search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கவிஞர் வைரமுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
    • இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

    திரையுலகில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில் இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது இவர் பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.


    ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய வைரமுத்து

    இந்நிலையில், 'கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்'என்ற தலைப்பில் ஆய்வுசெய்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதை அறிந்த வைரமுத்து அவரை வீட்டுக்கழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும், தனது சமூக வலைதளத்தில், "லூர்துராஜ்

    ஓர் ஆட்டோ ஓட்டுநர்

    'கவிப்பேரரசு வைரமுத்து

    திரைப்பாடல்களில்

    புதுக்கவிதைக் கூறுகள்'

    என்ற தலைப்பில் ஆய்வுசெய்து

    சென்னைப் பல்கலைக்கழகத்தில்

    டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்

    வியந்து போனேன்;

    வீட்டுக்கழைத்துப்

    பாராட்டினேன்

    ஆட்டோ ஓட்டுநர்

    கூட்டத்தில் ஓர் அதிசயம்

    வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.


    • நடிகர் விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
    • இப்படத்தின் பணிகளுக்காக விஜய் அமெரிக்கா சென்றார்.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.


    கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தின் பணிகளுக்காக அமெரிக்க சென்றிருந்த விஜய் சமீபத்தில் சென்னை திரும்பினார்.


    இந்நிலையில், நடிகர் விஜய், நேற்று தனது பெற்றோரை சந்தித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரையும், அம்மாவையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் 'உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து' என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நெரிசலில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனம் சிக்கியது.
    • இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.

    முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்த நெரிசலில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனமும் சிக்கியது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஏராளமான ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும், ஏ.ஆர்.ரகுமானையும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மன்னிப்பு கேட்டதுடன் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாந்து சென்ற ரசிகர்கள் டிக்கெட்டை இமெயிலில் அனுப்ப கூறியும், அதை பரிசீலனை செய்து அவர்களுக்கு டிக்கெட்டுக்குரிய பணத்தை திரும்ப தருவதாகவும் கூறி இருந்தார்.


    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் இருபதாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கிய நிலையில் 41,000 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிகேட்டு ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ள கடிதத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் இதனால் 20 ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் வேலையில் ஈடுபடவுள்ளதாகவும் காவல் துறை இந்த நிகழ்ச்சிக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதில், மேலும் டிக்கெட் விற்பனை செய்தது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காததால் குறைவான காவலர்கள் பணியாற்றியதால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் காவல்துறையினர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிக்கை சமர்பிக்குமாறு கேட்டுள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடக்கும் என்று கூறப்படுகிறது.

    • பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’.
    • இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான 'தோரி போரி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள 'அன்னை அன்பு முகத்தில் ஆண்டவனை கண்டிடலாம்' போன்ற வரிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



    • 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியானது.
    • இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' செப்டம்பர் 7-ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது.


    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதனை இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்'.
    • தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.


    தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'புளூ ஸ்டார்' படத்தின் முதல் பாடலான 'ரெயிலின் ஒலிகள்' பாடல் வெளியாகியுள்ளது. பிரதீப் குமார் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



    • ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர். முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி தவித்தனர்.

    இந்த நெரிசலில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனமும் சிக்கியது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஏராளமான ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும், ஏ.ஆர்.ரகுமானையும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பணத்தை திருப்பி அனுப்பினார். இந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மன்னிப்பு கேட்டதுடன் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாந்து சென்ற ரசிகர்கள் டிக்கெட்டை இமெயிலில் அனுப்ப கூறியும், அதை பரிசீலனை செய்து அவர்களுக்கு டிக்கெட்டுக்குரிய பணத்தை திரும்ப தருவதாகவும் கூறி இருந்தார்.

    இதையொட்டி மின்னஞ்சலில் சுமார் 4000 பேர் பணத்தை திருப்பிக் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இந்தநிலையில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து முதற்கட்டமாக சுமார் 400 பேருக்கு டிக்கெட் கட்டணத்தை ஆன்லைன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் திருப்பி அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கமல்ஹாசனின் 233-வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.
    • இப்படத்திற்காக கமல்ஹாசன் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    நடிகர் கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 233-வது படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படத்திற்காக கமல்ஹாசன் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.


    இந்நிலையில், கமல்ஹாசனின் 233-வது படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இராணுவ பின்னணியில் உருவாகவுள்ளதாகவும் கமல்ஹாசன் முன்னாள் இராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மின்மினி’.
    • இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

    பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் 'மின்மினி' திரைப்படம் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது.


    இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015-ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார். அந்த கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு 'மின்மினி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


    மின்மினி போஸ்டர்

    இந்நிலையில், 'மின்மினி' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
    • இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்தம்'.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


    ரத்தம் போஸ்டர்

    இந்நிலையில், 'ரத்தம்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு நாள்' பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • இசை நிகழ்ச்சியில் நடந்த தவறுகளுக்கு வருந்துவதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்திருந்தார்.
    • டிக்கெட் நகலை சரிபார்த்து ரசிகர்களுக்கான கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் முறையான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இல்லாததால் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.



    இதையடுத்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து டிக்கெட் நகலை சரிபார்த்து ரசிகர்களுக்கான கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு நிகழ்ச்சியில் நடந்த தவறுகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு நானும் போயிருந்தேன். அங்கு மக்கள் பட்ட கஷ்டங்களை நானும் பார்த்தேன். ஏ.ஆர்.ரகுமான் மீது நீங்கள் வைத்திருக்கும் பாசத்தின் உதாரணம் இந்த கோபம். ஏ.ஆர்.ரகுமானை தவறாக நினைக்காதீர்கள்.


    அவர் இரண்டு நாட்களாக மன உளைச்சலில் உள்ளார். இசையில் கவனம் செலுத்தியதால் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் அவர் கவனம் செலுத்த தவறிவிட்டார் என்று நினைக்கிறேன். மக்கள் கோபம் கொள்ளாமல் பொறுமை காக்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமானை யாரும் வெறுத்துவிடாதீர்கள். அவர் பணத்திற்காக மக்களை ஏமாற்றுபவர் அல்ல. நான் எதும் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்" என்று பேசினார்.

    • ஒரு சில பேர் சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரகுமானை தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.
    • இசை நிகழ்ச்சிக்கு பணம் செலுத்தி பங்கேற்க முடியாதவர்களுக்கு மிக விரைவில் பணம் திருப்பி செலுத்தப்படும்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் முறையான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இல்லாததால் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


    இதையடுத்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர்.

    அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனர் ஹேமந்த், "இசை நிகழ்ச்சியின் போது நடைபெற்ற அனைத்து விசயங்களுக்கு நாங்களே பொறுப்பேற்று கொள்கிறோம். சமீப நாட்களாக ஒரு சில பேர் சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரகுமானை தாக்கி பதிவிட்டு வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமானுக்கும் இந்த அசவுகரியங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அவரை தாக்க வேண்டாம். மேலும், இந்த இசை நிகழ்ச்சிக்கு பணம் செலுத்தி பங்கேற்க முடியாதவர்களுக்கு மிக விரைவில் பணம் திருப்பி செலுத்தப்படும்" என்று பேசினார்.


    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட்டியின் நகலை உரிய இமெயில் ஐடிக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் நகலை சரிபார்த்து அவர்களுக்கான கட்டணத்தை திருப்பி செலுத்தும் பணியில் நேற்றிரவில் இருந்து ஈடுபட்டுள்ளனர்.


    ×