search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சிம்புவின் 48-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
    • 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    சிம்பு - தேசிங்கு பெரியசாமி

    இ்ப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் சிம்புவும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் சந்தித்து பேசும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





    • ஜவான் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • வேட்டை, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து ஏழுமலையானை ஷாருக்கான் வழிபட்டார்.

    நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான 'ஜவான்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் நேற்று இரவு திருப்பதிக்கு சென்றனர். குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டனர்.

    வேட்டை, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து ஏழுமலையானை ஷாருக்கான் வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் கோவிலை விட்டு வெளியே வந்த அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 25-வது நாளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
    • இயக்குனர் நெல்சனுக்கு கலாநிதி மாறன் சமீபத்தில் போர்ஷே காரை பரிசாக கொடுத்தார்.

    ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இசையமைப்பாளர் அனிருத்-க்கு காசோலை மற்றும் புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார். இந்த காரின் விலை ரூ. 1.44 கோடி என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.


    இந்நிலையில், இப்படத்தின் ஹேஷ்டேக் சாதனை செய்துள்ளது. அதாவது, X தளத்தில் 'லியோ' ஹேஷ்டேக் 25 மில்லியன் பதிவுகளை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    • நடிகர் யோகிபாபு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
    • இவர் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட யோகிபாபு படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார். இது தொடர்பான வீடியோவையும் இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும், கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட யோகிபாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடும் செய்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் யோகிபாபு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    • தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கில்லி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கில்லி'. இப்படத்தில் திரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் 'முத்து பாண்டி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவர் பேசிய 'ஹாய் செல்லம்' என்ற டயலாக் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

    இந்நிலையில், 'கில்லி' பிரகாஷ் ராஜின் பிட்டு என்னுடையதுதான் என்று சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, முதன் முதலில் செல்லம்னு சினிமாவில் நான்தான் பயன்படுத்தினேன். பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வடிவேலுவை இயக்கும் போது, செல்லம் இங்க வாடி..போடி.. என்றுதான் நானும் அவரும் பேசிக் கொள்வோம். அது அப்படியே பரவியிருச்சு. அது பரவும்போது கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும்போது சேர்த்து வெச்சிட்டாங்க.. அது நான் போட்டதுதான். என் பிட்டுதான் என்று பேசினார்.

    • அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.


    நடிகர் ஷாருக்கான், ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்து வந்தார். இதில் நடிகர் கமல்ஹாசன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "கமல் மிகவும் அன்பானவர். எல்லா நடிகர்களுக்கும் அவர் உத்வேகமாக இருக்கிறார்" என்று பதிலளித்தார்.


    • நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


    'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.


    இந்நிலையில், 'தளபதி 68' படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அதாவது, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவன் 'தளபதி 68' படத்தின் முதல் பாடல் தரலோக்கலாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • நடிகர் அஸ்வின் குமார் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
    • இவர் தற்போது பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

    'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் குமார் அதன் பின்னர் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் நடித்த 'செம்பி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

    நடிகர் அஸ்வின் குமார் சென்னையில் புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்தியன் டெரெய்ன் ஷோரூமை திறந்து வைத்துள்ளார். இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில் நடிகர் அஷ்வின் குமாருடன் இணைந்து, இந்தியன் டெரெய்ன் நிர்வாக இயக்குனர் சரத் நரசிம்மன், தலைமை வர்த்தக அதிகாரி ஷெஹ்னாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அஷ்வின் குமார், "பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் இந்தியன் டெரெய்ன் ஸ்டோரை திறந்து வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட காலமாக இந்த பிராண்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் என்ற முறையில், இந்த ஆடைகளின் தரம், ஸ்டைல், புதுமை ஆகியவை குறித்து எனக்கு நன்கு தெரியும். மேலும், இங்கு அனைவரும் விரும்பும் வகையில் நவீன காலத்திற்கு ஏற்ற வகையிலான ஏராளமான ஆடைகள் உள்ளன. இங்கு இந்த புதிய ஷோரூமை திறந்துள்ள இந்நிறுவனத்திற்கும் அதன் நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    • ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி-2'.
    • லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லைகா புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம்.தமிழ் குமரன், இயக்குனர் பி. வாசு, ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், குழந்தை நட்சத்திரங்கள் மானசி, தீக்ஷா, நடிகர்கள் ரவி மரியா, விக்னேஷ், கூல் சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பி. வாசு பேசியதாவது, என்னிடம் அடிக்கடி வளர்ந்துவிட்ட டெக்னாலஜியை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்பார்கள். அதற்கு ஒரே உதாரணம் கூல் சுரேஷ். அவரைப் போன்ற பலரைப் பார்த்து என்னை நான் அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். அவர் இயக்குனர் இல்லை. இருப்பினும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கிறார். இவரை போன்ற கலைஞர்களை பாராட்டுவது தான் என் போன்றோரின் கடமை.


    அதே போல் தான் நான் இயக்குனராக பணியாற்றும்போது ராகவா லாரன்ஸ் என்னிடம், 'நான் நான்காவது வரிசையில் ஆடிக் கொண்டிருக்கிறேன். ஒரு வரிசை முன்னேறி மூன்றாவது வரிசையில் ஆட மாட்டேனா என ஏங்குகிறேன் சார்' என்பார். நான்காவது வரிசையிலிருந்து முதல் வரிசையில் ஆடி நடன உதவியாளராகி நடன இயக்குனராகவும் கடின உழைப்பால் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு என்னுடைய இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவர். அதன் பிறகு கதாநாயகனாகி நல்ல செயல்களை செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். அவருடைய முயற்சியில் அவருடைய உழைப்பில் இந்த இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறார். தன்னிடம் இருப்பதை மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்கும் நல்ல மனதுள்ள மனிதர்.


    இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லாரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் பற்றியும் நீங்கள் பேசுவீர்கள். ஏனெனில் அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு கிடைத்த அருமையான முதலாளி சுபாஸ்கரன். அவரைப் பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அவரால் பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்கிறது. ஆனால் இது எதுவும் தெரியாமல் இருப்பவர்தான் சுபாஸ்கரன்.


    ஆடியோ வெளியிட்டு விழாவில் என் அருகில் அமர்ந்திருந்தார் சுபாஸ்கரன். மாற்றுத்திறனாளி கலைஞர்கள் மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது தமிழ்குமரனை அழைத்து ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார். உடனடியாக அவர்களுக்கு மேடையிலேயே ஒரு கோடி ரூபாய் நன்கொடையை வழங்கியதுடன் மட்டுமல்லாமல் அவர்களுடன் அமர்ந்தார். நல்ல மனிதர். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் அது இந்த படத்தின் வெற்றியிலும் தெரியும்.


    சூப்பர் ஸ்டாருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் மட்டும்தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான். விஜய், அஜித் என ஒவ்வொருத்தருக்கும் உலக அளவில் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதற்கு உண்டான பலனை மக்கள் அளிக்கிறார்கள். அதேபோல் அதற்கு உண்டான பட்டத்தையும் மக்களே வழங்குவார்கள். அதனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை நன்றி'' என்றார்.




    • சமந்தா -விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் 'குஷி'.
    • இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.


    குஷி போஸ்டர்

    இந்நிலையில், 'குஷி' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'குஷி' திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.70.23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.




    • சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
    • இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

    நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'ரத்தம்'. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ரத்தம் போஸ்டர்

    இந்நிலையில், 'ரத்தம்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

    ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'இறைவன்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.





    ×