என் மலர்
சினிமா செய்திகள்

துணிவு
'துணிவு' படத்தின் உரிமையை கைப்பற்றிய லைகா நிறுவனம்
- அஜித் நடிக்கும் 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
அஜித் - சமுத்திரகனி
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
துணிவு போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துணிவு' திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
We are extremely delighted 🤩 on bagging the overseas theatrical rights of #THUNIVU 💥 produced by @BoneyKapoor & @ZeeStudios_
— Lyca Productions (@LycaProductions) November 19, 2022
It's always a pleasure 😌 to associate with our dear #AjithKumar 😎#ThunivuPongal 💥 #NoGutsNoGlory 💪🏻✨ #HVinoth @BayViewProjOffl @mynameisraahul pic.twitter.com/eFzZnPLJlf