என் மலர்
சினிமா செய்திகள்

சியான் 62 : விக்ரமின் 2 தோற்றம் - புது அப்டேட்
- 'பிளாஷ்பேக்' போர்ஷனில் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார்
- இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது.
தமிழ் பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விக்ரம் திகழ்ந்து வருகிறார் . 'சேது' படம் மூலம் புகழ் பெற்ற அவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். இதில் 'தில்', தூள், சாமி, அந்நியன் படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றன.
தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் 'தங்கலான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
இந்நிலையில், 'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சியான் 62' படத்தை ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் டைட்டில் 'ப்ரோமோ' விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17- ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இதில் விக்ரம் தாடியுடன் கூடிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று உள்ளது. இதுதவிர மேலும் ஒரு தோற்றத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் 'பிளாஷ்பேக்' போர்ஷனில் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.