என் மலர்
சினிமா செய்திகள்

குடும்பத்துடன் சிவகார்த்திகேயன்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்
- நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழு இப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டது. மேலும், இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹாரமூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது ரசிகர்கள் செல்பி எடுக்க ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.