என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜித்தை வைத்து இந்த மாதிரியான படம் பண்ணுவேன் - லோகேஷ் கனகராஜ்
    X

    அஜித்தை வைத்து இந்த மாதிரியான படம் பண்ணுவேன் - லோகேஷ் கனகராஜ்

    • மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
    • தற்போது லோகேஷ் கோவை மாநகர காவல்துறை மற்றும் ரோட்டரி டெக்ஸ்சிட்டி இணைந்து நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    2017-ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்தார். இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். இப்படம் நல்ல வசூல் சாதனை படத்தது. தற்போது விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இதனிடையே லோகேஷ் கனகராஜ் திரைத்துறை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், கல்லூரி நிகழ்ச்சிகளிலும் விருந்தினராக பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ரோட்டரி டெக்ஸ்சிட்டி இணைந்து நடத்திய ஒரு நிகழ்ச்சியில் லோகேஷ் கலந்து கொண்டுள்ளார். அதில் மாணவர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    தீனா - அஜித்

    அப்போது மாணவர் ஒருவர், "கமல வச்சு படம் பண்ணிட்டீங்க... ரஜினிக்கு தளபதி மாறி படம் பண்ணுவேன்னு சொன்னீங்க. அஜித்துக்கு எந்த மாதிரியான படம் பண்ணுவீங்க?" என கேள்வி எழுப்பினார். அதற்கு லோகேஷ் கனகராஜ், "தீனா படம் போல்" எனப் பதிலளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி

    வருகிறது.

    Next Story
    ×