என் மலர்
சினிமா செய்திகள்

பிரபல நகைச்சுவை நடிகருக்கு கொலை மிரட்டல் - காவல் துறை வழக்குப் பதிவு
- ஏற்கனவே சில பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
- கொலை மிரட்டலை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளர்.
பிரபல நகைச்சுவை நடிகரும், தொலைகாட்சி தொகுப்பாளருமான கபில் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை மிரட்டல் பாகிஸ்தானில் இருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. முன்னதாக ராஜ்பால் யாதவ், சுகந்தா மிஸ்ரா மற்றும் ரெமோ டி சோசா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் தற்போது கபில் சர்மாவும் இணைந்துள்ளார். கொலை மிரட்டல் தொடர்பாக அம்போலி காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது பி.என்.எஸ். சட்டம் பிரிவு 351 (3) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொலை மிரட்டல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை துவங்கி, மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய தகவல்களின் படி கொலை மிரட்டல் மின்னஞ்சல் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த மின்னஞ்சலில், "உங்கள் சமீபத்திய செயல்பாடுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது முக்கியம் என்று நம்புகிறோம். இது விளம்பரத்திற்காகவோ அல்லது உங்களை துன்புறுத்தும் முயற்சியோ இல்லை. இந்த செய்தியை மிகுந்த தீவிரமாகவும், ரகசியமாகவும் அணுக கேட்டுக்கொள்கிறோம்" என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இதில் அனுப்புநர் 'பிஷ்ணு' என்று கையெழுத்திடப்பட்டுள்ளது.