search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மலையாள திரையுலகை தொடர்ந்து தமிழ் சினிமாவில் குவியும் பாலியல் புகார்கள்
    X

    மலையாள திரையுலகை தொடர்ந்து தமிழ் சினிமாவில் குவியும் பாலியல் புகார்கள்

    • ஏராளமான நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவங்களை வெளிப்படுத்தினர்.
    • ஏற்கனவே 2019-ல் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரை உலகம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திரை உலகில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திய பாலியல் புகாரால் மலையாள நடிகர், நடிகைகளின் அமைப்பான 'அம்மா' அமைப்பு நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ஏராளமான நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவங்களை வெளிப்படுத்தினர்.

    மலையாள திரை உலகத்தை போன்று தமிழ் திரை உலகத்திலும் பாலியல் சம்பவங்கள் நடந்ததாக நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சில நடிகைகள் வெளிப்படுத்தி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழ் திரை உலகில் நடக்கும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. குழுவின் தலைவராக நடிகை ரோகிணி நியமனம் செய்யப்பட்டார்.

    ஏற்கனவே 2019-ல் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் பாலியல் சம்பவங்களில் யாரேனும் பாதிக்கப்பட்டால் இந்த குழுவில் தாராளமாக புகார் செய்யலாம். புகார் தெரிவிப்பதற்கான தனி மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

    புகார்கள் விசாரிக்கப் பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் 5 ஆண்டுகள் சினிமா தொழிலில் இருந்து தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    மேலும் புகார் பற்றி வெளியில் பேசாமல் குழுவில் புகார் அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

    இதுபற்றி விசாரணை குழுவின் தலைவரான ரோகிணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பலர் குழுவில் புகார் அளித்து வருகிறார்கள். இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

    புகார் கொடுத்தவர்களின் விவரங்களை வெளியே சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. பாலியலால் பாதிக்கப்பட்டோர் தாராளமாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×