என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராஷ்மிகாவுக்கு ஜோடி.. வயது வித்தியாசம் பற்றிய கேள்விக்கு சல்மான் கான் அளித்த டைமிங் பதில்
    X

    ராஷ்மிகாவுக்கு ஜோடி.. வயது வித்தியாசம் பற்றிய கேள்விக்கு சல்மான் கான் அளித்த டைமிங் பதில்

    • நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.

    மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது.

    இதனை தொடர்ந்து, இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்று இருந்தனர்.

    அப்போது இந்நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர் சல்மான் கானிடம், உங்களுக்கும் ராஷ்மிகாவுக்கும் 31 வயது வித்தியாசம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு சல்மான் பதிலளித்தபோது, இதில் கதாநாயகிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, அவரது தந்தைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாதபோது, உனக்கு என்ன தம்பி பிரச்சனை? நடிப்பில் ராஷ்மிகாவின் அர்பணிப்பை பார்க்கும்போது எனது குழந்தை பருவம் நினைவுக்கு வரும். அந்தளவு அர்ப்பணிப்புடன் செயல்படுவார் என்று கூறினார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×