search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அமல் நீரட் இயக்கத்தில் பகத் பாசில் - ஃபர்ஸ்ட் லுக் வைரல்
    X

    அமல் நீரட் இயக்கத்தில் பகத் பாசில் - ஃபர்ஸ்ட் லுக் வைரல்

    • ஃபகத் பாசில் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வௌியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு பொகெயின்வில்லா என தலைப்பிடப்படுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர்.

    மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அதில் இவர்தான் ஹீரோ. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

    தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இப்படத்தில் ரத்னவேலு என்ற கதாபாத்திரம் ஹீரோ கதாபாத்திரத்திற்கு நிகராக பேசப்பட்டது.

    இந்நிலையில் ஃபகத் பாசில் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வௌியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார். மலையாளத்தில் மமூட்டி நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான பீஷ்மா பர்வம் திரைப்படத்தை அமல் நீரட் இயக்கினார்.

    அதற்கடுத்து இரண்டு வருடங்கள் கழித்து இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு பொகெயின்வில்லா என தலைப்பிடப்படுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் ஃபஹத் ஃபாசில் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சிகப்பு நிறத்தில் அமைந்து இருக்கும் இப்படத்தின் போஸ்டர் ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை பிரபல நாவல் எழுத்தாளரான லஜோ ஜோஸ், அமல் நீரடுடன் இணைந்து எழுதியுள்ளனர். ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவை மேற்கொல்ள, சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×