என் மலர்
சினிமா செய்திகள்
பாலியல் வன்கொடுமை: நடன இயக்குனர் மீது வழக்குப் பதிவு
திருப்பதி:
ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருப்பவர் 21 வயது இளம்பெண். இவர் திரைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் புகார் செய்தார்.
அதில் நடன இயக்குனர் ஜானி பாஷாவிடம் நான் நடன கலைஞராக வேலை செய்து வந்தேன். அப்போது சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்த படப்பிடிப்பின் போது என்னை ஓட்டல்களில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் நர்சிங்கியில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்தார் என கூறியிருந்தார்.
இளம்பெண் நர்சிங்கி பகுதியில் வசிப்பதால் புகாரை நர்சிங்கி போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடன இயக்குனர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடன கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்பட துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.