறு சில தொழில்களிலும் நயன்தாரா முதலீடு செய்துள்ளார்.

    சமீபத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடினார். அவர்களது முகங்களையும் வெளியுலகுக்கு காண்பித்தனர்.

    இந்த பிறந்தநாளை கொண்டாடிய கையுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மலேசியாவுக்கு பறந்துள்ளனர். புதிய தொழில் நிறுவனம் தொடங்குவதற்காக சென்ற அவர்கள், அங்குள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள 'இறைவன்' படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் புதிய தொழில்களிலும் முதலீடு செய்து வருவதால் நயன்தாரா முன்பை விட சுறுசுறுப்பாக காணப்படுகிறார்.

    • ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் அமோக வெற்றி பெற்றது.
    • ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார்.

    ரஜினிகாந்த நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தலைவர் 170 என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டு இருக்கிறது. தலைவர் 170 படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.

    இந்த படத்தின் மற்ற நடிகர்கள் விவரம் நாளை முதல் அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' .
    • இப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் உருவான திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' . இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடித்துள்ளார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.



    மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘வெப்பன்’.
    • இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.

    குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வெப்பன்' . இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி மற்றும் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ். மன்சூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'வெப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

    • கன்னட அமைப்பினர் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

    அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்த 'சித்தா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியானது. 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ், சிவராஜ்குமார் என பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.


    இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சித்தார்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "யஷ் நடித்து 'கே.ஜி.எப்' இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. அதற்கு நாம் எந்த இடையூறும் பண்ணவில்லை. ஆனால், விஜய், மற்ற நடிகர்கள் படத்தை அவர்கள் வெளியிட விடுவதில்லை. வேறு படங்கள் கர்நாடகாவில் ஓடுகிறது. பக்கத்து மாநிலத்தவர் நான் தயாரித்த படங்கள் அங்கு வெளியிட முடியவில்லை. உலக சந்தையாக இருக்கும் என் நாட்டில் உள்ளூர் சந்தை எடுபடவில்லை.

    'கே.ஜி.எப்' திரைப்படம் வெளிவரும் போது தடுக்க எனக்கு எவ்வளவு நேரமாகும். சித்தார்த்திற்கும், தண்ணீர் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு கலைஞர். அவர் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்கவும் இல்லை. அது அரசியல் தலைவர்கள் பேசி தீர்வு காண வேண்டும்" என்று கூறினார்.

    • பன்முகத் தன்மைக் கொண்டவராக வலம் வருபவர் சசிகுமார்.
    • இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தை இயக்கிய ஆர்.டி.எம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் சார்பில் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரான் ஈதன் யோஹான் இசையமைக்க கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். எம். தீபக் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    எவிடன்ஸ் போஸ்டர்

    அதன்படி, இப்படத்திற்கு 'எவிடன்ஸ்' (Evidence) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • இயக்குனர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவராக இருப்பவர் சமுத்திரகனி.
    • இவர் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

    உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இயக்குனர் சமுத்திரகனி பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகன், வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார். இவர் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.


    இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் சமுத்திரகனி 'அப்பா' படத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, செல்போன் வைத்திருப்பவர்கள் படத்தை விமர்சனம் செய்யலாம் என்று ஆகிவிட்டது. நல்ல படங்கள் ஓடும். யார் விமர்சனம் செய்தாலும் அதன் தரம் குறையாது, விமர்சனம் செய்வது என்பது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். நல்ல விஷயத்தை கூறினால் மக்கள் அதை வரவேற்பார்கள்.


    என்னுடைய 'அப்பா' திரைப்படத்திற்கு நான் லஞ்சம் கொடுத்தேன். அது மிகவும் வருத்தமான விஷயமாக இருந்தது. 'அப்பா' திரைப்படத்தை அரசு தான் எடுத்திருக்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலையில் நான் கஷ்டப்பட்டு, நானே தயாரித்த திரைப்படத்திற்கு வரி விலக்கு சான்றிதழ் வாங்கும் போது பணம் கொடுத்து தான் வாங்கினேன் என்று பேசினார்.

