search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சில வேளைகளில் பணத்தை மீறி எடுக்கும் முடிவுகள் உயர்வுக்கு காரணமாகும் - பார்த்திபன் பதிவு
    X

    பார்த்திபன்

    சில வேளைகளில் பணத்தை மீறி எடுக்கும் முடிவுகள் உயர்வுக்கு காரணமாகும் - பார்த்திபன் பதிவு

    • இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பண்முகத்தன்மை கொண்டவர் பார்த்திபன்.
    • பார்த்திபன் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    1989ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான பொண்டாட்டி தேவை, ஹவுஸ் ஃபுல், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாது நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர்.


    பார்த்திபன்

    இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பார்த்திபன்

    பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், 'நிழல் தேடும் நெஞ்சங்கள்'என்ற படத்தில் நடிகர் பானுசந்தருக்கு பார்த்திபன் டப்பிங் கொடுத்த வீடியோவை பகிர்ந்து, இந்தக் குரல் யாரெனத் தெரிகிறதா? என்று பதிவிட்டிருந்தார்.




    இந்நிலையில் பார்த்திபன் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், பொருள் for my குரல்! 'நிழல் தேடும் நெஞ்சங்கள்'என்ற படத்தில் திரு. பானுசந்தருக்கு நான் குரல் கொடுத்ததற்கு ஒரு 1500 கொடுத்தார்கள். இப்படி மாதம் some of ரூ6000 சம்பாதிக்கும் சமயத்தில் என் குருவிடம் ரூ300 பெற்று தொழில் கற்க சென்றதால் இன்று இந்நல்ல நிலையில் உள்ளேன். இல்லையேல் highly paid dubbing artist or junior artist ஆக இருந்திருக்க வாய்ப்புண்டு. சில வேளைகளில் பணத்தை மீறி எடுக்கும் சில முடிவுகள் உயர்வுக்கு காரணமாகும் என்று பதிவிட்டுள்ளார்.



    Next Story
    ×