என் மலர்
சினிமா செய்திகள்

'Officer On Duty' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளை வெளியாகிறது
- பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது.
- ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். குஞ்சக்கோ போபன் உடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை கன்னூர் ஸ்குவாட் புகழ் ராபி வர்கீஸ் ரா, ஜேக்ஸ் பிஜாயின் இசை, மற்றும் படத்தொகுப்பை சமன் சாக்கோ மேற்கொண்டுள்ளனர்.
மலையாளத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'ஆபிஸர் ஆன் டியூட்டி' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ஓடிடியில் வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.