என் மலர்
சினிமா செய்திகள்

சுஷாந்த் சிங் ராஜ்புத்
டி-ஷர்ட்டில் இடம் பெற்ற சுஷாந்த் சிங் புகைப்படம்.. சர்சையில் சிக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்..
- இந்திய திரையுலகின் முன்னணி பாலிவுட் நடிகராக விளங்கியவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
- இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்தார். இதை தொடர்ந்து பாலிவுட் சினிமா துறையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி போதைப்பொருள் தடுப்பு பிரிவி விசாரணையை தொடங்கி தற்போது வரை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை பல முக்கிய பிரபலங்கள் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் இன்றுமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாய் இருக்கிறது. இந்நிலையில், சுஷாந்த் சிங் புகைப்படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நடிகர் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் டி-ஷர்ட்டை விற்பனை செய்துள்ளது. அந்த புகைப்படத்தில் "Depression is like drowning" (மன அழுத்தம் என்பது நீரில் மூழ்குவதைப் போன்றது) என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் டி- ஷர்ட்
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சுஷாந்த் சிங்கை மன அழுத்தத்தை வைத்து அடையாளப்படுத்துவது தவறு என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இது குறித்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல், பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் விற்பனை செய்யப்பட்ட டி-ஷர்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.