என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் அஜித் நடிப்பதை தாண்டி பைக் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
- சமீபத்தில் இவர் ஓமன் நாட்டில் பைக்கில் செல்லும் வீடியோ வைரலானது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பதை தாண்டி பைக் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். பைக் பிரியராக இருக்கும் அஜித் உலக சுற்றுப்பயணம் சென்றார். சமீபத்தில் இவர் ஓமன் நாட்டில் பைக்கில் செல்லும் வீடியோ வைரலானது.
இந்நிலையில், நடிகர் அஜித், ஓமன் நாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இவர் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிவரும் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும், 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் அவர் சென்னை திரும்பியுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் அஜித், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் அஜித்!https://t.co/wZmh8RoblP#thanthitv #actor #ajith
— Thanthi TV (@ThanthiTV) September 22, 2023
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது, "மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன். 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் அவரை சந்தித்ததற்கு பின் எனது மனநிலை மாறிவிட்டது. உன்னால முடியும் நீ போய் பெரிய படம் பண்ணு என்ற நம்பிக்கை அளித்தது அவர்தான்" என்று பேசினார்.
- பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’.
- சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து 'லவ் டுடே' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த படங்களை பட்டியலிட்டிருந்தார். அதில் பிரதீப் ரங்கநாதன் பெயர் இல்லாததை பார்த்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, 'லவ் டுடே' படமும் ரூ.100 கோடி வசூலித்ததாக பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக தனது இரண்டாவது படத்திலே ரூ. 100 கோடி கிளப்பில் பிரதீப் ரங்கநாதன் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.
- விஷால் சொத்துக்கணக்கு மற்றும் வங்கிக் கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
- விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய கடனை லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்தியது. இந்த தொகையை திருப்பித் தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரித்த 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் வேறு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, விஷால் சொத்துக்கணக்கு மற்றும் வங்கிக் கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இருநீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட இடைக்கால தடையும் விதித்தது.
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, விஷால் நேரில் ஆஜரானார். அப்போது, அவரது சொத்துக் கணக்கு, வங்கி கணக்கு விவரங்களை 19-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், கடந்த 19-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. அவர் தரப்பில் வக்கீல்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஷாலை நேரில் ஆஜராக மீண்டும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் ஆஜராகினார். அவர் தரப்பில் இளம் வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ''19-ந்தேதி சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தாக்கல் செய்ய உத்தர விட்டும், தாக்கல் செய்யவில்லை. வக்கீல்களும் ஆஜராகவில்லை. இந்த ஐகோர்ட்டின் உத்தரவை விஷால் வேண்டுமென்றே அலட்சியம் செய்கிறார். இந்த ஐகோர்ட்டை பொறுத்தவரை அனைவரும் சமம்தான். பெரியவர், சின்னவர் என்ற பாகுபாடு கிடையாது. அதனால், விஷால் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பேன்'' என்று எச்ரிக்கை செய்தார்.
அதற்கு வக்கீல், நேற்று அனைத்து விவரங்களும் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என் றார். உடனே நீதிபதி, அதற்கான ஆதாரம் எங்கே? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.
- நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் 2024-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல், சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் இந்தியில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
போயபட்டி சீனு- சூர்யா
இந்நிலையில், நடிகர் சூர்யா, தெலுங்கு இயக்குனர் போயபட்டி சீனுவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தெலுங்கில் லெஜெண்ட், சரைனோடு, அகண்டா போன்ற மாஸ் ஆக்ஷன் படங்களை இயக்கிய போயபட்டி சீனு இயக்கத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது உறுதியாகும் பட்சத்தில் 'கங்குவா' படப்பிடிப்பிற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
- நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- இவர் சமீபத்தில் மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
சமீபத்தில் மஞ்சள் காமாலையினால் ரோபோ சங்கர் மிகவும் மெலிந்து காணப்பட்டார். இவரை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் தன் குடும்பத்துடன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரோபோ சங்கருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கமல்ஹாசன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அறிவுரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
When Actor #RoboShankar and his family members met #Ulaganayagan @ikamalhaasan pic.twitter.com/qSeVrkM6R7
— Ramesh Bala (@rameshlaus) September 22, 2023
- செப்டம்பர் 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் செப்டம்பர் 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.
முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மன்னிப்பு கேட்டதுடன் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாந்து சென்ற ரசிகர்கள் டிக்கெட்டை இமெயிலில் அனுப்ப கூறியும், அதை பரிசீலனை செய்து அவர்களுக்கு டிக்கெட்டுக்குரிய பணத்தை திரும்ப தருவதாகவும் கூறி இருந்தார். இதையொட்டி மின்னஞ்சலில் சுமார் 4000 பேர் பணத்தை திருப்பிக் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் பணியில் ACTC நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது. இதனை அவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
Dear friends, as your grievances have reached us, we have started the process of refunding after due diligence, from all 3 booking sites.
— ACTC Events (@actcevents) September 21, 2023
A million apologies once again for all the inconvenience caused to you and thank you for your patience.@arrahman
- தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
- விஜய் ஆண்டனியின் மகள் திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த 19-ம் தேதி அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12ம் வகுப்பு படித்து வந்த மீரா திடீரென தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், மகள் மீரா குறித்து விஜய் ஆண்டனி உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில்,
"அன்பு நெஞ்ஜங்களே,
என் மகள் மீரா மிகவும் அன்பானவள்,தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.
நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள்.
உங்கள் விஜய் ஆண்டணி," என்று குறிப்பிட்டுள்ளார்.
— vijayantony (@vijayantony) September 21, 2023
- ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறது.
- இயக்குநர் அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு பாடல் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் விருப்பத்துக்குரிய நட்சத்திர ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன். இவர்கள் தங்களுடைய ஒருமித்த ஒத்துழைப்பால் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் வரலாற்றை தொடர்கிறார்கள்.
பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'ஜவான்' திரைப்படத்தில் ஷாருக் கான் - தீபிகா படுகோன் இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். இவர்களின் தீவிர ஆதரவாளர்களை மகிழ்விக்க, படத்தின் தயாரிப்பாளர்கள் 'பட்டாசா..' எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
'ஜவான்' திரைப்படம் இந்திய திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்த்தெறிந்திருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து ஏகோபித்த பாராட்டுகளை பெற்றிருக்கிறது.
- இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி ரோட்' .
- இப்படம் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தென்னிந்திய பிரபலமான நடிகை திரிஷா, இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் 'தி ரோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. திரில்லர் வடிவில் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி 'லியோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு வைபை அதிகரித்து வருகிறது.
லியோ போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் இந்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய்யும் சஞ்சய் தத்தும் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
KEEP CALM AND FACE THE DEVIL
— Seven Screen Studio (@7screenstudio) September 21, 2023
Witness the ultimate face-off on October 19th ??#LeoPosterFeast #LeoHindiPoster#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @Jagadishbliss @GTelefilms @SonyMusicSouth #Leo pic.twitter.com/5p3sfTXCb2
- விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'.
- இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.
இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.
கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.