search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • மார்க் ஆண்டனி படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     

    ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டைம் மெஷின் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக மார்க் ஆண்டனி உருவாகி இருப்பது டிரைலரில் தெரியவந்துள்ளது.

    ஆக்ஷன், காமெடி கலந்த காட்சிகள் அடங்கிய மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து இருப்பதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • சந்திரமுகி 2 படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

     

    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    இந்த நிலையில், சந்திரமுகி 2 படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
    • விஜய் ஜோடியாக 2003-ம் ஆண்டு வசீகரா என்ற படத்தில் சினேகா நடித்துள்ளார்.

    'லியோ' படத்திற்கு அடுத்ததாக விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இதில் விஜய் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் ேதாற்றம் ஹாலிவுட் தரத்தில் 3டி வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தில் மாற்றும் பணி லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. இதற்காக விஜய், வெங்கட் பிரபு, கல்பாத்தி அகோரம் அங்கு சென்றுள்ளனர்.

    தந்தை விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் இன்னொரு விஜய்க்கு அம்மாவாக நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவருக்கு பதிலாக தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகாவிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    விஜய் ஜோடியாக 2003-ம் ஆண்டு வசீகரா என்ற படத்தில் சினேகா நடித்துள்ளார். 20 வருடங்களுக்கு பின்னர் தற்போது அவருக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

    • ஸ்ரேயா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
    • ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கப்சா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

    இந்த நிலையில் 40 வயதாகும் ஸ்ரேயா இன்னும் வயதான தோற்றம் இல்லாமல் நடிக்க வந்த ஆரம்பத்தில் எவ்வளவு அழகாக இருந்தாரோ அதே அளவிற்கு கவர்ச்சியுடனும், அழகுடன் இருக்கிறார். ரசிகர்களுக்காகவே வித்தியாசமாக உடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் சேலை அணிந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    புகைப்படங்களை பார்த்த பலரும் 40 வயதில் இவ்வளவு அழகா? இன்னும் உங்களுக்கு கவர்ச்சி குறையவே இல்லை என வியப்புடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

    • மகேந்திரன் என்பவர் தன்னை சமூகஆர்வலர் எனக்கூறிக்கொண்டு வீடு கட்டுவது தொடர்பாக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்தார்.
    • இணையதளங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி என்மீது களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.

    கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபிசிம்ஹாவிற்கு சொந்தமான 15 சென்ட் நிலம் உள்ளது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை கொடைக்கானலை சேர்ந்த காண்ட்ராக்டர்கள் ஜமீர், காசிம்முகமது ஆகியோர் மேற்கொணடு வந்தனர்.

    இவர்களுக்கும், பாபிசிம்ஹாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் கட்டுமான பணிகள் தாமதமாகி வந்துள்ளது. இதுகுறித்து நடிகர் பாபிசிம்ஹா காண்ட்ராக்டர்களிடம் கேட்டபோது அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காண்ட்ராக்டர்களுடன் சேர்ந்து பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவரும் நடிகரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் பாபிசிம்ஹா கொடுத்த புகாரின்பேரில் காண்ட்ராக்டர்கள் உள்பட 4 பேர் மீது கொலைமிரட்டல், ஏமாற்றுதல், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து நடிகர் பாபிசிம்ஹா தெரிவிக்கையில், நான் முறையான அனுமதிபெற்றுதான் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறேன். பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தன்னை சமூகஆர்வலர் எனக்கூறிக்கொண்டு வீடு கட்டுவது தொடர்பாக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்தார்.

    இணையதளங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி என்மீது களங்கம் ஏற்படுத்தி வருகிறார். என்னையும், எனது தாயாரையும் அவர் மிரட்டிய அனைத்து ஆவணங்களும் உள்ளது. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கஞ்சா கடத்தல், பணம் கேட்டு மிரட்டுதல், வெளிநாட்டு பெண்மணியை மிரட்டிய வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    அதேபோல் தன்னையும் அவர் மிரட்டி வருகிறார். பணம் பறிப்பதையே தொழிலாக வைத்துள்ள இவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியாவின் பணக்கார நடிகையாக கருதப்படும் ஆலியா பட்டுக்கு, ரூ.560 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது.
    • வெற்றிகரமான பெண் தொழில் அதிபராகவும் ஆலியா பட் திகழ்கிறார்.

    பாலிவுட் முன்னணி நடிகையாக திகழும் ஆலியா பட், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட 'கங்குபாய் கதியவாடி' படத்துக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

    இந்தியாவின் பணக்கார நடிகையாக கருதப்படும் ஆலியா பட்டுக்கு, ரூ.560 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது. மும்பையில் 2 சொகுசு வீடுகளும், லண்டனில் ஒரு வீடும் சொந்தமாக இருக்கிறது. பல சொகுசு கார்களும் அடங்கும்.

    இதில் மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5-வது தளத்தை அவர் கடந்த 2019-ம் ஆண்டு வாங்கினார். இதே குடியிருப்பில் 7-வது தளம் கணவர் ரன்பீர் கபூருக்கு சொந்தமானது ஆகும்.

