என் மலர்
சினிமா செய்திகள்

டொமினிக் டு பசூக்கா.. அடுத்தடுத்து ரிலீசாகும் மம்மூட்டி படங்கள்..
- கவுதம் வாசுதேவ் மேனன் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படம் ஒன்றை இயக்கி உள்ளார்.
- ஆண்டனி இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை முன்னணியாக கொண்டு கவுதம் வாசுதேவ் மேனன் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படம் ஒன்றை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் பிரபல நடிகர் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க விஷ்ணு ஆர் தேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.ஆண்டனி இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.
இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. படம் ஜனவரி 23 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இதற்கிடையே மலையாளத்தில் மம்மூட்டி ராணுவ அதிகாரியாக நடித்துள்ள 'பசூக்கா' என்ற திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினதன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குனரான டீனோ டென்னிஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். காயத்ரி ஐயர் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மிதுன் முகந்தன் இசையமைத்துள்ளார். மேலும், நிமிஷ் ரவி மற்றும் ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
அடுத்தடுத்து மம்முட்டி படங்கள் ரிலீஸ் ஆவது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக மம்முட்டி நடிப்பில் வெளியான டர்போ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்