என் மலர்
சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் அப்டேட் கொடுத்த யுவன்
- இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் 'ஃபர்ஹானா'.
- இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஃபர்ஹானா
மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
ஃபர்ஹானா
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஃபர்ஹானா' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஓர் காதல் கனா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.