search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
    • இவர்கள் தயாரிப்பில் சமீபத்தில் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படம் வெளியானது.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.


    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருந்தார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த இப்படம் ஜூன் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    இந்நிலையில், தயாரிப்பாளர் சாக்ஷி டோனி தன் அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாகவும் தனது இரண்டாவது படைப்பை தரமானதாக உருவாக்கும் ஆர்வத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.
    • இவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

    நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார். இதையடுத்து ஜேசன் சஞ்சய் விரைவில் படம் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.


    இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அதாவது, சஞ்சய் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • பிக்பாஸ் 7-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
    • இந்த சீசனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கவுள்ளார்.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதையடுத்து ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார்.


    இந்நிலையில், பிக்பாஸ் 7-வது சீசனின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





    • 'ஜெய்பீம்', 'கர்ணன்', 'சார்ப்பட்டா பரம்பரை' போன்ற படங்களுக்கு விருது கிடைக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு தேசிய விருது பட்டியல் ஏமாற்றத்தை கொடுத்தது.
    • இதனால் நெட்டிசன்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க 'ஜெய்பீம்', 'கர்ணன்', 'சார்ப்பட்டா பரம்பரை' போன்ற படங்களுக்கு விருது கிடைக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு தேசிய விருது பட்டியல் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் நெட்டிசன்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகானிடம் தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது குறைவாக அறிவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "தமிழ் திரைப்படங்களுக்கு தான் தேசிய விருது அதிகம் அறிவிக்கப்பட வேண்டும். எல்லா துறையிலும் தமிழை புறக்கணிப்பது போன்று தான் இங்கும் நடந்துள்ளது. மத்திய அரசாங்கத்தில் தமிழ் மக்கள் இருப்பது போன்று இருந்தால் விருதுகள் கிடைக்கும். " என்று பேசினார்.

    மேலும், 'தி காஷ்மீ பைல்ஸ்' திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, " கொடுப்பவன் பைத்தியக்காரன். சினிமாவை நேசிப்பவர்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள்" என்று பேசினார்.

    • அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’.
    • 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன், காதல் அழிவதில்லை படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.
    • ஜெகதீஸ்வரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவருக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர். அனைவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனத்தில் வசித்து வருகின்றனர். இவரது இரண்டாவது சகோதரர் ஜெகதீஸ்வரன் (வயது 52). ஜவுளி வியாபாரம் பார்த்து வந்த இவர், காதல் அழிவதில்லை படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக பல்வேறு நோய் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சையும் பெற்றார். ஆனாலும் நோயின் பிடியில் இருந்து அவர் விடுபடவில்லை. தொடர்ந்து ஜவுளி வியாபாரத்தையும் கவனிக்க முடியாமல் வீட்டில் முடங்கினார்.

    இதற்கிடையே மதுரையை அடுத்த விரகனூரை அடுத்த ஐராவதநல்லூரில் மந்தையம்மன் கோவில் பின்புறமுள்ள ஒரு குடிசை வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் இன்று காலை காலமானார். இதுபற்றிய தகவல் நடிகர் வடிவேலுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலமான ஜெகதீஸ்வரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். மறைந்த ஜெகதீஸ்வரன் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.


    'ஜெயிலர்' திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.


    இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹுக்கும்' பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.





    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
    • செல்வமணிக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அருண் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தனர். அதில் பிரபல பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் இவர்கள் இருவருக்கும் எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    அவர் மறைவிற்கு பிறகு போத்ராவின் மகன் இந்த வழக்கை நடத்தி வருகிறார். இந்த வழக்கின் விசாரணைக்காக இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆஜராகவில்லை. அதுமட்டுமல்லாமல் அவரின் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகாததால் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

    • நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'கங்குவா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து இப்படத்தின் தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டே வருகிறது.


    இந்நிலையில், 'கங்குவா' திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கங்குவா படத்தின் இரண்டு சீன்களை பார்த்தேன், அற்புதமாக இருந்தது. சிறுத்தை சிவா வெறித்தனமாக வேலை பார்த்து வருகிறார். சூர்யா வேற லெவல்ல நடித்திருக்கிறார். சினிமா ரசிகர்களுக்கு 'கங்குவா' மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று கூறினார்.

    • 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தவர் அருண் வீரப்பன்.
    • 90 வயதான அருண் வீரப்பன் வயது மூப்பு காரணமாக காலமானார்.

    பழம் பெரும் தயாரிப்பாளரான ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளை அருண் வீரப்பன் வயது மூப்பு காரணமாக காலமானார்.

    ஏ.வி.எம். தயாரித்த படங்களின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய அருண் வீரப்பன் 100-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். இவர் 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் அப்படத்தில் நடிகர் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார்.

    90 வயதான அருண் வீரப்பன் நேற்று வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அருண் வீரப்பன் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன்.

    நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி" என்று பதிவிட்டுள்ளார்.





    • பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளர் ஆனார்.
    • இயக்குநர் எலன் உடன் யுவன் சங்கர் ராஜா புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா யு.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் பியார் பிரேமா காதல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குநர் எலன் இயக்கி இருந்தார்.

    இந்த நிலையில், பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் கவின் நடிக்க இருக்கிறார். டாடா படத்தைத் தொடர்ந்து கவின் நடிக்கும் இந்த படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. 

    • இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் க்யூட்டான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    • நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, அக்டோபர் மாதம் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர்.

    உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


     இந்நிலையில், இன்று தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் க்யூட்டான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ×