என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குனர் என நினைத்து ரசிகருக்கு ரிப்ளை செய்த கமல்.. அப்படி என்ன சொன்னார்..?
    X

    கமல்ஹாசன்

    இயக்குனர் என நினைத்து ரசிகருக்கு ரிப்ளை செய்த கமல்.. அப்படி என்ன சொன்னார்..?

    • பிக்பாஸ் 6-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஷாந்தி மற்றும் அசல் எலிமினேட் செய்யப்பட்டார். ஜிபி முத்து தாமாக முன்வந்து வெளியேறினார். இப்படி பரப்பரப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி 24 நாட்களை எட்டியுள்ளது. கடந்த வாரம் தொகுப்பாளர் கமல்ஹாசன் சகபோட்டியாளர்களை உடல் மொழி கேலி செய்த அசீமையும் மணிகண்டனையும் கண்டித்து பேசினார். இதற்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர்.


    கமல்ஹாசன்

    இந்நிலையில், ரசிகர் ஒருவர், "கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உடல்மொழி கேலி செய்த அசீம் மற்றும் மணிகண்டனை கமல்ஹாசன் கையாண்ட விதம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைந்துள்ளது. அதோடு நிறுத்தாமல், ஏடிகேவை அனைவரையும் போல நடித்து காண்பிக்க செய்து வித்தியாசத்தை விளக்கினார்" என்று கமலை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


    கமல்ஹாசன்

    இந்த பதிவிற்கு பதிலளித்த கமல், "நன்றி மவுலி அநாகரிகமோ, அவமானமோ இல்லாமல் நகைச்சுவை செய்யத் தூண்டிய தலைவர்களில் நீங்களும் ஒருவர். உங்களைபோல் பெருமைமிகுந்த மனிதர்களின் வரிசையில் நாங்களும்" என பதிலளித்தார்.


    கமல்ஹாசன்

    கமலின் பதிவை பார்த்த ரசிகர், "தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது போல் தெரிகிறது. ஆனால் என்னுடைய கருத்துகள் தங்களை வந்தடைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒன்று கூறுகிறேன், திரைதுறையில் மாற்றுப் பாலினத்தவர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


    கமல்ஹாசன்

    தொடர்ந்து, நடிகர் கமல் "இயக்குனரும் மூத்த நடிகருமான மௌலி என தவறுதலாக நினைத்துவிட்டேன். இருந்தாலும் தங்களுடைய பாராட்டுக்கு நன்றி!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.


    Next Story
    ×