என் மலர்
சினிமா செய்திகள்
குடும்பத்தோடு வீட்டை விட்டு ஓடும் சசிகுமார் - நகைச்சுவையான `டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
- இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
- படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் தற்பொழுது அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்தின் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இந்த டைட்டில் டீசர் வீடியோ மிகவும் காமெடியாக அமைந்துள்ளது. சிம்ரன் மற்றும் சசிகுமாரின் குடும்பம் ஒரு இலங்கை சார்ந்த குடும்பமாக இருக்கிறது. திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு புதுவித கதைக்களத்துடன் காமெடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.