என் மலர்
சினிமா செய்திகள்

ஜவான் வசூலை முறியடிக்குமா அனிமல்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
- இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அனிமல் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, "அனிமல்" திரைப்படம் ஐந்து நாட்களில் ரூ. 481 கோடியே வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடியை வசூல் செய்ததைத் தொடர்ந்து 'அனிமல்' திரைப்படமும் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
He is the Box Office #Animal??#AnimalHuntBegins #BloodyBlockbusterAnimal #AnimalInCinemasNow #AnimalTheFilm #AnimalHuntBegins
— T-Series (@TSeries) December 6, 2023
Book Your Tickets ?️ https://t.co/QvCXnEetUb#AnimalInCinemasNow #AnimalTheFilm @AnimalTheFilm @AnilKapoor #RanbirKapoor @iamRashmika… pic.twitter.com/uzYd6NsTkc