search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
    • படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

    தெலுங்கில் ஹிட் பட சீரிஸ்களை இயக்கியவர் சைலேஷ் கொலனு. இவர் அடுத்ததாக சைந்தவ் என்கிற தெலுங்கு படத்தை பான் இந்தியா முறையில் எடுத்து வருகிறார்.

    இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கிறார். விக்டரி வெங்கடேஷின் 75-வது படமான சைந்தவ்-ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.

     ஹிட்வெர்ஸ் புகழ்பெற்ற சைலேஷ் கொலானு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

    இந்த படத்தின் கதை எட்டு முக்கிய நடிகர்களை சுற்றி நடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏழு கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மற்றொரு மிக முக்கிய கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்ற நடிகராக வலம்வரும் ஆர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் பெயர் மனாஸ். மெல்லிய தோற்றம், ஸ்டைலிஷ் லுக்கில் மிஷின் கன்னை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஆர்யா, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அனைவரையும் கவர்கிறார்.

    இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பை கேரி பி.ஹெச்., தயாரிப்பு டிசைன் அவினாஷ் கொல்லா, இணை தயாரிப்பாளராக கிஷோர் தல்லூர் இருக்கிறார்.

    பான் இந்தியா திரைப்படமாக சைந்தவ் உருவாகி வருகிறது. இந்த படம் அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழியில் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.

    • ஜவான் படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.
    • ஜவான் படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது.

    பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான் நடித்து இருக்கும் திரைப்படம் ஜவான். இயக்குனர் அட்லி இயக்கி இருக்கும் இந்த படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அட்லி, "என் அண்ணன் விஜய்தான் ஜவான் உருவாக முக்கிய காரணம். நீ என்ன பண்ணுவனு தெரியாது, இந்த படத்த நீ பண்ணணும்னு விஜய் அண்ணான் சொன்னாரு," என்று தெரிவித்தார்.

    செப்டம்பர் 7-ம் தேதி ரிலீசாக இருக்கும் ஜவான் படத்தில் ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.

    • ஜவான் படம் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது.
    • ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஜவான் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் நேரில் கலந்து கொள்ளவில்லை. மாறாக வீடியோ மூலம் தோன்றி படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    அட்லி இயக்கி இருக்கும் ஜவான் படத்தில் ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்து இருக்கும் ஜவான் படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

    • எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அலங்கு’.
    • இந்த படத்தில் குணாநிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    உறுமீன் , பயணிகள் கவனிக்கவும் படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'அலங்கு'. இந்த படத்தில் குணாநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, சவுந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    டி.சபரிஷ் , எஸ்.ஏ. சங்கமித்ரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜீஷ் இசையமைக்க எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.


    'அலங்கு' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கேரள மாநிலம் இடுக்கி, அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம் , கோவை மாவட்டம் ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படக்குழு நடத்தி முடித்துள்ளனர். முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தில் அதிக அளவில் வன விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்ததும் இப்படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

    • ஜெயிலர் திரைப்படம் இதுவரை ஒ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை.
    • ஜெயிலர் திரைப்படம் இதுவரை ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

    ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், ஜெயிலர் திரைப்படம் இதுவரை ஒ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை. ஜெயிலர் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் தளங்களில் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ஹெச்.டி. ப்ரின்ட் (அதிக தரமுள்ள) இணையத்தில் கசிந்துள்ளது.

     

    ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் படம், ரிலீசான சிறிது நாட்களிலேயே ஹெச்.டி. வடிவில் இணையத்தில் லீக் ஆகி இருப்பது படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    • நடிகர் விஜய் தேவரகொண்டா இளம் நடிகராக வலம் வருகிறார்.
    • இவர் ராஷ்மிகாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

    தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் பல இளம் ரசிகைகளை கவர்ந்து. இப்படத்தில் ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.


    இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா சமூக வலைதளப் பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதில், ஒரு ஆணும், பெண்ணும் கைக்கோர்த்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'நிறைய நடக்கிறது. ஆனால், இது உண்மையில் சிறப்பானது. விரைவில் அறிவிக்கிறேன்' என்று விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டுள்ளார்.


    விஜய் தேவரகொண்டா பதிவு

    இதற்கு விஜய் தேவரகொண்டா தன் காதல் குறித்து அறிவிக்கவுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், அது ராஷ்மிகாவா? இல்லை சமந்தாவா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 'குஷி' திரைப்படத்தின் போது சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் நெருக்கமாக பழகியதாக தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஜய் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.


    இந்நிலையில், நடிகர் விஜய், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான  நிலையத்தில் உள்ள புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதாவது, 'தளபதி 68' படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் 3 டி விஎப்எக்ஸ் தொழில் நுட்பத்தில் விஜய்யின் தோற்றம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணிக்காக விஜய், வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ஜவான் போஸ்டர்

    இந்நிலையில், 'ஜவான்' படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா இன்று (ஆகஸ்ட் 30) சென்னை, சாய்ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவல் தொடர்பாக நடிகை வரலட்சுமி விளக்கம்.
    • கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.

    போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.

    ஆனால், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    கேரளாவின் விழிஞ்சத்தில் போதைப்பொருள், ஆயுதம் கடத்தல் வழக்கில் கைதான ஆதிலிங்கம், 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு எங்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. என்.ஐ.ஏ சம்மன் அனுப்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டு, படத்தை முடிக்கவில்லை என குற்றச்சாட்டு.
    • நடிகர் சிம்புவுக்கு வேறு படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் மனு.

    நடிகர் சிம்பு செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும், அளிக்கவில்லை எனில், அவர் மற்ற படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக 2021-ம் ஆண்டு "கொரோனா குமார்" என்ற படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ரூ. 9.5 கோடி சம்பளமாக பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதைத் தொடர்ந்து ரூ. 4.5 கோடி வரையிலான தொகையை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறது.

     

    எனினும், "கொரோனா குமார்" படத்தில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு ரூ. 1 கோடி முன்பணமாக வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. அதன்படி நடிகர் சிம்பு "கொரோனா குமார்" படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடித்து வருவதால், வேல்ஸ் நிறுவனம் நடிகர் சிம்புவுக்கு எதிராக மனுதாக்கல் செய்து இருந்தது.

    இந்த மனு மீதான விசாரணையில் தான், சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சிம்பு ரூ. 1 கோடிக்கான உத்தரவாதம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

    • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இறுகப்பற்று'.
    • இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


    இறுகப்பற்று போஸ்டர்

    இந்நிலையில், 'இறுகப்பற்று' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை விக்ரம் பிரபு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • இவர் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    நடிகர் விஷால் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவருக்கு திரை உலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் தாய்-சேய் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப் பட்டது. முன்னதாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அனைவருக்கும் உணவு வழங்கினார். அங்கு உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியதுடன் அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.



    தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். 45 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் மூலம் ரஜினி மக்களை மகிழ்வித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போதும் சாதனை படைத்து வருகிறார். 4 பேர் அமர்ந்து கொண்டு விருதாளர்களை தேர்வு செய்வது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களும் ரசிகர்களும் தரும் ஆதரவே மகத்தான விருது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×