search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி 'லியோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு வைபை அதிகரித்து வருகிறது.


    லியோ போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் இந்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய்யும் சஞ்சய் தத்தும் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'.
    • இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.


    கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    • நடிகை திரிஷா 'லியோ' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


    இப்படி பிசியாக பல படங்களில் நடித்து வரும் திரிஷா 40 வயதை எட்டியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு திருமணம் என சில நாட்களாக பல வதந்திகள் பரவி வருகிறது. சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளரை திரிஷா திருமணம் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.


    இந்நிலையில், நடிகை திரிஷா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களை பற்றியும் உங்கள் அணியை பற்றியும் உங்களுக்கே தெரியும். அமைதியாக இருங்கள், வதந்திகளை பரப்பாதீர்கள். வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். திருமண வதந்திகளை பரப்பியவர்களுக்கு திரிஷா பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான்.
    • இவர் நடிப்பில் சமீபத்தில் 'ஜவான்' திரைப்படம் வெளியானது.

    பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் அறிமுகமான இவர் படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து கொண்டு பாலிவுட்டில் கால்பதித்தார். 1992-ஆம் ஆண்டு 'தீவானா' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ஷாருக்கான் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் தனது பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.


    இவர் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்திருந்த 'ஜவான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது. இந்த வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது.


    இந்நிலையில், நடிகர் ஷாருக்கானை முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கம்பீர், "ஷாருக்கான் பாலிவுட்டிற்கு மட்டும் ராஜா அல்ல, அனைவர் மனதிலும் அவர் ராஜாதான். நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நான் அளவற்ற அன்புடனும் மரியாதையுடனும் திரும்பிச் செல்கிறேன். உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.


    • ராகுல் ஆர்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஐமா’.
    • இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    'ஆருயிரே' குறும்படத்தை இயக்கிய இயக்குனர் ராகுல்.ஆர். கிருஷ்ணா. எழுதி, இயக்கியுள்ள படம் 'ஐமா'. தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக யூனஸ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எல்வின் ஜூலியட் நடிக்கிறார்.


    மேலும், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே.ஆர். ராகுல் இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ஐமா ' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குனர் பேரரசு, இயக்குனர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



    இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசியதாவது, சிறு முதலீட்டு படங்கள் தான் திரையுலகை என்றும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் தோராயமாக 320 படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 100 முதல் 150 படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. ஆனால் சுமார் 70 படங்கள் தான் சிரமப்பட்டு வெளிவந்திருக்கின்றன. வெளியான பல படங்களின் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். மீதமுள்ள 250 லிருந்து 300 படங்கள் வெளிவராமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இந்தப் படங்களில் முடங்கி உள்ளது.


    நான் நிதி உதவி செய்த ஒரு படத்திற்கு 12 கோடி செலவானது. ஆனால் அதன் வெளி மொழி உரிமை போன்றவை ஆறு கோடிக்கு விற்பனையானது, இருந்தாலும் கூட அந்தப் படத்தை வெளியிட முடியவில்லை. இதுதான் இன்றைய நிலைமை. சிறு முதலீட்டுப் படங்கள் சிரமம் இன்றி வெளிவர வேண்டும். அப்படி வெளிவந்தால் அந்த தயாரிப்பாளர் மீண்டும் படம் தான் எடுப்பார். ஆனால் பெரிய படங்களின் மூலம் வரும் லாபம் மீண்டும் சினிமாக்கு வருமா என்றால்,தெரியாது. இன்று 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடியுள்ளது. ரஜினிகாந்த் பெரிய நட்சத்திர நடிகர்தான் சந்தேகம் இல்லை. இருந்தாலும் அவருக்குக் கூட மலையாளத்திலிருந்து மோகன்லாலும் கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் வந்து நடிக்க வேண்டி உள்ளது. இப்படி இன்று சினிமா மாறி உள்ளது. இப்போதெல்லாம் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களை நான் வரவேற்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

    • விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் வசூலை குவித்து வருகிறது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ.65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளதால் விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல நாட்களுக்கு பிறகு விஷால் படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகை ஸ்ருதிஹாசன் ‘சலார்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

    நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத்தன்மை கொண்டவர் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். இவர் தற்போது 'சலார்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.


    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது புகைப்படக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது கருப்பு நிற புடவையில் அழகில் மிரட்டும் விதமாக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு 'அழகினால் எங்களை கொல்லாதீர்கள் ராணி' என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • ஹரிஷ் கல்யாண் பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிப்பில் வெளியான ‘எல்.ஜி.எம்’ கலவையான விமர்சனங்களை பெற்றது.

    'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'எல்.ஜி.எம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    திருவண்ணாமலையில் ஹரிஷ் கல்யாண்

    நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.


    பின்னர் 'மாரி 2', 'என்.ஜி.கே', 'கார்க்கி' என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, 'கார்த்திகேயா', 'கார்த்திகேயா 2' போன்ற படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


    இதனை நடிகை சாய் பல்லவி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். சாய் பல்லவி இதற்கு முன்பு நாக சைதன்யாவுடன் 'லவ் ஸ்டோரி' என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
    • இப்படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியானது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.


    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை தீபாவளியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தீபாவளியன்று கார்த்தி நடித்திருக்கும் 'ஜப்பான்' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் படம் திரு.மாணிக்கம்.
    • திரு.மாணிக்கம் திரைப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படம் திரு.மாணிக்கம் என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. மாணிக்கம் என்ற ஒரு மனிதன் எப்படி திரு.மாணிக்கமாக உயர்கிறான் என்பதே இந்தப் படத்தின் அடிப்படைக் கதை.

     

    தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்கப் படைப்புகளைத் தந்த முன்னணி இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரு. மாணிக்கம் படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    • விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
    • அக்டோபர் 19-ம் தேதி 'லியோ’ திரைப்படம் வெளியாகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி 'லியோ' திரைப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.


    லியோ போஸ்டர்

    இதையடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 'லியோ' படக்குழு தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழ் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அனல் தெறிக்கும் பைக் பக்கத்தில் விஜய் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 


    ×