search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அரசியல், ஆக்சனுடன் தீ தெறிக்கும் எம்புரான் டிரெய்லர் வெளியீடு
    X

    அரசியல், ஆக்சனுடன் தீ தெறிக்கும் எம்புரான் டிரெய்லர் வெளியீடு

    • இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது.
    • இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

    இந்நிலையில் இந்த படத்திற்கான டிரெய்லர் இன்று 5 மொழிகளிலும் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3.50 நிமிடம் ஓடும் இந்த ட்ரெய்லரில் மோகன்லால் எப்படிப்பட்டவர் என்பதையும், முதல்வராகப் பொறுப்பேற்ற டோவினோ தாமஸின் அரசியலையும் இந்த பாகம் பேசும் எனத் தெரிகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அரசியலை மையமாக வைத்து உருவான இப்படம் மலையாளத்தின் முதல் ரூ.200 கோடி படம் என்ற பெருமையைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×