    இதுதவிர வெற்றிகரமான பெண் தொழில் அதிபராகவும் ஆலியா பட் திகழ்கிறார். பிரபல ஆடை பிராண்டின் உரிமையாளரான ஆலியா பட் நிர்வகிக்கும் நிறுவனத்தின் மதிப்பீடு தற்போது ரூ.150 கோடியை எட்டியிருக்கிறது. இந்த பிராண்ட் ஆடைகள் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் மிகவும் விரும்பப்படுகிறதாம்.

    இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    இப்படி சினிமா தாண்டி தொழில் அதிபராகவும் ஆலியா பட் கலக்கி வருகிறார்.

    • சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு புனித் சிங் ராஜ்புத் அறிமுகம் ஆனார்.
    • நான் இனியும் அவருடன் தொடர்பில் இருக்க விரும்பவில்லை.

    போஜ்பூரி நடிகையான பிரியன்சு சிங், சக நடிகர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். தன்னுடன் இணைந்து நடித்த புனித் சிங் ராஜ்புத் மீது அவர் இந்த புகாரை கூறியிருக்கிறார்.

    இதுகுறித்து நடிகை பிரியன்சு சிங் கூறுகையில், "சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு புனித் சிங் ராஜ்புத் அறிமுகம் ஆனார். என் மூலமாகவே அவர் படங்களிலும் நடித்தார். என்னிடம் அன்பாக பழகிய அவர், என்னை திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்தார். அதை நம்பி நானும் அவருடன் நெருக்கமாக பழகினேன்.

    ஒருநாள் நான் வீட்டில் தனியாக இருந்தபோது குடிபோதையில் வந்த அவர், என்னிடம் தகாத முறையில் அத்துமீறி நடந்துகொண்டார். பின்னர் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு என்னை சமாதானப்படுத்தினார். திருமணம் செய்துகொள்வதாக அவர் தொடர்ந்து உறுதி அளித்ததால் நான் இதை பெரிதுபடுத்தவில்லை.

    இதற்கிடையில் இதேபோல மீண்டும் ஒருமுறை என்னிடம் அத்துமீறினார். முடியை பிடித்து இழுத்து சொல்லமுடியாத அளவில் என்னை பலாத்காரம் செய்தார். நான் இனியும் அவருடன் தொடர்பில் இருக்க விரும்பவில்லை. திருமணம் செய்துகொள்ளவும் விருப்பமில்லை. எனக்கு நீதி வேண்டும். புனித் சிங் ராஜ்புத் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றார்.

    நடிகையின் பாலியல் பலாத்கார புகார் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • விஜய் ஆண்டனி 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், விஷாலின் 'எனிமி' படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படம் அடுத்த ஆண்டு (2024) கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ரோமியோ போஸ்டர்

    இந்நிலையில், 'ரோமியோ' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தென்காசி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.




    • தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க இசையமைப்பாளர் தேவா மறுத்துள்ளார். அதாவது, தனுஷின் 50-வது படம் வட சென்னை சார்ந்த படம் என்பதால் இசையமைப்பாளர் தேவாவை வில்லானாக நடிக்க வைக்க தனுஷ் அணுகியுள்ளார். ஆனால், தேவா தனக்கு வசனங்களை மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கும் என்றும் இதனால் பல டேக்குகளை எடுக்க நேரிடலாம், இது மற்ற நடிகர்களை பாதிக்கும் என்பதால் மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் கிச்சா சுதீப் 'நான் ஈ' படத்தில் நடித்து பிரபலமானார்.
    • இவர் விஜய்யின் ‘புலி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராப் போன்ற படங்களின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து ரசிகர்களை கவந்தார்.


    கிச்சா 47 போஸ்டர்

    இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் 47-வது படத்தை இயக்குனர் சேரன் இயக்கவுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




    • தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தன்யா ஹோப்.
    • இவர் ’கிக்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

    தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தன்யா ஹோப். அடுத்ததாக 'தாராளபிரபு' என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'கிக்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.


    இந்நிலையில் நடிகை தன்யா ஹோப் தன் உதட்டு அறுவை சிகிச்சை குறித்து மனம் திறந்துள்ளார். அதில், "நான் முதன் முதலாக காமெடி படத்தில் நடித்துள்ளேன். 'கிக்' படத்தில் ரசிகர்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். படம் முழுவதும் சந்தானத்துடன் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பல காட்சிகளில் நடித்துள்ளேன்.


    என்னிடம் உங்கள் உதடு எப்படி பெரிதாக உள்ளது. அறுவை சிகிச்சை செய்தீர்களா? என்று கேட்கிறார்கள். நான் உதட்டை அறுவை சிகிச்சை எதுவும் செய்யவில்லை. இயற்கையாகவே என் உதடு இப்படிதான் உள்ளது. இந்தியர்களுக்கு உதடுகள் பெரிதாக இருந்த போதும் என்னிடம் மட்டும் ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. சென்னையில் இ.சி.ஆர். சாலை எனக்கு பிடித்த இடம். ஸ்கை டைவிங் செய்வது ரொம்ப பிடிக்கும்" என்று கூறினார்.

    • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'.
    • இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.



    கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், 'இறுகப்பற்று' படத்தின் முதல் பாடலான 'பிரியாதிரு'பாடல் வெளியாகியுள்ளது. யுவன் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    ×