என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பங்குனி மாத தேய்பிறை பிரதோஷம் - திருவண்ணாமலை கோவிலில் கணவருடன் கிரிவலம் மேற்கொண்ட சினேகா
    X

    பங்குனி மாத தேய்பிறை பிரதோஷம் - திருவண்ணாமலை கோவிலில் கணவருடன் கிரிவலம் மேற்கொண்ட சினேகா

    • எளிமையாக பக்தர்களுடன் கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.
    • கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவைக் கண்ட ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    தமிழ் சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். அந்த வகையில் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது.

    தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயாகியாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி, நேற்றிரவு தனது கணவருடன் கிரிவலம் மேற்கொண்டார். எளிமையாக பக்தர்களுடன் கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.

    கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவைக் கண்ட ரசிகர்கள் இவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×