    • 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார்.
    • அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்த 'சித்தா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியானது. 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவு தெரிவித்து பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளத்தில், "நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும் , சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.



    அடுத்து நடிகர் சிவராஜ்குமார் "மற்றவர்களின் உணர்வுகளை நாம் எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது. கன்னட திரையுலகம் சார்பாக நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சித்தார்த். இதைச் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், அதைக் கண்டு நாங்கள் மிகுந்த மன வருத்தம் அடைகிறோம். இனி இப்படி நடக்காது" என்று கூறினார்.

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "'ஜெயிலர்'படத்தில் கிளப்பிய Mass-ஐ விட,நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு !!!!

    எதற்கு?மனதில் உள்ளதை தில் உள்ள மனிதர்களாக நேர்மையாக சொல்லி இருக்கிறார்கள். நீண்ட(கால)காவேரி பிரச்சனையை அதன் நீள அகலங்களில் அரசுகள் அலசி ஆராய்ந்து இன்னும் நீண்ட காலம் தீரா பிரச்சனையாக்கி அரசியல் செய்வதை விட்டு விட்டு,ஒரு கலைஞனை காயப் படுத்தி ஆவதென்ன?

    அவர்கள் …. எதிரிகளாக நினைக்கும் நம்மிடமிருந்து எதிர்ப்பு எழுவதை விட,அவர்கள் தெய்வமென மதித்த மறைந்த திரு ராஜ்குமார் அவர்களின் வம்சாவழியும், அவர்கள் பெரிதும் நேசிக்கும் திரு சி.ரா.கு எதிர்ப்பையும் மன்னிப்பையும் வெளிபடுத்தும் போது, அநாவசியமாக அநாகரிகமாக நடந்துக் கொண்ட மிக சிலர் (அவர்கள் மட்டுமல்ல கர்நாடகா என்பது) திருந்த வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


    • ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'சந்திரமுகி 2' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய சந்திரமுகியை.. புதிதாக, வேறு ஒரு கோணத்தில், ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்குப் படமாக, சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் திரு. வாசு அவர்களுக்கும்.. அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும்.. மற்றும் படகுழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • அரண்மனை 4 படம் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.
    • இந்த படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா,  யோகி பாபு, கோவை சரளா மற்றும் பலர் நடத்துள்ளனர்.

    குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. குஷ்பு சுந்தர் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. சுந்தர் சி உருவாக்கிய அரண்மனை படம், தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும். முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,  தற்போது நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

     

    இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா,  யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

    முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுந்தர் சி. 2024 பொங்கல் அன்று அரண்மனை 4 வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் இந்தியில் ரீமேக் செயப்பட்டு 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து 'மார்க் ஆண்டனி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செயப்பட்டு 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இதையடுத்து 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இந்தி வெர்ஷனை பார்க்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மும்பை சென்சார் போர்டுக்கு 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இந்தி வெர்ஷனுக்காக ரூ. 6.5 லட்சம் லஞ்சமாக வழங்கியுள்ளதாகவும் இந்த பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்தோம் என்றும் படத்தை திரையிடுவதற்கு ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் கொடுத்தோம் என்றும் கூறியுள்ளார்.

    மேலும், இனிவரும் காலங்களில் எந்த தயாரிப்பாளருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை மகராஷ்டிரா முதல் மந்திரி மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு, இது போன்று ஊழல் நடைபெற்றுள்ளதாக விஷால் தெரிவித்திருப்பது துரதிஷ்டவசமானது. ஊழல்களில் மத்திய அரசு சகிப்பு தன்மையற்ற நிலையை கடைப்பிடித்து வருகிறது (ஊழலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்). யாரேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

    மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இன்று மும்பை அனுப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று மத்திய தணிக்கைத்துறையால் அச்சுறுத்தல் அல்லது மிரட்டலுக்கு யாராவது ஆளாக்கப்பட்டால் அது தொடர்பான தகவல்களை வழங்கி மத்திய அரசுக்கு உதவுமாறும் கேட்டுள்ளது.

    • நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு  விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக அமைந்துள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    ×