search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சினிமா துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன்.
    • இவர் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவர் நடித்த தேன் மொழி கதாப்பாத்திரம் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "தெலுங்கு திரையுலகில் நான் எந்த விதமான பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை. ஆனால் தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். தமிழ் ஹீரோ ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்" என்று பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • கிங் ஆஃப் கோதா' திரைப்படம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.


    • வசந்த் ரவி வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
    • ’ஜெயிலர்’ திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

    வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான வசந்த் ரவி வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரின் அறிமுக படமான தரமணி பலரின் பாராட்டை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து வெளியான ராக்கி மற்றும் அஸ்வின்ஸ் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் யார் இந்த வசந்த் ரவி என்ற கேள்வியையும் எழ வைத்தது.


    இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் அர்ஜூன் முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.


    ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் வசந்த் ரவி. வெப்பன் எனும் படத்தில் சத்யராஜுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிக அளவு துப்பாக்கிகளை கையாளும் சண்டைக் காட்சிகளில் இவர் நடித்துள்ளாராம். இதற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய இயக்குனருடன் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி உள்ளாராம் வசந்த ரவி.

    • நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    திரையுலகின் பிரபலங்களான நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர். உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளின் பழைய (Throwback) புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் வஹீதா ரஹ்மான்.
    • இவர் கடைசியாக தமிழில் 'விஸ்வரூபம் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவர் வஹீதா ரஹ்மான். செங்கல்பட்டில் பிறந்த இவர் பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.


    எம்.ஜி.ஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் நடித்துள்ள வஹீதா ரஹ்மான் கடைசியாக தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான 'விஸ்வரூபம் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற உயரிய விருதுகளையும் வென்றுள்ளார்.

    இந்நிலையில், நடிகை வஹீதா ரஹ்மானுக்கு 'தாதா சாகேப் பால்கே' வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


    இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் தற்போது வரை படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. இப்படம் கைவிடப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்ததையடுத்து சமீபத்தில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.


    இந்நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ஆம் தேதி அபுதாபியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறையாவது படப்பிடிப்பு தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி 50 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதனை ரசிகர்கள் திரையரங்குகளில் கேக் வெட்டி கொண்டாடினர்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சமூக வலைதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.


    இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் 50-வது நாளை ரசிகர்கள் திரையரங்குகளில் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், படம் பார்க்க வந்தவர்களுக்கு குலுக்கல் முறையில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை ரஜினி ரசிகர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

    • ’லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
    • விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.


    கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படவுள்ளது. இப்படத்தின் பணிகளுக்காக அமெரிக்க சென்றிருந்த விஜய் சமீபத்தில் சென்னை திரும்பினார்.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தளபதி 68' படத்தின் பூஜையை அக்டோபர் முதல் வாரத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'.
    • இப்படம் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராகவா லாரன்ஸ், "என் தலைவர் மற்றும் குரு ரஜினியை சந்தித்து 'ஜெயிலர்' வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். 'சந்திரமுகி- 2' 28-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அவரிடம் ஆசிப்பெற்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.


    இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இந்த வெற்றியை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஷாருக்கான் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.


    இதில் விஜய் ரசிகர்கள் 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்ததற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், "வாழ்த்துகளுக்கு நன்றி. விஜய்யின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். லவ் யூ விஜய்" என்று பதிவிட்டுள்ளார்.


    • ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.



    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் உல அளவில் ரூ.1004 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் வீடியோவை பகிர்ந்து அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’.
    • இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.


    இந்நிலையில், 'சந்திரமுகி -2' திரைப்படம் வெற்றியடைய வேண்டி படக்குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ பேடம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.


    ×